மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டிவிட்டது. அது மட்டுமா பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை என அனைத்தும் உயர்ந்துவிட்டது. இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதால் பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் போன்ற குறியீடுகளும் மந்தமாக இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறது சில மியூச்சுவல் ஃபண்டுகள். இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் முதலீடாளர்களுக்கு சூப்பரான வருமானத்தை வழங்கிய 5 மிட் கேப் ஃபண்டுகள் குறித்து தான் இந்தப் பதிவில் பரக்கப் போகிறோம்.
பெரிய நிறுவனங்களின் பங்குகளே டல் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த மாத இறுதியில் நிஃப்டி மிட் கேப் 150 குறியீடு 52 வார உச்சத்தை தொட்டது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியதிலிருந்து நிஃப்டி மிட் கேப் 150 குறியீடு 3.61% வரை அதிகரித்திருக்கிறது. இதனால் பல முதலீட்டாளர்கள் தற்போது மிட் கேப் ஃபண்டுகளின் பக்கம் திரும்பியுள்ளனர்.
அசோசியேசன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தரவுகளின் படி உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் சுமார் ரூ.6,551.40 கோடியை மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் பெரிய நிறுவனங்களின் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீடு 15.3 சதவீதம் வரை குறைந்து ரூ.2,525 கோடியாக மாறியுள்ளது.

2026-ஆம் ஆண்டில் சில மிட் கேப் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு 10% வரை வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளன. அது எந்தெந்த ஃபண்டுகள் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
HSBC மிட் கேப் ஃபண்ட்: இந்த ஃபண்டு 2026-ஆம் ஆண்டின் முன்னணி மிட் கேப் ஃபண்டாக இருக்கிறது. இந்த ஃபண்டின் ஒரு யூனிட் விலை ரூ.441.35. முதலீட்டாளர்கள் சுமார் ரூ.13,400 கோடியை முதலீடு செய்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஃபண்டை நிர்வகிப்பதற்கான எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 3.6 சதவீதம். இந்த விகிதம் பிற மிட் கேப் ஃபண்டுகளை விட சற்று அதிகம் என்றே சொல்லலாம். HSBC ஃபண்ட் கடந்த ஓராண்டில் மட்டும் 18 சதவீதமும், மூன்றாண்டுகளில் 14 சதவீதமும், 10 ஆண்டுகளில் 410 சதவீதமும் லாபத்தைக் கொடுத்துள்ளது.
ICICI புருடென்ஷியல் மிட்கேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட் இரண்டாவது முன்னணி மிட் கேப் ஃபண்டாகும். ICICI புருடென்ஷியல் ஃபண்டின் ஒரு யூனிட் விலை ரூ.332.28 மற்றும் இதன் கீழ் முதலீட்டாளர்கள் ரூ.7,500 கோடியை முதலீடு செய்திருக்கின்றனர். HSBC மிட் கேப் ஃபண்டைக் காட்டிலும் ICICI ஃபண்டின் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவு. அதாவது இதை நிர்வகிப்பதற்கான செலவு 1.53% மட்டுமே. இந்த மிட் கேப் ஃபண்டும் ஒரு வருடத்தில் 14 சதவீதம், 3 வருடங்களில் 96 சதவீதம் மற்றும் 10 வருடங்களில் 41% ரிட்டன்ஸை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.
JM மிட்கேப் ஃபண்ட்: 2026-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இன்றைய நாள் வரை இந்த ஒரு ஃபண்ட 4.6 ஒரு சதவீத லாபத்தை வழங்கியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்ன தெரியுமா? சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மிட் கேப் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. இதன் கீழ் தற்போது முதலீட்டாளர்கள் ரூ.1,160 கோடியை முதலீடு செய்திருக்கின்றனர். JM ஃபண்டின் ஒரு யூனிட் விலை 19.87 ரூபாய். இதன் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 2.31 சதவீதமாகும். கடந்த ஒரு வருடத்தில் 6 சதவீதமும், 2 வருடங்களில் 17 சதவீதமும், 3 வருடங்களில் 82 சதவீதமும் வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது.
குவாண்ட் மிட்கேப் ஃபண்ட்: வருமானத்தை வழங்கியதன் அடிப்படையில் குவாண்ட் ஃபண்ட் நான்காவது இடத்தில் இருக்கிறது. 2026-ஆம் ஆண்டில் 4.3 சதவீத லாபத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்டின் ஒரு யூனிட் விலை ரூ.218.06. தற்போது வரை முதலீட்டாளர்கள் சுமார் 7,900 கோடியை இதன் கீழ் வைத்திருக்கின்றனர். கடந்த 2 வருடங்களில் குவாண்ட் ஃபண்ட் சிறந்த வருமானத்தை வழங்கத் தவறினாலும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளது. 3 வருடங்களில் சுமார் 60 சதவீதமும், 10 வருடங்களில் 375 சதவீதமும் லாபத்தைத் தந்துள்ளது.
மஹிந்திரா மனுலைஃப் மிட்கேப் ஃபண்ட்: ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கும் இந்த ஃபண்டு 2026-ஆம் ஆண்டில் 4.1 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இதன் கீழ் மொத்தம் ரூ.4600 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த ஃபண்டு 8 சதவீதமும், 3 வருடத்தில் 84 சதவீதமும், 7 வருடத்தில் 272 சதவீதமும் வருமானத்தை வழங்கியிருக்கிறது.
மிட்கேப் ஃபண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதற்கு காரணம் அந்தந்த நிறுவனங்களின் லாப விகிதம் தான் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் வெறும் தகவல் நோக்கங்களுக்காகவும், கடந்த சில வருடங்களில் எந்த மிட் கேப் ஃபண்டுகள் சிறந்த வருமானத்தை வழங்கி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே, ஒரு ஃபண்டின் கடந்த கால பெர்ஃபார்மன்ஸ் வைத்து அது இனிவரும் காலத்திலும் இதே போன்ற வருவாயை தரும் என்று சொல்லிவிட முடியாது. எனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சந்தையை ஆராய்ந்து, உங்கள் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும். இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications