வங்கி கடன்கள் பெறுவதற்கு முக்கியமாக வங்கிகள் எதிர்பார்ப்பது நல்ல கிரெடிட் ஸ்கோர்களைத் தான். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும் நபர்களுக்கு கடன் தரலாமா? வேண்டாமா? என்று வங்கிகள் யோசித்து முடிவு எடுக்கும். இந்தியாவில் சிலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதன் காரணமாக குறைந்த கிரெடிட் ஸ்கோருடன் போராடி வருகின்றனர்.
குறைந்த கிரெடிட் ஸ்கோர் நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போது.. உங்கள் விண்ணப்பத்தினை வங்கிகள் நிராகரிப்பதற்கு காரணமாகலாம். எனவே இந்த பதிவில் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோரை எப்படி அதிகரிப்பது? என்ற விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கான எளிய வழிகள்:
சரியான நேரத்தில் பணம் செலுத்துதல்: கடனாக இருந்தாலும் சரி, கிரெடிட் கார்டு EMI-களாக இருந்தாலும் சரி, திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படாத வகையில் திருப்பிச் செலுத்துங்கள்.
கிரெடிட் கார்டு கடன்கள் ஆனாலும் சரி.. பிற கடன்கள் ஆனாலும் சரி.. நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் ரிமைண்டர்களை அமைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். இல்லையேல் ஆட்டோமேட்டிக் பேமெண்ட்களை செலுத்துங்கள். இதன் மூலம் சரியான நேரத்தில் பணம் செலுத்தப்பட்டு கிரெடிட் ஸ்கோர் சீராக இருக்கும்.
உங்கள் வங்கி அறிக்கைகளை தவறாமல் சரி பாருங்கள்: உங்கள் வங்கி அறிக்கைகளை தவறாமல் சரி பார்ப்பது உங்கள் நிதி நலனுக்கு மட்டுமல்லாமல் கிரெடிட் ஸ்கோரையும் நல்ல முறையில் வைத்திருக்க உதவும். மேலும் ஏதேனும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடந்திருப்பது போல தோன்றினால் அவற்றை உடனே புகார் அளியுங்கள்.
கடன் வரம்பை அதிகப்படுத்தாதீர்கள்: உங்கள் கடன் வரம்பை முழுவதுமாக தீர்த்து விட்டு மீண்டும் கிரெடிட் லிமிட்டை அதிகரிக்க விண்ணப்பிப்பது பொறுப்பில்லாமல் நீங்கள் செலவு செய்வதை குறிக்கிறது. இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையலாம். எனவே கட்டுக்குள் செலவு செய்து பழகுங்கள்.
பல கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்தவும்: சிலர் ஒரு கிரெடிட் கார்டு வைத்துக் கொண்டே இன்னொரு கிரெடிட் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள். இதுபோன்ற நடத்தையின் காரணமாகவும் கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.
கடன் பயன்பாட்டு விகிதத்தை குறைக்கவும் (Credit Utilization Ratio): கிரெடிட் கார்டு வரம்பில் அதிகளவு பயன்படுத்துவது சிபில் ஸ்கோரை பாதிக்கும். உங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டு விகிதம் 30% க்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications