சென்னை: நம்மில் பலர் எவ்வளவு முயற்சித்தாலும், பணத்தை சேமிக்க முடியவில்லை என்று நினைத்திருப்போம். அதிலும் குறிப்பாக மாத கடைசிக்கு முன்பே பலரின் வங்கி கணக்குகள் பூஜ்ஜியத்தில் இருக்கும். எனவே இந்தப் பதிவில் உங்களுடைய பணத்தை சேமிக்கும் 5 வழிகளைக் குறித்துப் பார்ப்போம்.
நீங்கள் பணம் செலவழிக்கும் குணம் கொண்டவராகவும், சேமிப்பில் அதிக கவனம் இல்லாதவராகவும் இருந்தால், உங்களுடைய வருமானம் எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் உங்களால் சரிவர பணத்தைச் சேமிக்க முடியாது. உங்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்க விரும்பினால் சேமிப்பு மிகவும் முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய சேமிப்பை, நல்ல வழியில் முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே உங்களால் ஒரு பெரிய நிதி இலக்கை அடைய முடியும். இது நீங்கள் ஓய்வு பெறும்போது மட்டுமல்லாமல் உங்களுடைய நிதி நலனை பாதுகாக்கவும் உதவும்.
நீங்கள் ஒரு, மாத சம்பளக்காரராக மற்றும் மாத இறுதிக்குள் சம்பளம் மறைந்து போகும் நபர்களில் ஒருவராக இருந்தால், இன்று முதல் சில டிப்ஸ்களைப் பயன்படுத்துங்கள். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கவும்: இன்றைய தலைமுறையினர் ஒரு பட்ஜெட் தயாரித்து, அதன்படி செலவு செய்வதைச் சலிப்பாக கருதுகின்றனர். ஆனால், முந்தைய காலங்களில் மக்கள் பட்ஜெட் தயாரித்த பிறகு மட்டுமே செலவு செய்தார்கள். இதனால் சிறிய வருமானத்தில் கூட நிறைய சேமிக்க முடிந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை, இந்திய குடும்பங்களில் சேமிப்பின் விகிதம் குறைந்துள்ளது என்று ஆர்பிஐ சமீபத்தில் கூறியுள்ளது.
ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பும் அல்லது வீண் செலவு செய்வதற்கு முன்பும் ஒன்றுக்கு இருமுறை உங்களுக்கு உண்மையில் அது தேவையா? என்பதைத் தெரிந்து செலவு செய்யவும். பட்ஜெட்டை உருவாக்குவது உங்களின் வீண் செலவுகளைத் தவிர்க்க உதவியாக இருக்கும்.
இன்று முதல் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால், உங்களுடைய சம்பள தேதிக்கு முன்பே பட்ஜெட்டை உருவாக்குங்கள். நீங்கள் மாதாந்திர தேவைக்கு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை உருவாக்குங்கள். வீட்டு வாடகை, மின்சாரம், ரேஷன், கடன் மற்றும் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம் போன்ற தேவைகளை, இந்தப் பட்டியலில் சேருங்கள்.
தேவையற்ற ஷாப்பிங்கைத் தவிர்க்கவும்: இன்றெல்லாம் ஆன்லைன் பேமெண்ட் தளங்களை, மக்கள் அதிகம் பயன்படுத்துவதால், டக்கென்று மொபைல் போனை எடுத்து பேமெண்ட் செய்து பொருட்களை வாங்குகின்றனர். அது உண்மையில் நமக்குத் தேவையா இல்லையா என்பதைப் பற்றி யோசிப்பதில்லை. இதில் சிலர் போலியான விளம்பரங்களுக்கு மயங்கி சில பொருட்களை வாங்குவதும் நடக்கிறது.
சேமிப்பு: உங்களுடைய சேலரி அக்கவுண்டில், பணம் வரவு வைக்கப்பட்டவுடன் சேமிப்பிற்காக உடனே ஒரு பகுதியை ஒதுக்குங்கள். ஒவ்வொருவரும் தங்களின் சம்பளத்தில் 20 சதவீதத்தை சேமிக்க வேண்டும் என்று பைனான்சியல் ரூல் கூறுகிறது.
எனவே, உங்களுடைய வருமானத்தில் 20 சதவீதத்தை சேமிப்பிற்கு ஒதுக்கி, இந்தத் தொகையை ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு மீதமுள்ள தொகைக்கு ஏற்ப உங்களின் மாதாந்திர செலவைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை உருவாக்கவும்.
தேவையற்ற கூடுதல் செலவுகளைக் குறைக்கவும்: வெளியில் உணவு உண்பது, விலை உயர்ந்த பிராண்டட் உடைகள் மற்றும் கேஜெட்டுகளை வாங்குவது, பார்ட்டிக்கு செல்வது போன்ற செலவுகளைக் குறைக்க முயற்சிக்கவும். மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை, உங்கள் குடும்பத்துடன் வெளியே செல்லலாம்.
ஆனால் ஒவ்வொரு வாரமும் வெளியே செல்வது மற்றும் வீட்டில் உள்ள உணவுகளைத் தவிர்த்து வெளியில் உணவுகளை ஆர்டர் செய்வது, உங்கள் பட்ஜெட்டை கெடுப்பது மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.
அது மட்டுமின்றி விலை உயர்ந்த பிராண்டட் ஆடைகள் மற்றும் பல OTT சப்ஸ்க்ரிப்ஷன்களைத் தவிர்க்கலாம். பொழுதுபோக்கிற்காக 1 அல்லது 2 சப்ஸ்க்ரிப்ஷன்களைப் பயன்படுத்துவது நல்லது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும்: நம்மில் பலர் உடல் ஆரோக்கியம் குறித்துப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், உங்கள் உடல்நிலை சரியில்லை என்றால், நிறைய பணம் சிகிச்சைக்காக செலவிடப்படலாம். எனவே, உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். கடினமான காலங்களில் பெரிய மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க மருத்துவ காப்பீட்டை எடுக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications