மாதச் சம்பளக்காரர்களுக்கு தாங்கள் வாங்கும் சம்பளம் போதவில்லை என்ற பிரச்சனை பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள். அவற்றோடு தேவையற்ற செலவுகளும் சேர்ந்து கொண்டு 9 டூ 5 ஜாப் செல்பவர்களை வாட்டி வதைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதைக் கட்டுப்படுத்தவும், சரியான நிதி நிலைமையை மேம்படுத்தவும் பல வழிகள் இருக்கிறது, அதில் ஒரு வழி தான் "Passive Income" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற கூடுதல் வருமானம் தரும் வழியைக் கண்டுபிடிப்பது.

இதில் சிலர் கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கிய உடனே யூடியூப் அல்லது கூகுளில் தேடத் தொடங்குவார்கள். அதிலோ உங்களிடம் இருக்கும் ரூமை வாடகைக்கு விடுங்கள் அல்லது உங்களிடம் சொந்த இடம் இருந்தால் கார் வாடகைக்கு இடம் தாருங்கள் என்ற ஐடியாக்கள் மட்டுமே கிடைக்கும். சொந்த இடமோ அல்லது வீடோ இருப்பவர்களுக்கு இது போன்ற ஐடியாக்கள் பயன் தரலாம். ஆனால் சொந்த வீடு இல்லாமல் மாதா மாதம் சம்பளம் பெற்றுக் கொண்டு போதிய வருமானம் இல்லாமல் சிக்கித் தவிப்பவர்களுக்கு தான் இந்தப் பதிவு.
நீங்கள் சொந்த வீடு அல்லது சொந்த நிலம் இல்லாமல் இருப்பவராக இருந்தாலும் உங்களால் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். அத்தகைய 5 ஐடியாக்களைக் காண்போம்.
யூடியூப் சேனல்: யூடியூப் என்று சொன்னவுடனே ஒரு சேனல் உருவாக்கி அதிலிருந்து பணம் ஈட்ட வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள்? அப்படி இல்லை.. ஒரு சேனலை உருவாக்கி சப்ஸ்கிரைபர்களை அதிகரித்து, அதன் பின்னர் வருமானம் ஈட்டுவது என்பது சற்று கடினமானதாகத் தோன்றலாம். எனவே உங்களுக்கான தனிப்பட்ட சேனலை உருவாக்குவதற்கு பதிலாக ஏற்கனவே சேனல் நடத்தி வரும் நபர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு எடிட்டர்கள் அல்லது SEO ஆப்டிமைசேசன் செய்ய ஆட்கள் தேவையா? என்பதைக் கேட்டுக் கொண்டு அவர்களிடம் பணி புரியலாம். ஏனெனில் தற்போது வீட்டுக்கு ஒருவர் சேனல் தொடங்கி விட்டு அதை சரிவர தொடர முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற நபர்களை குறி வைத்து கூடுதல் வருமானம் பெறலாம். அதோடு அவர்களின் சேனலை டிஜிட்டல் முறையில் மார்க்கெட்டிங் செய்தும் சம்பாதிக்கலாம்.
அஃபிலியேட் மார்க்கெட்டிங்: சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பல இன்ஃப்ளேன்ஸர்கள் தற்போது இந்த அஃபிலியேட் மார்க்கெட்டிங் கான்செப்ட்டை பயன்படுத்தி வருகின்றனர். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்களின் பொருட்களை பிறருக்கு பரிந்துரை செய்து, அவர்கள் நீங்கள் கொடுக்கும் லிங்க் மூலம் பொருட்களை வாங்கினால் அதன் மூலம் இந்நிறுவனங்கள் உங்களுக்கு வருமானம் வழங்கும்.
உதாரணமாக நீங்கள் அமேசான் தளத்தைப் பயன்படுத்தி ஒரு உடையை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த உடையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மார்க்கெட்டிங் செய்யலாம். அதை பார்த்துவிட்டு உங்களிடம் கேட்கும் நபர்களுக்கு லிங்க் அனுப்பி அந்த லிங்கில் இருந்து அவர்கள் பொருட்களை வாங்கினால் அதற்கு அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வருமானமாக வழங்கும். இதனால் தான் பல இன்ஃப்ளேன்சர்கள் இன்ஸ்டாகிராமில் இந்த யுக்தியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கிளவுட் கிச்சன்: நீங்கள் சமையலில் கைத் தேர்ந்தவராக இருந்தால் இந்த ஐடியாவை பயன்படுத்தி பண மீட்டலாம். அதுவும் மெட்ரோ நகரங்களில் இது போன்ற தொழிலுக்கு மவுசு சற்று அதிகம் தான். பெருநகரங்களில் பலர் பணிக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு தாங்களே சமைத்து சாப்பிட நேரம் கிடைப்பதில்லை. இது போன்ற நபர்களை குறி வைத்து கிளவுட் கிச்சன் தொடங்கினால் அதிலிருந்து கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
மொபைல் அப்ளிகேஷன்: நீங்கள் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்து கூடுதல் வருமானம் ஈட்டும் ஐடியாவைத் தேடினால் இது உங்களுக்கு உதவும். அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி அதை ப்ளே ஸ்டோரில் அப்லோட் செய்யலாம். இதனால் வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
சாப்ட்வேர் டெம்ப்ளேட்கள்: நீங்கள் டிசைனிங் செய்வதில் ஆர்வம் உடையவராக இருந்தால் இந்த ஐடியா உங்களுக்கு உதவும். கேன்வா போன்ற தளங்களில் டெம்ப்ளேட்களை உருவாக்கி ஆன்லைனில் விற்பனை செய்யலாம். இன்றெல்லாம் பலர் தங்கள் வேலையை சட்டென முடிப்பதற்கு அதிகமான டெம்ப்ளேட்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே டிசைனிங் தெரிந்து சிறந்த முறையில் டெம்ப்ளேட்களை உருவாக்குபவராக இருந்தால் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கு


Click it and Unblock the Notifications