வட்டிக்கு மேல வட்டி பாடாய் படுத்துதா? இந்த 5 அறிகுறிகளை அசால்ட்டா விட்றாதீங்க!

தேவைப்படும் நேரங்களில் கடன் வாங்குவது ஒன்றும் தவறான விஷயம் கிடையாது. வீட்டு கடன் வாங்கி சிலர் வீடு வாங்குவார்கள். எஜுகேஷன் லோன் வாங்கி படிப்பார்கள். இப்படி ஒரு சில முக்கியமான தேவைக்காக கடன் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தினசரி தேவைகளுக்கு எல்லாம் கடன் வாங்கிக் கொண்டே இருக்கும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. அப்படியே கடன் வாங்கினாலும் அதை உங்களால் அடைக்க முடியுமா? என்பதை முதலில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இதனால் புதிய கடன்கள் தொடர்ந்து சேருமே தவிர குறையாது. நீங்களும் அதிக கடனில் சிக்கி இருக்கிறீர்களா என்பதை சில அறிகுறிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

ஈஎம்ஐ கட்டிய பிறகு கையில் பணம் இல்லாமல் இருப்பது: சிலர் சம்பளம் வந்தவுடன் மாத தவணையை சரியாக கட்டி விடுவார்கள். ஹோம் லோன், கார் லோன், பர்சனல் லோன் கிரெடிட் கார்டு லோன் போன்றவற்றுக்கு ஈஎம்ஐ செலுத்திய பிறகு மற்ற எந்த செலவுக்குமே கையில் பணம் இருக்காது. இதைத் தவிர மளிகை பொருட்கள், இன்சுரன்ஸ், சேமிப்பு, இதர செலவுகள், குழந்தையின் கல்வி செலவு, அன்றாட செலவு, போக்குவரத்து செலவு.. இப்படி பல செலவுகள் இருக்கிறது. இதற்கெல்லாம் உங்களிடம் பணம் இல்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் அதிக கடனில் சிக்கி இருக்கிறீர்கள்.

வட்டிக்கு மேல வட்டி பாடாய் படுத்துதா? இந்த 5 அறிகுறிகளை அசால்ட்டா விட்றாதீங்க!

மீண்டும் மீண்டும் கடன் பெறுவது: ஒரு கடனை முடிப்பதற்காக மீண்டும் மீண்டும் கடன் பெறுவது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியலாம். இதனால் நீங்கள் மீள முடியாத கடனில் சிக்க வேண்டிய சூழல் ஏற்படும்

தினசரி செலவுகளுக்கு கடனை நம்பி இருப்பது: சம்பளப்பணம் அனைத்தும் ஈஎம்ஐ-கே போனால் இதர செலவுகளான எலக்ட்ரிசிட்டி பில், பெட்ரோல், ரேஷன் என பிற செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதை வைத்தே புரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய செலவு வருமானத்தை விட அதிகமாக இருக்கிறது என்று.. இது போன்ற சூழலில் கடன் வாங்குவது தற்காலிக தீர்வாக இருக்கலாம். ஆனால் இப்படி கடன் வாங்கிக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு மாதமும் இது தொடருமே தவிர உங்களால் அதிலிருந்து மீள முடியாது.

Also Read

கடன் காலத்தை அதிகரித்தல்: கையில் பணம் இல்லை என்று சிலர் கடன் காலத்தை அதிகரிப்பார்கள். நீங்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். ஈஎம்ஐ செலுத்துவதற்கே சிரமப்பட்டு செலுத்தி வரும் வேளையில் கடன் காலத்தை அதிகரித்தால் மாதா மாதம் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை மிச்சமாகும். ஆனால் நீண்ட காலத்திற்கு நீங்கள் தொடர்ந்து அதிக வட்டி செலுத்த வேண்டி வரும்.

சிபில் ஸ்கோர் குறையும்: ஒரு சிலர் கடன் கட்டும் தேதி வரும்போது மாத தவணை எல்லாம் சமாளிக்க முடியாமல் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்க்கு பணத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதனால் சில தவணை தவறிவிடும். தவணையை தவற விடும்போது உங்களுடைய சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடனில் இருந்து விடுபடுவது எப்படி?: உங்களுடைய கடன் எவ்வளவு?, செலவு எவ்வளவு?, சம்பளம் எவ்வளவு? என்பதை எல்லாம் தனித்தனியாக எழுதி வையுங்கள். பட்ஜெட் போட்டு அதன்படி செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். அதிக வட்டிக்கொண்ட கடன்களை முதலில் அடைக்க முன்னுரிமை கொடுங்கள். கடன் முடியும் வரை வெளியில் சென்று அதிக செலவு செய்வதை தவிருங்கள்.

வங்கி வழங்கும் கடன்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். ஏனெனில் சில போலி ஆப்-களில் கடனை வாரி வாரி வழங்கி விட்டு பின்னர் அதிக வட்டியை போட்டு மக்களை பாடாய்ப்
பாடாய்ப்படுத்துகின்றனர். ஆரம்பத்திலேயே இது போன்ற பிரச்சினைகளை எல்லாம் கண்டறிந்து உங்கள் செலவு பழக்க வழக்கங்களை மாற்றினால் கடன் சுமையிலிருந்து எளிதாக தப்பித்து விடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+