இன்றைய சூழலில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். கடந்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாயை வைத்து நாம் வாங்கிய பொருட்களில் தற்போது பாதியை கூட வாங்க முடிவதில்லை. மாத சம்பளக்காரர்களையும் பணவீக்கம் வாட்டி வதைக்கிறது. இதன் விளைவாக பலரும் மாதத்தின் இறுதியில் கடன் பெறுகின்றன.ர் அதற்காக மட்டுமின்றி குடும்பச் செலவுகள், மருத்துவச் செலவுகள், குழந்தையின் படிப்பு என ஏராளமான செலவுகள் இருப்பதால் பலரும் கடன் பெறுகின்றனர். ஆனால் கடனை பெற்றுவிட்ட அதை எப்படி அடைப்பது என்ற கவலையில் தான் பலரின் வாழ்க்கை இருக்கிறது. எனவே இந்த பதிவில் உங்களுடைய கடனை சீக்கிரம் அடைக்க உதவும் டிப்ஸ்களை பார்ப்போம்.
கடனுடன் போராடுவது பலருக்கும் கடினமாக உணரலாம். ஆனால் சரியான அணுகுமுறை இருந்தால் உங்கள் நிதியை எளிதில் கட்டுப்படுத்தி நீங்கள் நினைத்ததை விட வேகமாக கடன்களை அடைக்கலாம். இந்த பதிவில் உங்கள் கடனை எளிதாக குறைக்கவும், எதிர்காலத்தை இன்னும் சிறப்பாக மாற்றவும் 7 எளிய உதவிக் குறிப்புகளைப் பார்ப்போம்.

தெளிவு முக்கியம்: நம்மில் பலர் சரியான திட்டமிடுதல் இல்லாமல் செலவு செய்கிறோம். அதை செய்வதற்கு பதிலாக உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் கடன் விவரங்களை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். உங்களின் மொத்த கடனையும் தெளிவாக எழுதி வையுங்கள். அதேபோல ஒரு ஊழியராக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது? வேறு ஏதேனும் வருமான ஆதாரங்கள் உள்ளதா? இல்லையா? என்ற தெளிவைப் பெறுங்கள். மொத்த வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய முழுமையான புரிதலை தெரிந்து கொள்வது தான் கடனை அடைப்பதற்கான முதல் டிப்.
முதலில் செலுத்த வேண்டிய கடனுக்கு முன்னுரிமை கொடுங்கள்: உங்களிடம் எந்தெந்த கடன்கள் இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்வது முக்கியம். இதில் அதிக வட்டி உள்ள கடன்களை முதலில் செலுத்துங்கள். உதாரணமாக கிரெடிட் கார்டு கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே கிரெடிட் கார்டு கடன்களை முதலில் அடைப்பது குறித்து பரிசீலிக்கலாம்.
மேலும் விரைவாக செலுத்த வேண்டிய கடன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களுக்கு கடன் கொடுத்தவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு வாக்குறுதியளித்தபடி கடனை திருப்பிச் செலுத்துங்கள். இல்லையெனில் அவர்கள் உங்கள் மீது நம்பிக்கைய இழப்பார்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் அவர்கள் மீண்டும் கடன் கொடுக்க முடியாத சூழலும் ஏற்படலாம்.
கூடுதல் வருமான ஆதாரங்களை ஆராயுங்கள்: உங்கள் வழக்கமான வருமானத்திற்கு கூடுதலாக வேறு வருமான ஆதாரங்களையும் ஆராயுங்கள். இதை செய்ய உங்களுக்கு நேரம் கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் எந்த பிசினஸை தொடங்கலாம் என கண்டறியலாம். தற்போதெல்லாம் பலரும் வீட்டில் இருந்தே ஆன்லைன் வணிகத்தில் ஈடுபடுகின்றனர். சிலர் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற சிறு வணிகத்தை தொடங்குவது குறித்து யோசிக்கலாம்.
செலவுகளைக் குறைத்தல்: தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் அதிக கடனை திருப்பி செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் நாம் தாங்கள் செய்யக்கூடியது தேவையற்ற செலவுகள் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே செலவு செய்வார்கள். இது போன்ற நபர்கள் தேவை மற்றும் விருப்பம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு செலவு செய்யலாம். தேவை என்பது அடிப்படை தேவையை குறிக்கிறது. இதை கண்டிப்பாக செய்துதான் ஆக வேண்டும்.
ஆனால் விருப்பத்தை சற்று தள்ளி போடலாம். உதாரணமாக நீங்கள் வீட்டில் சமையல் செய்து இருக்கும்போது வெளியே சாப்பிடலாம் என்று நினைத்தால் அது விருப்பம். கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் தேவை மற்றும் விருப்பம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செலவு செய்யலாம்.
கடன்களை ஒருங்கிணைக்கலாம்: உங்கள் பல்வேறு கடன்களை ஒரே வகையான கடனாக மாற்றலாம். இதனால் வட்டி விகிதங்களை சற்று குறைக்க முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு வங்கியில் தனி நபர் கடன் பெற்றிருக்கிறீர்கள் மற்றொரு வங்கியில் கார் கடனை எடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த வங்கிகள் தனித்தனியாக வட்டி விகிதங்களை வசூலிக்கும். எனவே இந்த இரண்டு கடன்களையும் ஒரே வங்கிக்கு மாற்றும் வசதியை பல வங்கிகள் வழங்குகின்றன. இதை செய்வதன் மூலம் தேவை இல்லாமல் செலுத்தும் வட்டியை குறைக்க முடியும்.இது போன்ற சிறு விஷயங்களை கருத்தில் கொண்டாலே உங்களுடைய கடன் வேகமாக அடையும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications