தற்போது மக்கள் பலரும் தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். இதன் மிக முக்கிய காரணம் எதிர்காலத்தில் தங்கள் சொத்தை விற்று பணமாக்கிக் கொள்ளலாம் என்பதனால் தான். சிலர் தங்கள் குழந்தையின் திருமணம், கல்வி, சுகாதாரச் செலவுகள் போன்றவற்றிற்காக வாங்கிய சொத்தை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அப்படி இருந்தும் சிலருக்கு தாங்கள் எதிர்பார்த்த விலைக்கு தங்கள் சொத்துக்களை விற்க முடிவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
உதாரணமாக ஒரே இடத்தில் 2 வெவ்வேறு சொத்துக்கள் இருக்கும். ஒரு விற்பனையாளர் தன் சொத்துக்கு கேட்கும் விலையை பெற்று விடுவார். மற்றொருவர் தனது சொத்துக்களை விற்க போராடிக் கொண்டிருப்பார். இதற்கு விரிவான பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய சூழல் கூட ஏற்படலாம். இந்த ஏற்றத்தாழ்வுக்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. எனவே நீங்களும் ஒரு சொத்தை விற்க விரும்பினால், விரும்பிய விலையைப் பெற ஒரு சில டிப்ஸ்களைப் பின்பற்ற வேண்டும்.

பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்: ஒரு சொத்தை நீங்கள் விரும்பிய விலைக்கு விற்க விரும்பினால் முதலாவதாக நீங்கள் அதை பராமரிக்க வேண்டும். பார்ப்பதற்கு புதியது போல தோன்றினால் தான் வாங்க வருபவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். நீங்கள் விற்பனை செய்வதற்கு முன்பு நீங்கள் ஒரு ப்ராப்பர்டி அழுக்காகவும் சேதமடைந்தும் இருந்தால் வாங்குவீர்களா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதே சிந்தனை தான் உங்களிடம் சொத்தை வாங்க வருபவர்களுக்கும் ஏற்படும்.
உதாரணமாக நீங்கள் ஒரு வீட்டை விற்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் உங்கள் வீட்டின் டைல்ஸ், ப்ளோர் மற்றும் இன்டீரியர் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்து விட்டு அதன் பிறகு விற்க முயற்சி செய்யுங்கள்.
ஆற்றல்: உங்களுடைய வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை சேமித்து சூரிய சக்தி அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது குறித்து யோசிக்கலாம். ஏனெனில் இது போன்ற விஷயங்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறது. மேலும் வீடு வாங்க வருபவர் சூரிய ஆற்றலுடன் கூடிய வாய்ப்பை பாராட்டுவதோடு நீங்கள் கேட்கும் தொகையையும் தருவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு வேலை இந்த அம்சம் குறித்து வாங்க வருபவர் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், நீங்கள் சோலார் பேனல்களை அகற்றிவிட்டு வேறு இடங்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சொத்தின் பாதுகாப்பு: இன்றைய சூழலில் உங்கள் சொத்தை வாங்க வருபவர் பாதுகாப்பு அம்சத்தை முதன்மையாக பரிசீலிக்கிறார். எனவே நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் உங்களுடைய சொத்து உள்ளதா? என்பதை சரி பாருங்கள். தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் நடமாட்டம் மற்றும் பிற பிரச்சனைகளை கண்காணிக்க இவை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே யாராவது உள்ளே நுழைய முயன்றால் அண்டை வீட்டாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பர்க்லர் ஆலாரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக நுழைவாயிலில் ஸ்மார்ட் பூட்டுகளை வைப்பது குறித்தும் யோசிக்கலாம். பயோமெட்ரிக் லாக்குடன் கூடிய நுழைவாயில் போன்றவை உங்கள் சொத்தின் விலையை மேலும் அதிகரிக்க உதவும்.
கூடுதல் அம்சங்கள் மற்றும் விரிவாக்கம்: முடிந்தால் உங்களுடைய வீட்டில் கூடுதல் அறைகளை அமைக்கலாம். ஏனெனில் கோவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்று யோசிக்கின்றனர். எனவே உங்கள் வீட்டில் ஒரு தனி அறை அமைப்பது பற்றியோ அல்லது அலுவலகமாக மாற்றுவது குறித்தோ யோசிக்கலாம்.
விலை நிர்ணயம்: விரைவாக விற்பனை செய்வதற்கு சரியான விலையை நிர்ணயிப்பது முக்கியம். நியாயமான விலையை நிர்ணயித்தால் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு அதிகம். உங்களுக்குத் தெரிந்த ஒருவரை சந்தித்து பேசுவதன் மூலமாகவோ அல்லது நீங்கள் சொத்தை விற்க இருக்கும் பகுதியில் உள்ள பிற இடங்களில் விலையை பற்றி தெரிந்து கொள்வதன் மூலமாகவோ எளிதில் விலையை நிர்ணயிக்கலாம். சொத்தின் மதிப்பை தீர்மானிக்க அனுபவம் வாய்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டின் உதவியை நாடலாம். ஏனெனில் சந்தையில் அதிக அளவில் சொத்துகளை வாங்கி விற்ற அனுபவம் வாய்ந்த இவர்களுக்கு.. உங்களுடைய சொத்தின் விலையை நிர்ணயிக்கவும் அனுபவம் இருக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications