மாதாந்திர வருமானம் பலருக்கும் ஒரு பெரிய உதவியாக இருக்கும். ஏனெனில் இது நமது அன்றாட செலவுகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு மாதாந்திர வருமானத்தை வழங்கும் முதலீட்டுத் திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம் மற்றவர்களை நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏதுமின்றி கணிசமான வருமானத்தைப் பெற முடியும். இந்தப் பதிவில் மாத வருமானம் தரும் டக்கரான முதலீட்டு திட்டங்கள் பற்றி பார்ப்போம்.
மாதாந்திர வருமானத்தை வழங்கும் பிரபலமான திட்டங்கள்: தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (NCSS), அடல் பென்ஷன் யோஜனா (APY), மியூச்சுவல் ஃபண்ட் SWP போன்றவை இதில் அடங்கும்.

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் (MIS): MIS திட்டத்திற்கு ஆண்டு வட்டியாக 7.4% வழங்கப்படுகிறது. ஒரு தனிநபர் இந்தத் திட்டத்தின் மூலம் தனிப்பட்ட கணக்கு அல்லது கூட்டு கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை, கூட்டு கணக்கில் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
தனிநபர் கணக்கில், 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ. 5,550 வரை மாதாந்திர ஓய்வூதியம் பெறலாம். அதே நேரத்தில் உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கை வைத்திருந்தால், அதிகபட்சமாக ரூ. 9,250 ரூபாய் வரை மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். இறுதியாக 5 ஆண்டு லாக்கின் காலத்திற்குப் பிறகு கணக்கை மூடலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS): இந்தத் திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் காலாண்டு அடிப்படையில் வருமானத்தை பெறலாம். இதில் ஒரு முறை முதலீடு செய்து ஐந்தாண்டுக்கு வருமானத்தை பெற முடியும். இதற்கு 5 ஆண்டுகள் லாக் இன் காலம் உண்டு.
அதன் பின்பு வேண்டுமானால் 3 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். SCSS திட்டம் ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ரூ.30 லட்சம் முதலீட்டில், அதிகபட்ச காலாண்டு வருமானம் ரூ.61,500 ஆக இருக்கும். 5 ஆண்டுகளில், முதலீட்டின் மொத்த வட்டி ரூ.12,30,000 ஆக இருக்கும். இந்த திட்டத்தின் முடிவில், முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறலாம்.
அடல் பென்ஷன் யோஜனா (APY): இந்த ஓய்வூதியத் திட்டம் கூட்டுறவு துறைகளில் இல்லாத தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட்டது. APY திட்டத்தின் கீழ், மாத ஓய்வூதியமாக ரூ 1,000, ரூ 2,000, ரூ 3000, ரூ 4000 அல்லது ரூ 5,000 வரை அவரவர் முதலீட்டைப் பொறுத்து வழங்கப்படும்.
வேறு வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். APY கணக்கைத் திறக்க, ஒரு நபர் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருக்க வேண்டும்.
Systematic Withdrawal Plan (SWP) முதலீடு: SWP என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முறையாக திரும்பப் பெற உதவும் திட்டம் ஆகும். இதற்காக, நீங்கள் SIP முதலீட்டுத் திட்டம் அல்லது ஓய்வுக்கு முன் மற்ற வழிகள் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
முதலில் நீங்கள் SIP-கள் மூலம் ஒரு கார்பஸ்-ஐ உருவாக்குகிறீர்கள். பின்னர் நீங்கள் ஓய்வுபெறும் போது, SWP மூலம், ஒவ்வொரு மாதமும் சில மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்று உங்கள் மாதாந்திர வருமானத்தைப் பெறுவீர்கள்.
நீங்கள் எவ்வளவு அடிக்கடி பணத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் SWP-ஐத் தொடங்க சரியான விவரங்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.
வருடாந்திர திட்டங்கள்: பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஒரு முறை முதலீட்டிற்குப் பிறகு, மாதாந்திர ஓய்வூதியத்தைப் தரும் வருடாந்திரத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் ஏதேனும் உங்களுக்கு ஒத்துவருகிறதா? என்பதைப் பார்த்து அந்தத் திட்டத்தில், நீங்கள் முதலீடு செய்யலாம்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications