ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்பு கவனிக்கக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. தொழில் எப்பொழுதுமே நாம் நினைத்தபடி நடக்காது. நுகர்வோரின் விருப்பத்தை பொறுத்தே லாபம் நஷ்டம் அமையும். இதுபோன்ற கணிக்க முடியாத விஷயங்களால் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் பல நேரங்களில் நஷ்டத்தை சந்திக்கிறது. ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். அந்த விஷயங்கள் உங்களுடைய தொழில், நஷ்டம் அடைவதை குறைக்கும். அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீங்கள் எந்தத் தொழிலில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும்: நீங்கள் எந்த தொழிலைத் தொடங்க இருக்கிறீர்கள் என்பதைக் கவனமாக முடிவு செய்ய வேண்டும். மக்கள் தங்களுக்கு எந்த தொழிலில் ஆர்வம் மற்றும் ஆழ்ந்த அறிவு உள்ளதோ அதில் முதலீடு செய்ய வேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும் லாபம் மட்டுமே முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

போட்டியாளர்களைப் புரிந்து கொள்ளுங்கள்: உங்களுடைய தொழிலில் யார் உங்களுக்கு போட்டியாளர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் அவர்களை விட உங்களால் தனித்துவமாக என்ன செய்ய முடியும் என்பதை கவனிக்க வேண்டும்.
உதாரணமாக நீங்கள் சாப்ட்வேர் விற்கும் ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறீர்கள் என்றால், பிற சாஃப்ட்வேர் நிறுவனங்களும் எப்படி சேவை செய்கிறது என்பதை பார்த்து, அதைவிட உங்களால் சிறப்பாக என்ன செய்ய முடியும்? என்பதை கவனிக்க வேண்டும். இதுவே உங்களுடைய தொழில் வெற்றி பெறுவதற்கான முதல் படி.
முன்கூட்டியே திட்டமிடுங்கள்: ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் தனித்துவமான ஒரு திட்டம் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன், அந்த தொழிலைப் பற்றிய திட்டத்தை உருவாக்க வேண்டும். அதில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எப்படி மக்களிடம் உங்களுடைய சேவையையோ அல்லது பொருளையோ கொண்டு சேர்க்கப் போகிறீர்கள் என்ற விவரங்கள்இருக்க வேண்டும்.
மார்க்கெட்டிங்: எந்த ஒரு தொழில் என்றாலும் சரி மார்க்கெட்டிங் செய்வது மிக மிக முக்கியமான ஒன்று. நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது நீங்கள் வழங்கக்கூடிய சேவை என எதுவாக இருந்தாலும், அவற்றை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில்தான் உங்களுடைய வளர்ச்சி இருக்கும். எல்லா தொழிலுக்குமான அடிப்படையான விஷயம் என்றால் அது மார்க்கெட்டிங் தான்.
தற்போது பலரும் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர். இதில் உங்களுக்கு எந்த தளம் வசதியாக உள்ளதோ அதில் உங்களுடைய தொழில் சார்ந்த விஷயங்களை மார்க்கெட்டிங் செய்யலாம்.
சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்தும் மக்களும் மாறுபடுகின்றனர். அதாவது சிலருக்கு இன்ஸ்டாகிராம் பிடிக்கும், சிலருக்கு பேஸ்புக் பிடிக்கும். எனவே அனைத்து சோசியல் மீடியா தளங்களிலுமே ஒரு அக்கவுண்ட் வைத்து உங்களுடைய தொழிலை மேம்படுத்துவது சிறந்தது.
தள்ளுபடிகள்: நாம் அனைவருமே ஆடி மாத தள்ளுபடி என்றால், அடித்து பிடித்துக் கொண்டு ஜவுளி கடைக்கு சென்று துணிகளை வாங்கி வருவோம். இதனால் சாதாரண நாட்களை விட ஆடி மாதத்தில் கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். இதே ட்ரிக்கை நீங்களும் பயன்படுத்தலாம். உங்களுடைய பொருளை சந்தைப்படுத்துவதற்கு தள்ளுபடிகளை வழங்கலாம். இது போன்ற சிறு உதவி குறிப்புகளை பயன்படுத்தினாலே உங்களுடைய தொழிலில் நல்ல லாபம் ஈட்ட முடியும். மேலும் தொடர்ந்து உங்கள் நிறுவனத்தை வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வைக்க முடியும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications