இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. காரணம் எந்தவித பினையமும் இல்லாமல் கிரெடிட் கார்டுகளைப் பெறலாம். அதோடு வட்டி இல்லாத காலத்தையும் சேர்த்து கிரெடிட் கார்டு வழங்குனர்கள் வழங்குவதால் அவசர தேவைக்கு பணம் தேவைப்படும் போது பலர் நாடுவது கிரெடிட் கார்டு நிறுவனங்களைத் தான். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் கிரெடிட் கார்டு அறிக்கையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு அறிக்கையில் கிரெடிட் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். உங்கள் பில்லிங் சைக்கிள், எப்போது எவ்வளவு பில் செலுத்த வேண்டும், எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் என்ற உங்கள் செலவு பழக்க வழக்கங்களை பற்றி புரிந்து கொள்ள கிரெடிட் கார்டு அறிக்கை முக்கியம்.

பில்லிங் தேதி: கிரெடிட் கார்டு அறிக்கையின் மூலம் பில்லிங் தேதி மற்றும் நிலுவை தேதி ஆகிய இரண்டையும் தெரிந்து கொள்ளலாம். பில்லிங் தேதி என்பது பில்லிங் சைக்கிளின் முடிவைக் குறிக்கிறது. அதாவது இது வழக்கமாக 30 நாட்கள் இருக்கும். நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் கடைசி தேதி அல்லது வட்டி இல்லா காலம் தான் நிலுவை தேதி. நிலுவை தேதி என்பது உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய தேதியாகும்.
அமௌன்ட் டியூ: ஒரு குறிப்பிட்ட பில்லிங் சைக்கிளின் போது உங்கள் கிரெடிட் கார்டுக்கு, நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை. பொதுவாக வங்கிகள் கிரெடிட் கார்டு பில்களுக்கு 10 முதல் 15 நாட்கள் திருப்பி செலுத்தும் காலத்தை வழங்குகின்றன. எனவே ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பில் ஜெனரேட் செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து 45 நாட்கள் உங்களுக்கு திருப்பி செலுத்த நேரம் இருக்கும்.
வட்டி விகிதம்: வட்டி விகிதம் என்பது உங்கள் கிரெடிட் கார்டு கடனுக்கு நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய வட்டியாகும். இது பொதுவாக வருடாந்திர சதவீதமாக கொடுக்கப்பட்டிருக்கும். உங்கள் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் முழுமையாக செலுத்த தவறினால் இந்த வட்டி விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்லும். சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் நிலுவை தேதிக்குள் முழு தொகையையும் சரிவர திருப்பிச் செலுத்தினால் புதிய கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி இல்லாத காலத்தை வழங்குகின்றன. எனவே தேவையற்ற வட்டி செலுத்துவதை தவிர்த்து அவசர தேவைக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பரிவர்த்தனை பதிவுகள்: இன்றெல்லாம் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் நடக்கிறது. இதனால் கிரெடிட் கார்டு அறிக்கையின் மூலம் பரிவர்த்தனை விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக நீங்கள் அவற்றை புகார் அளிக்கலாம். இதன் காரணமாகத்தான் அவ்வப்போது கிரெடிட் கார்டு அறிக்கைகளை சரி பார்க்கும்படி கிரெடிட் கார்டு வழங்குனர்கள் பரிந்துரைக்கின்றனர்
ரிவார்ட் பாய்ண்டுகள்: பல்வேறு கிரெடிட் கார்டுகளும் ரிவார்ட் பாய்ண்டுகள் போன்ற பல நன்மைகளை கார்டுதாரர்களுக்கு வழங்குகிறது. நீங்கள் எவ்வளவு ரிவார்டுகளை பெற்றிருக்கிறீர்கள் என்பதை கிரெடிட் கார்டு அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிலவற்றுக்கு எக்ஸ்பயரி தேதியும் இருக்கும். எனவே கிரெடிட் கார்டு அறிக்கையை பார்த்து ரிவார்ட் பாய்ண்டுகளை பயன்படுத்துவது நல்லது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications