கிரெடிட் கார்டுகள் இன்று பலராலும் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிவுள்ளது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கிரெடிட் கார்டுகளை வழங்கும்போது எந்த கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது என்பதில் உங்களுக்கு குழப்பம் வரலாம். கிரெடிட் கார்டுகளுக்கு பொதுவாக வட்டி விகிதம் அதிகம் என்றாலும் தேவைப்படும் நேரங்களில் பலர் நாடுவது கிரெடிட் கார்டுகளைத் தான். ஆனால் ஒவ்வொருவருடைய செலவுகளும் வித்தியாசமானது அதைப் பொறுத்து கிரெடிட் கார்டைத் தேர்வு செய்தால் இதை விட நன்மை வேறு எதிலும் கிடைக்காது. அந்த அளவுக்கு கிரெடிட் கார்டுகளில் நன்மைகளும் அடங்கியுள்ளன.
சரியான கிரெடிட் கார்டை எப்படி தேர்வு செய்வது?: சரியான கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது கடினமானதாக இருக்கலாம். கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

உங்கள் செலவுக்கு ஏற்ற கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யுங்கள்: மளிகை சாமான்கள், பயணம் அல்லது சாப்பாடு போன்ற உங்கள் முதன்மை செலவு வகைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ற கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்யும்போது கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகளின் நன்மைகளைப் பெற முடியும்.
உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யவும்: சிலருக்கு கேஷ்பேக் அதிக நன்மைகளை வழங்குவது போல தோன்றலாம். சிலருக்கு ரிவார்டு பாயிண்டுகள் நன்மையளிப்பதாகத் தோன்றலாம். எனவே உங்களுக்கு கேஷ்பேக் சிறந்ததா அல்லது ரிவார்ட் பாயிண்ட்கள் சிறந்ததா என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யவும்.
வருடாந்திர கட்டணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்: பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் இருக்கும். மேலும் கிரெடிட் கார்டு பெறும்போது ஜாயினிங் கட்டணமும் செலுத்த வேண்டும். எனவே வருடாந்திர கட்டணம், வட்டி விகிதங்கள் போன்ற விபரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள். மேலும் சிறந்த பலன்களை வழங்கும் கார்டை பிற கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
சிறப்புச் சலுகைகளைத் தேடுங்கள்: பல கிரெடிட் கார்டுகள் ஷாப்பிங், பயணம் ஆகியவற்றிற்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றன. எனவே நீங்கள் பயன்படுத்தக்கூடிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
வெல்கம் போனஸ்கள்: கிரெடிட் கார்டுகள் ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக் அல்லது வவுச்சர்கள் வடிவில் வெல்கம் போனஸை வழங்குகின்றன. கார்டைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த போனஸைக் கருத்தில் கொள்ளுங்கள்.
கிரெடிட் கார்டுகள் பல நன்மைகளை வழங்குகின்றன. அவற்றின் அம்சங்களைப் புரிந்து கொண்டு உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கார்டை கவனமாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுடைய நிதியை திரும்பட நிர்வகிக்க முடியும். மேலும் நீங்கள் வாங்கிய கிரெடிட் கார்டை முழுவதுமாக பயன்படுத்திய திருப்தி உங்களுக்கு கிடைக்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications