சொந்த வீடு வாங்க பட்ஜெட் இல்லாதவர்கள் வங்கி கடன்களைத் தான் பெரிதும் நம்பியுள்ளனர். அப்படி வங்கியில் கடன்களை வாங்கிவிட்டு மாதம் மாதம் EMI செலுத்தும் போது தான் பலரும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வங்கிகளில் வசூலிக்கப்படும் வட்டி விகிதங்கள். நீங்களும் வீட்டுக் கடனை வாங்கி இருந்தால் அவற்றை எப்படி எளிதில் அடைப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
முன்பணம் செலுத்தவும்: உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ குறைப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று முன்பணம் செலுத்துதல். கூடுதல் தொகை கிடைக்கும்போது அல்லது ஏதேனும் சேமிப்பு திட்டங்கள் முதிர்வு பெற்று அந்தத் தொகை கைக்கு வரும்போது அவற்றை முன் பணம் செலுத்த பயன்படுத்தலாம். இந்த முன் பணம் என்பது உங்களுடைய அசல் தொகையில் நேரடியாக கழிக்கப்படும்.

கடன் காலத்தை நீட்டிக்கவும்: மாதாந்திர EMI செலுத்துவது பட்ஜெட்டை குறைக்கிறது. இதனால் மீதமுள்ள செலவுகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை எனும் பட்சத்தில் உங்களுடைய கடன் காலத்தை நீட்டிக்கலாம். இந்த அணுகுமுறை திருப்பி செலுத்தும் காலத்தை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் உங்களுடைய EMI தொகை குறைக்கப்படுகிறது. இருப்பினும் EMI குறையும் அதே வேளையில் உங்கள் கடனின் காலம் அதிகரிப்பதால் மொத்த வட்டியும் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
லோன் ட்ரான்ஸ்ஃபர்: தற்போது நீங்கள் ஒரு வங்கியில் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தை விட இன்னொரு வங்கியில் குறைந்த வட்டி விகிதம் இருந்தால் நீங்கள் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். ஆனாலும் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்யும் போது ப்ராசசிங் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களையும் கருத்தில் கொள்ளுங்கள் 0.5% முதல் 1.5% வித்தியாசம் இருந்தால் மட்டுமே லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்வதனால் எந்த பிரயோஜனமும் இருக்காது.
உங்கள் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்: லோன் வாங்குவதற்கு முன்பு வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்த வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் லோன் வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் லோன் வாங்கிய பிறகு நல்ல கிரெடிட் கார்டு உடைய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தை வழங்கலாம். எனவே இது குறித்து உங்கள் வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
முன்பணத்தை அதிகரிக்கவும்: வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதிகம் முன்பணம் செலுத்துவதை நோக்கமாகக் கொள்ளுங்கள். அதிகரித்த முன் பணம் கடன் தொகையை குறைக்கிறது. இதன் விளைவாக உங்கள் EMI தொகையும் குறையும். உதாரணமாக 1 முதல் 2 லட்சம் முன்பணம் செலுத்தினால்.. உங்கள் EMI 2,000 முதல் 3000 வரை குறைக்கலாம். மேலும் செலுத்தப்பட வேண்டிய மொத்த வட்டியும் குறையும்.


Click it and Unblock the Notifications