ஒரு நபரின் திருமண நாள் என்பது அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும். திருமணம் என்று எடுத்துக் கொள்ளும் போது மக்கள் பலர் வெகு விமர்சியாகவும், அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும்படியும் நடத்த வேண்டும் என்று தான் யோசிப்பார்கள். குறிப்பாக, கல்யாண விசேஷங்களில் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ள கவனிப்புகள் யார் வீட்டிலும் இல்லாத அளவிற்குச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் எண்ணுவது வழக்கம். ஆனால், அதற்குப் பிறகு பார்க்கப் போகும் செலவுகளைப் பற்றித் திட்டமிடாமல் செய்வதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
திருமணத்திற்காகத் திட்டமிடுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் திட்டமிடல் தவறாக இருந்தால் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் செலவுகளை நம்மால் மகிழ்ச்சியாகக் கையாள முடியாது.

திருமண மண்டபச் செலவுகள்: பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களைப் பெரிய திருமண மண்டபங்களில் ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று மண்டபத்திற்கு மட்டுமே திருமணச் செலவில் பாதியைச் செலவழிக்கிறனர். அப்படி செலவு செய்து விட்டு பிற்காலத்தில் கஷ்டப்படுவதை விட உங்கள் வசதிக்கு ஏற்ற மண்டபத்தில் திருமணத்தை நடத்தலாம்.
நீங்கள் பத்திரிக்கை வைக்கும் நபர்களை பொறுத்து மண்டபத்தின் அளவை பரிசீலிக்கலாம். பொதுவாக பெரிய மக்கள் வரத்தை எதிர்கொள்ளக்கூடிய மண்டபங்களுக்கு அதிக செலவாகலாம். எனவே நீங்கள் எவ்வளவு பேரை அழைத்து இருக்கிறீர்களோ? அதற்கு ஏற்ப மண்டபம் பார்க்கலாம். மேலும் திருமணத் தேதி முடிவெடுக்கப்பட்ட உடனே மண்டபம் பிடிப்பது நல்லது.
திருமணத்திற்கான போட்டோஸ், வீடியோஸ் மற்றும் மேக்கப்: பொதுவாக, திருமணம் என்பது ஒரு நாளில் நடக்கும் ஒரு அற்புதமான நிகழ்வு. அந்த நிகழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் சேமித்து வைத்துக் கொள்வது முக்கியம். ஆனால், நாம் செய்யும் தவறு என்னவென்றால், இந்த போட்டோஸ் மற்றும் வீடியோஸ் எடுப்பதற்கு மிகவும் பிரபலமான போட்டோகிராபரை தான் தேடுகிறோம். அதற்கு பதிலாக நல்ல திறமை வாய்ந்த, குறைந்த செலவில் தரமான சேவையை வழங்கும் போட்டோகிராபர்களைத் தேடிக்கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல், திருமணத்திற்கு மேக்கப் புக் செய்யும்போது மற்ற பிரபலங்களைப் பார்த்து மிக அலங்காரமாகச் செய்துகொள்ள வேண்டும் என்று யோசிப்பது தவறில்லை. ஆனால், நமது சூழலுக்கேற்ப செய்து கொண்டால் சற்று நன்றாக இருக்கும். அதற்கு நாம் இன்ஸ்டாகிராம் அல்லது யூட்யூப் மூலம் பல மேக்கப் கலைஞர்களைக் கண்டறிந்து கொள்ளலாம். அவர்களால் சேவை வழங்கும் கட்டணங்கள் பிரபல மேக்கப் கலைஞர்களை விட சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் அவர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை வழங்குகிறார்களா என்பதையும் உறுதி செய்து கொள்வது அவசியம்.
திருமண அலங்காரங்கள்: இன்றெல்லாம் இன்ஸ்டாகிராம்களில் திருமண வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதை பார்க்கும் நபர்களும் தங்கள் திருமணத்திற்கு அதே போல அலங்காரம் செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர். மண்டபத்தில் ஏற்கனவே அலங்காரம் செய்யப்பட்டு தான் இருக்கும். அதோடு மேலும் அதிக அளவிலான அலங்காரம் செய்ய வேண்டும் என்று நினைப்பது செலவை அதிகரிக்கலாம். ஏற்கனவே இருக்கும் அலங்காரத்தோடு சிறிது ஆல்டர் செய்து கொண்டாலே நன்றாக இருக்கும். திருமணம் முடிந்து ஏற்படும் பிற செலவுகளைத் தடுக்க வேண்டுமென்றால் இது போன்ற விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.
ஆடைகள்: திருமணத்தில் ஆடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மணமக்கள் மட்டுமின்றி உறவினர்களுக்கும் ஆடை எடுத்து தருவது சில இந்திய குடும்பங்களின் வழக்கம். தற்போது பல திருமணங்களில் மணமக்களுக்கு ரூ.20.000 முதல் ரூ.30,000 மதிப்பிலான திருமண உடைகள் எடுக்கப்படுகிறது. ஒரே ஒரு நாள் பயன்படுத்திவிட்டு, அதன் பிறகு அவை வீட்டின் பீரோவில் தான் இருக்கும். இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு ரெண்டல் உடைகளை பரிசீலிக்கலாம்.
கல்யாண சாப்பாடு: திருமணத்தில் மிகவும் முக்கியமான ஒன்று உணவு. இப்போதைய காலகட்டத்தில் மனதார உணவளிப்பதைவிட ஆடம்பரத்திற்காக செய்வதுதான் அதிகமாக இருக்கிறது. இதில் சோகம் என்னவென்றால், திருமணத்திற்காக செய்து வைத்த சாப்பாடுகள் பெரும்பாலும் வீணாவதால் பலரின் உழைப்பு வீணாகிறது. எனவே நீங்கள் எவ்வளவு பேருக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்களோ அதற்கு ஏற்ப மெனுவை தயார் செய்யுங்கள். தேவைக்கு அதிகமாக சமைத்து அவற்றை வீணாக்குவதை விட கச்சிதமாக சமைத்தால் செலவு மிச்சம்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications