புது பைக் வாங்க போறீங்களா? இத படிங்க முதல்ல..! 5 வருட மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் வாங்குவது கட்டாயமா?

அண்மையில் ஒருவர் புதிதாக பைக் வாங்குவதற்காக ஒரு டீலரிடம் புக் செய்துள்ளார். அப்போது பைக் டீலர் அவரிடம் 5 வருட மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸியை அவர்களிடம் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று கூறினார். அந்த கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் கட்டாயம் 5 வருட மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி வாங்க வேண்டுமா அல்லது மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸியை குறைந்த கட்டணத்தில் வாங்குவதற்கு வழிகள் உள்ளனவா போன்ற கேள்விகள் பலரை போலவே அவருக்கும் எழுந்துள்ளது.

புது பைக் வாங்க போறீங்களா? இத படிங்க முதல்ல..! 5 வருட மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் வாங்குவது கட்டாயமா?

உங்களது இருசக்கர வாகனத்துக்கு சிறந்த கவரேஜ் உள்ள இன்ஸ்யூரன்ஸ் பாலிஸியை எடுப்பது, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் அது உங்களுக்கு உதவும்.

இருசக்கர வாகன இன்ஸ்யூரன்ஸ் பேக்கேஜ் பாலிஸிகளைப் பொருத்தமட்டில் தேர்டு பார்ட்டி லயபிலிட்டி கவரேஜ் (Third-Party Liability Cover (TP)), ஓனர் மற்றும் ஓட்டுநருக்கான தனிப்பட்ட விபத்து கவரேஜ் (Personal Accident Cover for Owner-Driver) மற்றும் சொந்த சேதம் கவரேஜ் (Own Damage Cover (OD)) ஆகியவை இருக்கும்.

தேர்டு பார்ட்டி லயபிலிட்டி கவர் என்பது சட்டப்படி கட்டாயமாகும். இந்த கவரைஜை எடுக்காவிட்டால் கடுமையான அபராதங்களுக்கு நீங்கள் ஆளாகக் கூடும். உங்களது வாகனத்தால் தேர்டு பார்ட்டி சொத்து சேதம், உடல் காயம் அல்லது மரணம் ஆகியவை நிகழ்ந்தால் உங்களுக்கு இந்த கவரேஜ் உதவும்.

தேர்டு பார்ட்டி லயபிலிட்டியைப் பொருத்தமட்டில் இழப்பீடுத் தொகைக்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது. சேதங்களுக்கும் காயங்கள் மற்றும் மரணத்தின் போது தரப்பட வேண்டிய இழப்பீடு தொகையை நீதிமன்றம் நிர்ணயிக்கும்.

அதேவேளையில் சொந்த சேதம் கவரேஜ் மூலம் இயற்கை அபாயங்கள், தீ விபத்து, திருட்டு அல்லது கொள்ளை, தீவிரவாதத் தாக்குதல், கலவரம், தீயநோக்குகள் மற்றும் பிற வாகனங்களால் ஏற்படும் விபத்து போன்ற சேதங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். விபத்துகளின் போது ஏற்படக்கூடிய காயங்கள், பகுதி அல்லது நிரந்தர உடல் செயலிழப்பு போன்ற நேரத்தின்போது சொந்த விபத்து கவரேஜ் எடுத்திருப்பது அத்தியாவசியமாகிறது.

இருசக்கர வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிஸிகள் பலதரப்பட்ட வகைகளாக உள்ளன. பேக்கேஜ் பாலிஸிகள், தேர்டு பார்ட்டி லயபிலிட்டி மட்டும் பாலிஸி, சொந்த சேதம் மட்டும் பாலிஸி, தேர்டு பார்ட்டி லயபிலிட்டி மற்றும் சொந்த சேதம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பாலிஸி என உள்ளன.

புதிதாக வாங்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு பெறப்படும் தேர்டு பார்ட்டி லயபிலிட்டி மட்டும் பாலிஸி 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். அதன் பின்னர் பாலிஸியைப் புதுப்பிக்க வேண்டும். சொந்த சேதம் கவரேஜை உங்களது தேர்டு பார்ட்டி லயபிலிட்டி பாலிஸியுடன் ஒரே அல்லது வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து நீங்கள் வாங்கலாம்.

பொதுவாக இந்த பாலிஸி ஓராண்டுக்கு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் அதைப் புதுப்பிக்க வேண்டும். இருப்பினும் டூ வீலர் பண்டில்டு இன்ஸ்யூரன்ஸில் ஓராண்டு சொந்த சேதம் மற்றும் 5 ஆண்டுகள் தேர்டு பார்ட்டி லயபிலிட்டி கவரேஜை ஒரே பாலிஸியாகப் பெறலாம். ஓனர்-டிரைவருக்கான தனிப்பட்ட விபத்து கவரேஜ் பாலிஸியை குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் வாங்க வேண்டும் என்று IRDAI கட்டாயப்படுத்தியுள்ளது.

ஆனால் நீங்கள் ஏற்கெனவே குறைந்தபட்சம் ரூ.15 லட்சத்துக்கான தனிப்பட்ட விபத்து காப்பீடு பாலிஸியை வைத்திருந்தாலோ, உங்களுக்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டாலோ புதிய பாலிஸி எடுக்கும்போது இதை வேண்டாமென்று கூறிவிடலாம்.

எனவே 5 ஆண்டுகளுக்கான தேர்டு பார்ட்டி லயபிலிட்டி பாலிஸி என்பது சட்டப்படி கட்டாயமாகும். இருப்பினும் சொந்த சேதம் பாலிஸி என்பது உங்களது விருப்பத் தேர்வாக இருந்தாலும் தேர்டு பார்ட்டி லயபிலிட்டி பாலிஸியையும் சேர்த்து எடுப்பது புத்திசாலித்தனமாகும். இதன் மூலம் உங்களது காப்பீடு செய்யப்பட்ட வாகனத்துக்குப் போதிய இழப்பீடு கிடைக்கும்.

இந்நிலையில் உங்களது இரு சக்கர வாகனத்துக்கு 360 டிகிரி கவரேஜ் பெற்றுத்தரும் கூடுதல் சலுகைகள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் உங்களது இழப்பீட்டுத் தொகையில் வாகனத்தின் மதிப்பு குறைவு அடிப்படையில் கழிவுகள் இருக்கும். இந்த நிலைமையில் மதிப்பு குறைவு பாதுகாப்பு சலுகையை வாங்கினால் இழப்பீடுகளின்போது அதை சரிகட்ட முடியும்.

அதேபோல வாகனத்தின் இஞ்சினை பழுதுபார்க்கும் போது இஞ்சின் பாதுகாப்பு கவரேஜ் மிகவும் கைகொடுக்கும். வழக்கமான கவரேஜில் இந்தச் சலுகை இருக்காது.

பாலிஸி எடுக்கும் முன்பாக பல்வேறு நிறுவனங்களின் பாலிஸி திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. இதன்மூலம் சிறந்த பாலிஸியை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். இழப்பீடு கேட்கும்போது சில கழிவுகள் சுமத்தப்படும். இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி நிபந்தனைகளை முழுவதுமாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஏற்கெனவே டூ வீலர் வைத்திருந்தால் நோ க்ளைம் போனஸ் சலுகையை அடுத்த ஆண்டுக்கான பிரீமியத்தில் கழித்துக் கொள்ள வகை கிடைக்கும். பிரீமியத்தை மட்டும் அடிப்படையாக வைத்து பாலிஸி எடுக்கக்கூடாது. உங்களுக்குத் தேவையான கவரேஜ் மற்றும் இழப்பீடு தேவைக்கு ஏற்ப பிரீமியம் கூடக்குறைய இருந்தாலும் பாலிஸியை வாங்கிவிடுங்கள். நிறைய கேரேஜ்களிடம் கூட்டு வைத்துள்ள நிறுவனங்களின் பாலிஸியைத் தேர்ந்தெடுங்கள்.

எனவே குறைந்த கட்டணம் இருப்பதற்காக ஒரு மோட்டார் பாலிஸியை தேர்வு செய்யக்கூடாது. அசம்பாவிதங்களின் போது ஆகக்கூடிய செலவீனங்கள், கவரேஜ் தரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோட்டார் பாலிஸியை வாங்குங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+