கிரெடிட் கார்டுகள் தற்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதை சரியாக பயன்படுத்தாவிட்டால், அது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் நிதி நிலைமையை நீண்ட காலத்திற்கு பாதிக்கும். தவறான கார்டைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து சரியான நேரத்தில் பில் செலுத்தத் தவறுவது வரை, சிறிய தவறுகள் கூட அதிக வட்டி கட்டணங்கள் மற்றும் கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்தக் கட்டுரையில், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் செய்யக்கூடிய பொதுவான தவறுகளைப் பற்றிப் பார்க்கலாம்.
உங்கள் தேவைகளுக்கு தவறான கிரெடிட் கார்டை தேர்வு செய்தல்: பலவிதமான கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் ரிவார்டுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

உங்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது, லாபகரமான ரிவார்டுகளுக்கான வாய்ப்புகளை வழங்கும். எனவே, கிரெடிட் கார்டுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாகத் தேர்வு செய்யவும்.
வருடாந்திர கட்டணத்தைப் பற்றித் தெரியாமல் இருப்பது: கிரெடிட் கார்டுகள், பெரும்பாலும் வருடாந்திர கட்டணங்களுடன் வருகின்றன. இது கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும். எனவே குறைந்த அளவில் வருடாந்திரக் கட்டணத்தை வசூலிக்கும் கிரெடிட் கார்டு வழங்குநர்களைத் தேர்வு செய்யவும். இது உங்கள் பணத்தைச் சேமிக்க உதவும்.
கிரெடிட் கார்டு விவரங்களை பாதுகாக்காமல் இருப்பது: கிரெடிட் கார்டு விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற இணையதளங்களில் கண்டிப்பாக கிரெடிட் கார்டு விவரங்களை பகிர வேண்டாம். CVV நம்பர், கிரெடிட் கார்டு நம்பர், காலாவதி தேதி போன்ற விவரங்களை யாரிடமும் சொல்லக் கூடாது.
பணம் எடுத்து தேவையில்லாத விஷயங்களுக்கு செலவு செய்தல்: நிதி நெருக்கடியின் போது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பது வசதியாகத் தோன்றினாலும், அவற்றுடன் வரும் அதிக கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் நிச்சயம் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
கிரெடிட் கார்டு பில்களை தவறவிடுதல்: உங்கள் கிரெடிட் கார்டுக்கு தாமதமாக கட்டணம் செலுத்துவது தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக உங்கள் கிரெடிட் ஸ்கோரில் குறைவு ஏற்படலாம். இதைத் தவிர்க்க, ஆட்டோமேட்டிக் கட்டணங்களை அமைத்து, கட்டண தேதிகள் வரும்போது ரிமைண்டர்களை பயன்படுத்தலாம்.
ஃபைன் மற்றும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது: கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் முன், கட்டணங்களில் உள்ள வட்டி விகிதங்கள் மற்றும் அபராதங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் வெளிநாட்டு பண பரிவர்த்தனைக்கான கட்டணம் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் சர்வதேச அளவில் அடிக்கடி பயணம் செய்தால், இது போன்ற நுணுக்கங்களைப் புரிந்து கொள்வது உதவியாகவும் உங்கள் கார்டைத் திறம்பட நிர்வகிக்கவும் உதவும்.
வட்டி விகிதங்களைக் கவனிக்காமல் இருப்பது: கிரெடிட் கார்டுகளுக்கு பொதுவாகவே வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக உங்கள் பில்களைச் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் போது. கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, அதன் வட்டி விகிதங்களைப் பார்த்து தேர்வு செய்யுங்கள்.
கிரெடிட் கார்டை பெறுவதற்கு முன்பு, அவர்கள் கொடுக்கும் ரிவார்டு மற்றும் பலன்களில் மட்டுமே கவனம் செலுத்தும் போது, வட்டி விகிதங்களைப் பலர் கவனிப்பதில்லை. எனவே, காலப்போக்கில் உங்களுடைய வட்டி விகிதங்களைச் சேமிக்க குறைந்த APR (Annual Percentage Rate) கொண்டக் கார்டைத் தேர்வு செய்யவும்.


Click it and Unblock the Notifications