சென்னை: புதிய ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்குவது பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். ஆனால் இது போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுது தான், நீங்கள் வாங்கும் ஃபோன், அதன் விலைக்கு தகுந்தவாறு நீண்ட நாள் உழைக்கும். புதிய ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை, இந்தப் பதிவில் பார்ப்போம்.
பேட்டரி பற்றி தெரிந்து கொள்வது: நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று வாங்கும் ஸ்மார்ட்போனின் பேட்டரி. முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு நேரம் பேட்டரி சார்ஜ் நிற்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கேம்மிங் மற்றும் இதர விஷயங்களுக்காக ஸ்மார்ட்போன் வாங்க இருக்கிறீர்கள் என்றால் அவற்றுக்கு தகுந்த பேட்டரி லைஃப் இருக்கிறதா.. என்பதை கவனியுங்கள்.

பிராண்டை மட்டும் மதிப்பிடுதல்: தற்போது ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்கின்றனர். இதனால் ஒரு பிராண்ட் பிடித்து விட்டால் போதும் தற்போதுள்ள தலைமுறையினர் அதனை வாங்கியே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். இதுபோன்ற பிராண்டுக்காக ஒரு ஸ்மார்ட் போனை வாங்குவதை தவிர்க்கலாம். அதற்கு பதில் உங்களுக்கு உண்மையில் தேவைப்படும் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போனை தேர்வு செய்யலாம்.
வாரண்ட்டி விவரங்கள்: புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் நபர்கள் எவ்வளவு விலை அதன் செயல்திறன் போன்றவற்றிற்கு அப்பால் மற்ற விவரங்களை மறந்து வருகின்றனர். இதனால் அதன் வாரண்டி விவரங்கள் ஏதேனும் டேமேஜ் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களையும் கவனிக்க மறக்கின்றனர். நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் போனுக்கு உத்தரவாதம் உள்ளதா என்பதை கவனியுங்கள்.
பாதுகாப்பு அம்சங்களை புறக்கணித்தல்: புதிய போன் வாங்கும் போது அதன் பாதுகாப்பு அம்சங்களை கவனிக்க வேண்டும். இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் மோசடிகள் அதிகமான காரணத்தினால் உங்களது போனுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
பழைய மாடல்களை வாங்குதல்: பழைய மாடல் போன்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம். புதிய மாடல்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய மாடலை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு பயன்படுத்தவும் எளிதான ஒன்றாக இருக்கும்.
ஸ்டோரேஜ்: புதிய மாடல் போன் வாங்கும்போது RAM மற்றும் ஸ்டோரேஜ் (Storage) விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். குறைவான ஸ்டோரேஜ் மற்றும் RAM கொண்ட ஃபோன்கள் கொஞ்ச நாளில் ஸ்லோவாக ஆரம்பித்து விடும். உங்கள் பயன்பாட்டிற்கு பொருத்தமான ஸ்டோரேஜ் மட்டும் RAM கொண்ட மாடல்களைத் தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications