கிரெடிட் ஸ்கோர் என்பது உங்களுடைய கடன் தகுதியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிரெடிட் கார்டு கிடைப்பதில் இருந்து லோன் கிடைப்பது வரை பலவற்றுக்கும் கிரெடிட் ஸ்கோர் பயன்படுகிறது. நீங்கள் ஒரு கடனை எப்படி திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள்? உங்களுடைய கடன் பயன்பாடு எப்படி இருக்கிறது? கடன் வரலாற்றின் காலம் எப்படி இருக்கிறது? என்பதை பொறுத்து தான் இந்த ஸ்கோர் அமையும். எனவே கடன் பெறுவதற்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் முக்கியம். இந்தப் பதிவில் கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண் ஆகும். நீங்கள் எந்த ஒரு கடன் வாங்கினாலும் வங்கிகள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பார்த்து தான் கடன் தரலாமா? அல்லது வேண்டாமா? என்பதை நிர்ணயிக்கும். கிரெடிட் ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால் எந்தவித தயக்கமும் இன்றி வங்கிகள் கடன் தரும். அதுவே கிரெடிட் ஸ்கோர் 700-க்கும் கீழிருந்தால் கடனை நீங்கள் திருப்பி செலுத்தும் முறை சரி இல்லை என்று வங்கிகள் முடிவெடுத்து விடும். இதனால் கடன் கிடைப்பது சிரமமாகலாம்.

பேமெண்ட் ஹிஸ்டரி: கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களுக்கு சரியான நேரத்தில் பணம் திருப்பிச் செலுத்த வேண்டும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தாமதமாக அல்லது தவறவிட்ட EMI-களால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கலாம். எனவே சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கடன் பயன்பாட்டு விகிதம்: இதை ஆங்கிலத்தில் "Credit utilisation ratio" என்று கூறுவர். அதிக கிரெடிட் பயன்பாட்டு விகிதம் இருப்பது கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே மொத்த கிரெடிட்டில் 30 சதவீதம் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
கிரெடிட் அறிக்கைகளில் பிழைகள்: உங்களுடைய கிரெடிட் அறிக்கையில் ஏதேனும் பிழை பதிவாகி இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். கடன் பதிவு, கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை போன்ற முக்கிய தகவல்கள் தவறாக இருந்தால் உடனடியாக கிரெடிட் கார்டு வழங்குனரிடம் புகார் அளிக்க வேண்டும். ஏனெனில் இதுவும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிக்கிறது. ஒருவேளை மோசடியாக உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி யாரேனும் தவறாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதுவும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மோசமாக பாதிக்கும். எனவே அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
புதிதாக கடன் பெறுதல்: நீண்ட கால கடன் வரலாறு இருந்து உங்கள் கிரெடிட்டை நீங்கள் சரியான முறையில் நிர்வகித்து இருந்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும் ஆனால் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு சில காலம் கிரெடிட் ஸ்கோரை அவை எதிர்மறையாக பாதிக்கலாம். ஆனால் சரிவர நீங்கள் கடனை திருப்பி செலுத்தினால் மீண்டும் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்.
கடன் தர கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்தல்: கடன் வழங்குபவர் கிரெடிட் கார்டு கடன்கள் அல்லது பிற கடன்களை வழங்குவதற்காக உங்கள் கடன் வரலாற்றை சரிபார்க்கும் போது அவை உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம். அதுவே நீங்களே உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கிறீர்கள் என்றால் இது போன்ற நேரங்களில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையாது.
அடிக்கடி புதிய கிரெடிட் கார்டுகளைப் பெறுதல்: சில மாதங்களில் வெவ்வேறு கடன் வழங்குனரிடமிருந்து கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையலாம். அதோடு உங்கள் நிதி சுமையை அவை அதிகரிக்கும் வாய்ப்புண்டு.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications