குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை திறம்பட நிர்வகிப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு முக்கியமான சவாலாகும். ஏனெனில் ஒரு குடும்பத்தில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் பொருளாதார ரீதியாக தங்கள் மனைவியையும் சார்ந்து இருக்கின்றனர். குடும்ப வரவு செலவுகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் குறிப்பிட்ட அளவு தொகையை மாதம் மாதம் சேமிக்க முடியும். இந்த பதிவில் இல்லத்தரசிகள் தங்கள் குடும்பத்தின் நிதியை திறம்பட நிர்வகித்து பணம் சேமிப்பதற்கான டிப்சை பார்ப்போம்.
பட்ஜெட்டை உருவாக்கவும்: உங்கள் மாத வருமானம் மற்றும் செலவுகளை அடிக்கோடிட்டு காட்டும் தெளிவான பட்ஜெட்டை உருவாக்கவும். பில்கள், மளிகை பொருட்கள், போக்குவரத்து செலவுகள் உட்பட உங்கள் செலவினங்களை வகைப்படுத்தவும். ஒரு பட்ஜெட்டை வைத்திருப்பது உங்கள் நிதி நிலையில் விரிவான பார்வையை உங்களுக்கு வழக்கும். இதன் மூலம் எந்த செலவுகளை குறைக்கலாம் என்பதை எளிதில் அடையாளம் காண முடியும்.

உணவைப் பற்றிய திட்டமிடல்: உணவை முன்கூட்டியே திட்டமிடுவது மளிகை சாமான்களில் பணத்தை சேமிக்க ஒரு சிறந்த வழியாகும். வாராந்திர உணவு திட்டத்தை உருவாக்கி ஷாப்பிங் பட்டியலை உருவாக்கவும். அதற்கு தேவையான பொருட்களை மொத்த விலையில் வாங்கவும். தினம் தினம் வீட்டில் சமைக்கப்படும் உணவை வீணாக்காமல் பயன்படுத்தவும்.
கூப்பன் மற்றும் கேஷ்பேக்: மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபாயயோகப் பொருட்களை வாங்கும்போது கூப்பன்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பல கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் நீண்ட காலத்திற்கு பணத்தைச் சேமிக்க உதவும் லாயல்ட்டி திட்டங்களை வழங்குகின்றன. கேஷ்பேக் ஆப்ஸ் மற்றும் இணையதளங்களைப் பயன்படுத்துவது கூடுதல் சேமிப்பை வழங்கலாம்.
பயன்பாட்டுச் செலவுகளை குறைக்கவும்: உங்கள் பயன்பாட்டு செலவுகள் குறித்து கவனமாக இருங்கள். எந்த ஒரு சாதனங்களும் பயன்பாட்டில் இல்லாத போது அவற்றை ஆப் செய்து வைக்கவும். ஆற்றல் திறன் உள்ள உபகரணங்களுக்கு மாற முயற்சிக்கலாம். உதாரணமாக சிலர் வீட்டில் பயன்படுத்தப்படும் ஏசிகளுக்கு 2 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற ஏசிகள் அதிக மின்சார பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். இதன் காரணமாக உங்களுடைய எலக்ட்ரிசிட்டி பில் அதிகரிக்கலாம். எனவே அவற்றை மாற்றி 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிகளுக்கு மாற முயற்சிக்கலாம். இது போல் உங்களுடைய தினசரி பயன்பாட்டுச் செலவுகளில் இருக்கும் சிறு சிறு நுணுக்கங்களை கண்டறியுங்கள்.
உங்கள் வேலையை நீங்களே செய்து கொள்ளுங்கள்: வீட்டில் ஏற்படும் பழுது பார்த்தல், தோட்டம் அமைத்தல், தையல் போன்றவற்றை நீங்களே செய்து கொள்வது உத்தமம். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு தொகையை சேமிக்கலாம்.
அவசர நிதி: எதிர்பாராத விதமாக மருத்துவ செலவுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். எனவே அவசர நிதியை உருவாக்கி வைக்கலாம். மருத்துவ கட்டணம் அல்லது வீட்டு பழுதுபார்ப்பு போன்ற எதிர்பாராத செலவுகளுக்கும் சேமிப்பை ஒதுக்கி வைப்பது நல்லது. உங்கள் வழக்கமான பட்ஜெட்டில் செலவு செய்யாமல் பிறரிடமிருந்து கடன் வாங்காமல் மேற்கண்ட டிப்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும்.


Click it and Unblock the Notifications