மாதம் மாதம் சம்பளத்தின் ஒரு பகுதியை கண்டிப்பாக மளிகை சாமான் வாங்குவதற்கு ஒதுக்கியாக வேண்டும். இது அனைத்து குடும்பங்களுக்கும் உள்ள அத்தியாவசிய செலவு. எனவே தேவைப்படும் பொருட்களில் எந்தவித குறைவும் இல்லாமல் கண்டிப்பாக வாங்கி தான் ஆக வேண்டும். ஆனால் உங்களுடைய மளிகை சாமான் பட்ஜெட்டில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் உங்களால் மாத மாதம் குறைந்தது 25 சதவீதம் வரை சேமிக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு தோன்றலாம்.. ஆனால் கீழ்காணும் டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால் கண்டிப்பாக இது சாத்தியமே.
பசியுடன் கிராசரி ஷாப்பிங் செய்யாதீர்கள்: மினசோட்டா பல்கலைக்கழகத்தில் உள்ள கார்ல்சன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் நடத்திய ஆய்வின்படி, மளிகை பொருட்கள் வாங்க செல்பவர்கள் வெறும் வயிற்றில் செல்லும்போது.. அதிக அளவிலான பொருட்களை வாங்குகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பசியாக இருக்கும் போது அவர்கள் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றி பிற பொருட்களையும் காரணம் இன்றி வாங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே வெறும் வயிற்றில் ஷாப்பிங் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.

மளிகை சாமான்கள் வாங்குவதற்கு லிஸ்ட்டை உருவாக்குங்கள்: இது பலரது வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு விஷயம்தான். மளிகை சாமான்கள் வாங்க வேண்டும் என்றாலே.. உடனே ஒரு லிஸ்ட்டை தயாரித்து விடுவார்கள். முதலாவதாக இது போன்ற லிஸ்ட் தயாரிப்பது மளிகை சாமான் வாங்குபவருக்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை தெரிந்து கொள்ள உதவும்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எதையும் மறந்து போகாமல் வாங்க முடியும். ஷாப்பிங் தொடர்பான ஒரு ஆய்வில் திட்டமிடாமல் எந்தவித லிஸ்டும் எடுத்துச் செல்லாமல் மளிகை சாமான் வாங்க செல்பவர்கள் தேவைக்கு அதிகமாக 2 மடங்காக செலவழிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அதாவது எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்பதே தெரியாமல் பார்ப்பதையெல்லாம் எடுத்து விடுகின்றனராம். எனவே எப்பொழுதும் ஷாப்பிங் செய்யும்போது ஒரு லிஸ்ட்டை வைத்திருங்கள்.
சலுகைகளின் போது மளிகை பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்: பல சூப்பர் மார்க்கெட்ட்களில் வழங்கும் சலுகைகளில் ஈர்க்கப்படாமல் இருப்பது முக்கியம். உதாரணமாக 4000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று சில சூப்பர் மார்க்கெட்களில் சலுகைகள் அறிவிக்கப்படலாம். ஆனால் இது போன்ற காரணங்களால் மக்கள் தங்களுடைய பட்ஜெட்டை மீறி அதிகமாக 500 ரூபாய் பரிசுக்காக செலவழிக்கக் கூடும். எனவே இது போன்ற ஆஃபர்களை பயன்படுத்துவதற்காக மட்டுமே ஷாப்பிங் செய்யாதீர்கள்.
சலுகைகளை பயன்படுத்துங்கள்: மேலே சொல்லும்போது ஆஃபர்களை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டு இங்கு மீண்டும் பயன்படுத்த சொல்வது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த சலுகை என்பது ஒரு சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இது போன்ற விஷயங்களை பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்தால் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று கூறும் சலுகைகளை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்ததாக இருக்கும்.
ஹோல் சேல் கடைகளில் பொருட்களை வாங்குங்கள்: சூப்பர் மார்க்கெட்களில் MRP விலையை விட 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். அதுவே ஹோல்சேல் கடைகளில் வாங்கும் போது 20 முதல் 30 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். உதாரணமாக 1 கிலோ உளுந்து விலை சூப்பர் மார்க்கெட்களில் 180 ரூபாய் என்றால் ஹோல்சேல் கடைகளில் 140 அல்லது 150 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். எனவே உள்ளூரில் இருக்கும் ஹோல்சேல் கடைகளைத் தொடர்பு கொண்டு பொருட்களை வாங்க முயற்சி செய்யுங்கள்.
பொருட்களுக்கான பிரத்தியேக கடைகளுக்குச் செல்லுங்கள்: இது பலருக்கும் சற்று அலைச்சல் தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால் மளிகை சாமான் மூலம் சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். உதாரணமாக அப்பளம், வடகம் வத்தல் போன்றவற்றிற்கு தனி கடை இருக்கும்.
அதே போல பருப்பு வகைகளுக்கென்று தனிக்கடைகள் இருக்கும். இது போன்ற தனி கடைகளுக்கு சென்று அந்தந்த பொருட்களை வாங்கும் போது மொத்தமாக மளிகை கடைகளில் கிடைக்கும் பொருட்களை விட குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும். மேலும் வாங்கும் பொருட்களுக்கான அளவும் கடைகளை விட சற்று அதிகமானதாக இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு பொருள் மற்றும் பணம் இரண்டும் மிச்சமாகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications