பிக்சட் டெபாசிட்கள் பிரபலமான முதலீட்டு விருப்பமாக உள்ளது. இது உங்கள் பணத்திற்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. ஆனால் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் கிடைப்பதால் எந்த வங்கியை தேர்ந்தெடுப்பது? என்பது சில நேரங்களில் உங்களுக்கு சவாலாக இருக்கலாம். பிக்சட் டெபாசிட் கணக்கு திறப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில காரணிகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
உங்கள் FD கணக்கைத் திறக்கும் போது கீழ்க்காணும் சில விஷயங்களைக் கருத்தில் கொள்வது அதிக வருமானத்தைப் பெற்று தர உதவும்.

வட்டி விகிதங்கள்: வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் என பல வங்கிகளிலும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி அவற்றுள் போட்டி வட்டி விகிதங்களும் வழங்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு வங்கியிலும் உள்ள வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து சிறந்த வங்கியைத் தேர்வு செய்ய வேண்டும்.
உயரும் வட்டி விகிதங்கள்: சமீப காலமாக FD வட்டி விகிதங்களை பல வங்கிகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் SBI பேங்க், பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகளிலும் FD திட்டத்தின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. எனவே எந்த வங்கியில் உங்களுக்கு ஏற்ற திட்டம் அதிக வட்டியில் வழங்கப்படுகிறது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு நீங்கள் இணையதளங்களைப் பயன்படுத்தலாம்.
வங்கியின் நற்பெயர்: நல்ல நற்பெயரை கொண்ட வங்கிகளை தேர்ந்தெடுப்பது முக்கியம். ஏனெனில் இது உங்கள் முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சில நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலங்களில் பிக்ஸட் டெபாசிட் கிடைக்கும் வங்கிகளை தேர்வு செய்யுங்கள். அதேபோல உங்கள் நிதி இலக்குடன் ஒத்துப் போகும் முதிர்வு காலத்தை தேர்வு செய்து டெபாசிட் செய்யுங்கள். ஏனெனில் சிலருக்கு அடுத்து 6 மாதங்களுக்குள் ஏதேனும் செலவு இருக்கலாம். இது போன்ற நபர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தொகையை டெபாசிட் செய்வது சிறந்ததாக இருக்காது.
முன்கூட்டியே திரும்ப பெறுதல்: முதிர்வு காலத்திற்கு முன்பே பிக்சட் டெபாசிட்களை திரும்ப பெறுவதற்கான அபராதங்கள் மற்றும் பிற விதிமுறைகளை சரிபார்க்கவும். FD திட்டங்கள் பொதுவாக மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. நீங்கள் ஒரு மூத்த குடிமக்களாக இருந்தால் இந்த வட்டி விகிதங்கள் குறித்தும் தெரிந்து கொண்டு பின்னர் டெபாசிட் செய்யுங்கள்.
குறுகிய கால பிக்சட் டெபாசிட்கள்: பலருக்கும் 7 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான முதிர்வு காலங்களுடன் பிக்சட் டெபாசிட்கள் கிடைக்கின்றன என்பது தெரியாமல் உள்ளது. எனவே இது போன்ற குறுகிய கால பிக்சட் டெபாசிட்களையும் தேவைப்பட்டால் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய உடனடி நிதி இலக்குகளுக்காக இது போன்ற திட்டத்தில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். வட்டி விகிதங்கள் பொதுவாக 7 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு குறைவாக இருக்கும். எனவே அதிக தொகையை முதலீடு செய்யும்போது இது போன்ற டெபாசிட்களில் நல்ல லாபம் பெறலாம்.
சிறப்பு பிக்சட் டெபாசிட்கள்: பண்டிகைகள் அல்லது குறிப்பிட்ட காலங்களில் வங்கிகள் சிறப்பு பிக்சட் டெபாசிட்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் 444 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட பிக்சட் டெபாசிட்கள், 999 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்டு பிக்சட் டெபாசிட்கள் என அந்தந்த வங்கிகளுக்கு ஏற்ற திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்யும். இவை உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் நீங்கள் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். இது போன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு FD-களை அறிமுகம் செய்யும்போது வட்டி விகிதங்களும் சற்று அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications