டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதால், மோசடிகள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பலர் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பணத்தை இழக்கின்றனர். அதிலும் குறிப்பாக கிரெடிட் கார்டு மோசடிகள் நம் நாட்டில் நிறைய நடக்கிறது. நாளொன்றுக்கு குறைந்தது 2 செய்திகளாவது பண இழப்பு தொடர்பாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் இடையே விழிப்புணர்ச்சி இல்லாததுதான். இந்தப் பதிவில் கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான 5 டிப்ஸ்களைப் பார்ப்போம்.
தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்கவும்: இது பொதுவான விஷயம்தான். உங்களுடைய பின் நம்பர், CVV கோடு மற்றும் தனிப்பட்ட விவரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் யாரிடமும் வழங்காமல் இருங்கள். தொலைபேசியில் இது போன்ற தகவல்களைக் கேட்டு உங்களுக்கு அழைப்பு வந்தால் அது மோசடிக்காரர்களின் யுக்தியாக இருக்கலாம். ஏனெனில் எந்த ஒரு வங்கியோ அல்லது கார்டு வழங்குனரோ உங்களிடம் தனிப்பட்ட தகவல்களைக் கேட்க மாட்டார்கள்.

உங்கள் கணக்கின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்கவும்: உங்கள் கணக்கின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் அல்லது பிற கட்டணங்கள் எதுவும் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக ரசீதுகளுடனே ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய பரிவர்த்தனையின் விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்தவும்: நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது "HTTPS" கொண்ட பாதுகாப்பான இணையதளங்களில் மட்டுமே ஷாப்பிங் செய்ய வேண்டும். இதே போல தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்து வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை கொடுக்கக் கூடாது. இதன் மூலம் உங்களுடைய விவரங்களை தெரிந்து கொண்டு உங்களுக்கே தெரியாமல் அவற்றைப் பயன்படுத்தி அதில் இருக்கும் பணத்தை எடுத்து விடுவார்கள்.
நோட்டிபிகேஷன்-ஐ ஆன் செய்து வைத்திருங்கள்: எந்த ஒரு கிரெடிட் கார்டு பரிவர்த்தனை நடந்தாலும் அதன் விவரங்கள் குறித்து உங்கள் வங்கியில் இருந்து மொபைல் நம்பருக்கு தெரிவிக்கும் வகையில் நோட்டிபிகேஷன்-ஐ ஆன் செய்து வைத்திருங்கள். இது வேறு ஏதேனும் பரிவர்த்தனை நடந்தால் உங்களுக்கு தெரியப்படுத்தி விடும்.
உங்களுக்கு கிரெடிட் கார்டை பாதுகாப்பாக வைத்திருங்கள்: உங்கள் கிரெடிட் கார்டைப் பொதுவில் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்தவும். எல்லா நேரங்களிலும் பிறர் கண்ணுக்கு தெரியும்படி வைக்க வேண்டாம். அதேபோல வங்கி அறிக்கைகள், தனிப்பட்ட தகவல்களை தூக்கி எறிவதற்கு முன்பு அவற்றை பிறருக்குத் தெரியாத வண்ணம் அகற்றவும்.
கிரெடிட் கார்டு அறிக்கையை தவறாமல் சரி பார்க்கவும்: உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையை தவறாமல் சரி பார்ப்பதன் மூலம் தேவையற்ற பரிவர்த்தனை நடந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படி நடந்திருந்தால் அவற்றுக்கு நடவடிக்கை எடுக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications