நாடு முழுவதும் தற்போது வாடகை வீட்டில் இருப்பவர்கள்.. வாடகை செலவுகள் கணிசமாக அதிகரித்து இருப்பதை உணர்திருப்பீர்கள். வாடகை கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும், குறிப்பாக பெரு நகரங்களில் கணிசமாக உயர்ந்து வருகின்றன. இந்த அதிகரிப்பால், வீட்டு வாடகை பெரும்பாலானோருக்கு மாதாந்திர செலவில் பெரும் பங்கை வகிக்கிறது. நீங்கள் வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் செலவுகளை குறைக்க பின்வரும் டிப்ஸ்களைப் பின்பற்றலாம்.
மாதாந்திர பட்ஜெட்டில் வாடகைக்கு முன்னுரிமை கொடுங்கள்: தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய செலவாகத்தான் பார்க்கப்படுகிறது. மாதம் மாதம் வாடகையும் செலுத்தி பிற செலவுகளையும் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு துல்லியமான திட்டமிடல் அவசியம். எனவே மாத வருமானம் பெறுபவர்களாக இருந்தாலும் அல்லது சொந்தமாக தொழில் செய்து கொண்டிருப்பவராக இருந்தாலும் முதலில் வாடகை செலுத்த முன்னுரிமை கொடுங்கள். இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த மாத பட்ஜெட்டையும் திறம்பட நிர்வகிக்க முடியும். முதலில் வாடகையை செலுத்தி விட்டால் அதன் பிறகு பிற செலவுகளில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

உங்கள் வாடகையை ஆன்லைனில் செலுத்துங்கள்: வீட்டு வாடகை பணமாக மட்டுமே செலுத்தும் காலமெல்லாம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் வாடகைதாரர்கள் தங்கள் வாடகையை ஆன்லைனில் செலுத்துகின்றனர். இதற்கு கிரெடிட் கார்டுகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வாடகை செலுத்துதல் மற்றும் பிற சலுகையையும் வழங்குகின்றன. இதனால் மாதாந்திர வாடகையில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.
அத்தியாவசியமற்ற செலவுகளை குறைக்கவும்: வீட்டுச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. மாதம் இதற்கு குறிப்பிட்ட தொகையை செலவழித்து தான் ஆக வேண்டும். அனால் உங்களுடைய விருப்பத்திற்கு செலவு செய்வதை தவிர்க்க முயற்சி செய்யலாம். உதாரணமாக ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சந்தாக்கள், ஜிம் மெம்பர்ஷிப்கள் போன்ற செலவுகளை குறைக்க முயற்சி செய்யலாம். இதற்கு பதிலாக யூடியூப் பார்ப்பதை வாடிக்கையாக்கலாம். சில நபர்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பெற கட்டணம் செலுத்தும் போது ஆட்டோ பே ஆப்ஷனைக் கிளிக் செய்து இருப்பார்கள். இதன் காரணமாக மாதம் மாதம் அவர்களுடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்படும். எனவே எந்த ஒரு ஸ்டீமிங் சேவையையும் நீங்கள் பார்க்கவில்லை என்றால் ஆட்டோ பே ஆப்ஷனைக் கேன்சல் செய்து விடுங்கள்.
பயன்பாட்டு செலவுகளை சேமிக்கவும்: தண்ணீர், மின்சாரம் அதிகம் பயன்படுத்தினால் அதிக செலவுகளுக்கு வழிவகுக்கும். உங்கள் பில்களை குறைப்பதற்கு சில யுத்திகளை பின்பற்றலாம். உதாரணமாக பகல் நேரங்களில் இயற்கை ஒளியைப் பயன்படுத்தலாம். பேன் மற்றும் லைட் போன்ற சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாத போது ஆப் செய்து வைக்கலாம். கூடுதலாக காம்பேக்ட் ஃப்ளோரசண்ட் லாம்புகளை உபயோகப்படுத்தலாம். பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் யூட்டிலிட்டி பேமண்ட்களுக்கு கேஷ் பேக் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகின்றன. இந்த சலுகைகளைப் பயன்படுத்தி உங்கள் சேமிப்பை மேலும் அதிகரிக்கலாம்.
வாடகை குறித்து பேச்சு வார்த்தை நடத்துங்கள்: வீட்டு உரிமையாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வாடகையில் ஏதேனும் குறைக்க முடியுமா? என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த குத்தகைக்காரராக இருந்தால் வாடகைக்கு விட்டிருக்கும் நபர் உங்கள் கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க வாய்ப்புகள் உள்ளன.
வேறொரு வீட்டிற்கு குடிபெயரலாம்: நகரத்தில் உள்ள வீடுகளை விட நகரத்திற்கு வெளியில் இருக்கும் வீடுகள் குறைந்த வாடகையில் கிடைக்கும். பெரிய பெரிய அப்பார்ட்மெண்டுகளில் குடியேறுவதற்கு பதிலாக உங்களுக்கு ஏற்ற வேறு வீடுகளை தேர்வு செய்யலாம். இதன் மூலம் மாத வாடகைச் செலவுகளைக் கணிசமாக குறைக்க முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications