இன்றெல்லாம் தனி நபர்கள் தேவையான நேரங்களில் கடன் பெறுவதற்கு கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் கிரெடிட் கார்டுகளை வழங்குவதால் சிறந்த சலுகையை வழங்கும் கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்வது அவசியம். அதோடு ஒவ்வொரு கிரெடிட் கார்டும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே கிரெடிட் கார்டு பெற்றிருந்தாலும் அல்லது புதிதாக கிரெடிட் கார்டு பெற இருந்தாலும் சிறந்த நிதி முடிவை எடுப்பது அவசியம். இந்தப் பதிவில் வெவ்வேறு வகையான கிரெடிட் கார்டுகள் குறித்து பார்ப்போம். இதன் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டு பெறும்போது உங்களுக்கு ஏற்ற கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யலாம்.
கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்கும் கடனாகும். குறிப்பிட்ட கடன் வரம்புடன் கடன் பெற இது அனுமதிக்கிறது. ஒவ்வொரு மாதமும் நீங்கள் முழு தொகையாகவோ அல்லது குறைந்தபட்ச நிலுவைத் தொகையாகவோ கிரெடிட் கார்டு கடன்களைத் திருப்பிச் செலுத்தலாம்.

கிரெடிட் கார்டுகளின் நன்மைகளில் கேஷ்பேக், ரிவார்ட் பாயிண்ட்டுகள் போன்றவை அடங்கும். ஆனால் நிலுவைத் தொகையை தவறாமல் செலுத்த வேண்டும். ஒருவேளை தவறவிட்டால் வட்டி கட்டணங்கள் அதிகரித்து நிதி சிக்கலில் மாட்டும் அபாயம் உள்ளது. ஏனெனில் க்ரெடிட் கார்டுகளுக்கு 35 முதல் 40 சதவீதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
கிரெடிட் கார்டுகளின் வகைகள்: ஒருவர் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் முன் கிரெடிட் கார்டுகளின் வகைகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ரிவார்டு கிரெடிட் கார்டுகள்: ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏதேனும் பொருளை வாங்கும் போது அதற்கு ரிவார்டு பாய்ண்டுகள் வழங்கப்படும். ரிவார்ட் பாயிண்ட்களை வைத்து பயன டிக்கெட் முன்பதிவு செய்வது, பரிசுகளை வாங்குவது போன்ற விஷயங்களை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கிரெடிட் கார்டுகள் ஏற்றது.
ட்ராவல் கிரெடிட் கார்டுகள்: இந்த கிரெடிட் கார்டுகளை அடிக்கடி பயணம் செய்பவர்கள் பயன்படுத்தலாம். விமான நிலைய கட்டணத்தில் தள்ளுபடி, இலவச விமான ஓய்வறை அணுகல், ஹோட்டல்கள் போன்றவற்றில் அடிக்கடி பணம் செலவழிப்பவர்களும் இதுபோன்ற கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்.
எரிபொருள் கிரெடிட் கார்டுகள்: எரிபொருள் நிரப்புவதற்கு அதிகம் செலவழிக்கும் நபர்களுக்கு இந்த கிரெடிட் கார்டுகள் ஏற்றது. பெட்ரோலில் அதிக செலவு செய்யும் நபர்கள் இந்த கிரெடிட் கார்டை பெறலாம். எரிபொருள் செலவுகளில் சேமிக்கவும், அதற்காக தள்ளுபடிகளை பெறவும் ரிவார்டு பாய்ண்டுகளை பெறவும் இந்தக் கிரெடிட் கார்டுகள் உதவியாக இருக்கும்.
கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள்: இந்த கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நீங்கள் செலவு செய்யும்போது குறிப்பிட்ட சதவீதம் உங்களுக்கு கேஷ்பேக் வடிவில் வழங்கப்படும். மளிகை பொருட்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்ட பயனரின் அன்றாட செலவுகளுக்கு இந்த கிரெடிட் கார்டுகள் ஏற்றது. கேஷ் பேக் சலுகைகள் உங்கள் மாதாந்திர கட்டணத்தை வெகுவாக குறைக்கிறது.
லைஃப் ஸ்டைல் கிரெடிட் கார்டுகள்: உணவு, ஷாப்பிங், பொழுதுபோக்கு ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு செலவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கிரெடிட் கார்டுகள் ஏற்றது. லைஃப் ஸ்டைல் வகைகளில் பல்வேறு வகையான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக உணவுகளுக்கு தள்ளுபடி, ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு தள்ளுபடிகள் போன்ற சலுகைகள் இதற்கு வழங்கப்படுகிறது.
ஸ்டுடென்ட் கிரெடிட் கார்டுகள்: மாணவர்கள் தங்கள் நிதியை நிர்வகிக்கவும், பொறுப்புடன் கடனை செலுத்தவும் இந்த கிரெடிட் கார்டு உதவியாக இருக்கும். இளம் வயதினர் முதல் முறையாக கிரெடிட் கார்டு பெறும்போது ஸ்டுடென்ட் கிரெடிட் கார்டுகளை பெறலாம். இதன் சிறந்த நன்மைகளில் ஒன்று குறைந்த கடன் வரம்பாகும். இதன் மூலம் முதல் முறையாக கிரெடிட் கார்டு பெறும் மாணவர்கள் பொறுப்பாக செலவு செய்ய முடியும்.
எனவே கிரெடிட் கார்ட் பெற விண்ணப்பிக்கும் போது உங்களுடைய செலவு முறையை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கு ஏற்ற கிரெடிட் கார்டை தேர்வு செய்வது அவசியம்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications