130 கோடி பேர் வாழும் இந்தியாவில் வெறும் 38 சதவீதம் பேர்தான் எந்தக் கடனும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறதல்லவா? இதற்கு காரணம் இருக்கிறது. கைநிறைய சம்பாதித்தாலும் அதை முறையாக செலவழிக்காமல் கடனில் விழுவதுதான் முக்கியக் காரணம். சிறப்பான சேமிப்பு, தேவையான செலவு, முன்கூட்டி முதலீடு ஆகியவற்றை திறமையாகக் கையாண்டால் கடன் சுமைக்கு ஆளாக மாட்டோம்.
நாம் ஏன் கடனாளி ஆகிறோம்?: நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப வருமானம் இல்லாதது முக்கிய காரணம். அதை சரிகட்டுவதற்காக கடன் வாங்கி சமாளிப்பது அடுத்த காரணம். அதையே நமது தேவைகளை எதிர்பார்த்து சேமித்து அல்லது முதலீடு செய்து வைத்தால் வீணாகக் கடன் வாங்கத் தேவையில்லை அல்லவா? அதை எப்படி என்று பார்க்கலாம்.

ஒரு ஆய்வு 1727 பேரிடமிருந்து சில கேள்விகளுக்கான பதிலை வாங்கியது. அவர்கள் 18-30, 30-45, 45-60 மற்றும் 60+ என நான்கு குழுவாகப் பிரித்தது. பர்சனல் பைனான்ஸ் தொடர்பான 6 முக்கிய அம்சங்களில் அவர்களது புரிதல் மற்றும் பழக்கங்களை இந்த ஆய்வு கண்டறிந்தது. அந்த 6 முக்கிய அம்சங்கள் என்னவென்றால், இலக்கு திட்டமிடல், பட்ஜெட் மற்றும் வரி நிர்ணயம், கடன் நிர்வாகம், இன்சூரன்ஸ் திட்டமிடல், முதலீடு திட்டமிடல், சொத்துகள் திட்டமிடல் ஆகியவை ஆகும்.
மக்களுக்கு நிதி இலக்கு மற்றும் நிகர சொத்து மதிப்பு பற்றி ஓரளவு ஞானம் இருந்தாலும் ரிட்டயர்மென்ட் திட்டமிடல், சரியான நிதி வகைகளை வைத்து முதலீடு செய்தல், போதிய இன்சூரன்ஸ் கவரேஜ் இருப்பதில்லை என்று இந்த ஆய்வு நடத்திய ஃபின்னோவேட் (Finnovate) நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் நேஹால் மோடா கூறுகிறார்.
இலக்கு திட்டமிடல்: மேற்சொன்ன ஆய்வில் இந்தியாவில் பணக்காரர்களில் 63 சதவீதம் பேரும், செல்வாக்கு மற்றும் அதிக சொத்து வைத்துள்ள தனிநபர்களும் தெளிவான நிதி இலக்குகளை வைத்துள்ளனர். 69 சதவீதம் பேருக்கு தங்களது நிகர சொத்து மதிப்பு தெரியும். 65 சதவீதம் பேர் தங்களது ரிட்டயர்மென்ட்டுக்காகப் போதிய சேமிப்பை செய்யவில்லை. இந்த ஆய்வு முடிவுகள் நீண்டகால நிதியியல் பாதுகாப்பில் பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டுகிறது.
பட்ஜெட் மற்றும் வரி நிர்ணயம்: 40 சதவீதம் பேர் தேவையான அளவுக்கு அவசரகால நிதியை வைத்திருக்கவில்லை. 27 சதவீதம் பேர் தங்களது வரியைப் பற்றி சரியாகத் திட்டமிடவில்லை.
கடன் நிர்வாகம்: மொத்தத்தில் 38 சதவீதம் பேர் தான் எந்தக் கடனுக்கும் ஆளாகவில்லை. மோசமாகச் சொல்லவேண்டுமென்றால் 31 சதவீதம் பேர் 60 மற்றும் அதற்குமேல் வயதானவர்களும் இஎம்ஐகளில் உழன்று கொண்டிருக்கின்றனர்.
இன்சூரன்ஸ் திட்டமிடல்: ஹெல்த்தை பொறுத்தவரை 73 சதவீதம் பேர் ஒன்று இன்சூர் செய்திருக்க மாட்டார்கள் அல்லது தேவைக்குக் குறைவாக இன்சூர் செய்திருப்பார்கள். 74 சதவீதம் பேர் போதிய லைப் இன்சூரன்ஸ் வைத்திருக்க மாட்டார்கள். இதனால் எதிர்பாராமல் ஏற்படும் அசம்பாவிதங்களின்போது பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
முதலீடுகள்: 81 சதவீதம் பேர் ஈக்குவிட்டிகளில் முதலீடு செய்துள்ளனர். 53 சதவீதம்பேர் தங்களது சேமிப்பில் 30 சதவீதத்துக்கும் குறைவாக ஈக்குவிட்டியில் முதலீடு செய்துள்ளனர். 54 சதவீதம் பேருக்கு தங்களது முதலீட்டின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் பற்றி தெரியவில்லை.
சொத்து திட்டமிடல்: 40 சதவீதம் பேர் தங்களது நிதி ஆவணங்களை திரட்டவில்லை. மூத்த குடிமக்களில் இந்த எண்ணிக்கை 26 சதவிதமாக உள்ளது. அத்துடன் 36 சதவீதம் பேர் தங்களது சொத்துக்கு நாமினிகளையும், பயனாளர்களையும் முழுமையாக குறிப்பிடவில்லை.
வயது வாரியாக ஆய்வு:
18-30 வயதுக்குட்பட்டவர்களின் பைனான்ஸ் பிட்னஸ் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்கிறது. காரணம் சரியான திட்டமிடல் இல்லாமையாகும்.
30-45 வயதுக்குட்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்களது வருவாயில் 30 சதவீதத்துக்கும் குறைவாக சேமிக்கின்றனர். இதனால் அவர்களது ரிட்டயர்மென்ட் வாழ்க்கை ரிஸ்க் ஆகி விடுகிறது.
45-60 வயதுக்குட்பட்டவர்கள் ஓரளவு சேமிப்பு பழக்கம் இருந்தாலும் வரி திட்டமிடலில் மோசமாக இருக்கின்றனர்.
60 மற்றும் அதற்கும் மேலான வயதினர் தங்களது தற்போதைய நிகர மதிப்பைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இதனால் ரிட்டயர்மென்ட்டுக்குப் பிந்தைய செலவுகளை நிர்வகித்தல் மிகவும் சிக்கலாகிவிடுகிறது
ஏன் இந்த பைனான்சியல் பிட்னெஸ் ஸ்கோர் மிகவும் குறைவாக உள்ளது?: ஆன்லைன் விடியோக்கள், சோசியல் மீடியா நிகழ்ச்சிகள், முதலீடு பற்றிய கருத்தரங்கங்கள் போன்ற பல வகையான ஆலோசனைகள் குவிந்திருந்தாலும் பைனான்ஸ் பற்றிய அறிவு மக்களிடையே குறைவாகவே இருக்கிறது. நிறைய பேர் இன்னும் மியூச்சுவல் பண்டு, பங்குகளை விட சொத்துகள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
இந்திய மக்கள்தொகையை கணக்கிட்டால் அதில் 4 சதவீதத்துக்கும் குறைவானவர்களே மியூச்சுவல் பண்டு அல்லது பங்கு சார்ந்த சொத்துகளில் முதலீடு செய்கின்றனர். பெரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவில்தான் மிகக் குறைவாக 4.7 சதவீதம் பேருக்கு பங்கு பற்றிய அறிவு உள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் மூன்று மடங்கும், அமெரிக்காவில் நான்கு மடங்கும் அதிகமாக உள்ளது.
இதுபற்றி நேஹால் மோதா கூறுகையில் பணக்காரர்களில் பெரும்பாலனவர்கள் தங்களது பர்சனல் பைனான்ஸில் நிறைய தவறுகளை செய்து விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக,
1) நிதி இலக்கு இல்லாமல் முதலீடு செய்தல்
(2) போதிய டெர்ம் அண்டு ஹெல்த் கவர் இல்லை
(3) நல்ல லாபம் தராத முதலீடுகள்
(4) சரியான பெஞ்சுமார்க்கை அறியாமல் இருத்தல்
(5) பரம்பரைக்காக சேர்த்தலில் மோசமான திட்டமிடல்.
ஆகியவற்றை சொல்லலாம்.
இதில் பைனான்சியல் பிட்னஸ் குறைவாக இருப்பதற்கு காரணங்கள்-
1) பைனான்ஸ் முதலீடுகள் பற்றி குறைந்த அறிவு
(2) சரியான நேரத்தில் நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்காமல் இருத்தல்
(3) முறையற்ற காலகட்டத்தில் டிரேடிங்கில் முதலீடு செய்தல்
பைனான்ஸ் பற்றிய அறிவு ஒருவரை சரியான முடிவுகளை எடுக்கவும், பட்ஜெட்டை சிறப்பாக செய்யவும், சேமிப்பு திட்டமிடல், கடன் நிர்வாகம், வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களுக்கு நிதி, அவசரகாலங்களில் கடன் வாங்காமல் சமாளித்தல் போன்ற திறனை தரும்.
ரிசர்வ் வங்கி, செக்யூரிட்டிஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா, இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்டு டெவலப்மென்ட் அத்தாரிட்டி போன்ற அமைப்புகள் தொழில் குழுக்களுடன் சேர்ந்து நிறைய பைனான்சியல் கற்பித்தல் பயிற்சிகளை நடத்துகின்றன. இதன் மூலம் மக்களுக்கு நிதி திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
Story written by: Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications