சென்னை: நிதி சுதந்திரம் என்பது பலரின் கனவு என்றுதான் சொல்ல வேண்டும். நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து, விரும்பிய வாழ்க்கையை வாழ, நிதி சுதந்திரம் அவசியம். ஆனால், நிதி சுதந்திரத்தை எப்படி அடைவது? அதை அடைய சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம்.
நிதி சுதந்திரம் என்றால் என்ன?: நிதி சுதந்திரம் என்பது நாம் விரும்பிய வாழ்க்கையை வாழும் நிலையாகும். இதன் பொருள் நமது அன்றாட தேவைகள், ஆசைகள் மற்றும் இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணம் இருப்பது. நிதி சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை சேமிப்பது மற்றும் சம்பாதிப்பது மட்டுமல்ல. மாறாக நமது பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது.

நிதி சுதந்திரம் அடைந்த பிறகு ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டுமா என்று கேட்டால் அது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. சிலர் நன்கு சம்பாதித்துக் கொண்டு தாங்கள் விரும்பிய வாழ்க்கை வாழ்வதற்கு போதுமான தொகையை வைத்துக்கொண்டு பிறகு வேலைக்கு செல்வதை நிறுத்தி விடுவார்கள். இது அவர்களுடைய 50 அல்லது 55 வயதில் நடக்கும் ஒன்று. ஆனால் சிலர் இளம் வயதிலேயே நிதி சுதந்திரம் அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்களும் இதுபோன்ற டிப்ஸ்களைப் பின்பற்றலாம்.
உங்கள் இலக்குகளை தீர்மானியுங்கள்: நிதியைத் திறம்பட நிர்வகிப்பதற்கான முதல் படி, உங்களுடைய நிதி சுதந்திரம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது. அதாவது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள் இருக்கும். உதாரணமாக சிலர் வீடு வாங்குவதற்கு பணம் சேமிக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதற்காக சேமித்து முடித்ததும் அவர்கள் நிதி சுதந்திரம் அடைந்ததாக உணர்வார்கள். இது போன்ற உங்களுடைய இலக்கு என்ன என்பதை தீர்மானித்து அதற்கு ஏற்ப சேமிக்க தொடங்குங்கள்.
உங்கள் வசதிக்குள் வாழுங்கள்: இது நிதி சுதந்திரத்தின் அடிப்படை விதி. உங்கள் சம்பாத்தியத்தைவிட அதிகமாக செலவு செய்தால், கடன் சுமையில் சிக்கி, நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பது அவசியம். மாதாந்திர வரவுசெலவுத் திட்டங்களை உருவாக்கி அவற்றைக் கடைப்பிடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தேவையற்ற கடன்களைத் தவிர்க்கவும்.
அவசர செலவுகளுக்கான நிதியை உருவாக்குங்கள்: எதிர்பாராத மருத்துவ செலவுகள் போன்ற அவசர செலவுகளை சமாளிக்க, 3 - 6 மாத செலவுகளை உள்ளடக்கிய அவசர நிதியை உருவாக்குங்கள். இதன் மூலம் அவசர காலங்களில் கடனுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அவசரகால நிதிகளை பராமரிக்க FD அல்லது பிற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
கடன்களை நிர்வகிப்பது: கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், அவற்றை கவனமாக நிர்வகிக்க வேண்டும். அதிக வட்டி விகிதம் கொண்ட கடன்களை வாங்குவதைத் தவிர்க்கவும். பல்வேறு கடன்களை ஒரே கடனாக மாற்றுவது போன்ற வழிகளில் கடன்களைக் குறைக்க முயற்சி செய்யவும்.
உங்கள் வருமானத்தை பன்முகப்படுத்துங்கள்: அதாவது ஒரே வருமானத்தை நம்பி இருப்பது என்றுமே ஆபத்தானது. எனவே எப்படி பிற வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிலர் 9 - 5 வேலைகளில் இருப்பார்கள். இதுபோன்ற நபர்களும் கூடுதல் வருமானம் பெறுவதற்கான வழிகளைப் பற்றி ஆராயலாம். இதனால் ஒரு வேலை, உங்களை கைவிட்டாலும் மற்ற வேலைகளின் மூலம் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஓய்வுகால திட்டமிடல்: ஓய்வுகாலத்திற்கு பிறகு நிதி சார்ந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க, இளம் வயது முதல் ஓய்வுகாலத்திற்கு சேமிக்க தொடங்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பங்களிப்பு செய்யுங்கள். தேவைப்பட்டால், தனிப்பட்ட முறையில் ஓய்வுகால சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.
நிதி கல்வி: பணத்தை எப்படி சம்பாதிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது என்பது பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். நிதி நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறலாம். நிதி சார்ந்த புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் இணையதளங்களைப் படிக்கலாம். தொடர்ந்து சேமிக்கவும், முதலீடு செய்யவும் மற்றும் தேவையற்ற கடன்களைத் தவிர்க்கவும்.
இந்த 7 பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பதன் மூலம், நிதி சுதந்திரத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கலாம். எடுத்தவுடன் நிதி சுதந்திரத்தை அடைந்து விட முடியாது அதற்கு விடாமுயற்சி மற்றும் பொறுமை தேவை.
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications