இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்றாலே மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீடுகள் பெரியளவில் இருந்து வருகின்றது. இந்த 3 வருட காலகட்டத்தில் நல்ல லாபமும் கிடைத்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு சந்தையானது கடும் சரிவினைக் கண்ட நிலையில், இது குறைந்த விகிதத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு சரியான ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான் கடந்த 3 வருட காலகட்டத்தில் மியூச்சுவல் பண்ட்கள் பல நல்ல லாபத்தினை கொடுத்துள்ளது.
என்னென்ன பண்டுகள்?
நாம் இன்று இந்த பதிவில் 7 பண்டுகளை பார்க்க இருக்கிறோம்.
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் - 3 வருடத்தில் 376% லாபம் கிடைக்கும்
ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் - 164% வருமானம் கிடைக்கலாம்
பரோடா பிஎன்பி பரிபாஸ் மிட்கேப் ஃபண்ட் - 126%
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் - 217.26%
ஹெச்டிஎஃப்சி ஸ்மால் கேப் ஃபண்ட் - 206%
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் கமாடிட்டிஸ் - 297%
எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட் - 200%
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டின் என் ஏ வி- யானது 138 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இந்த பண்டிற்கு கிரிசில் 5 ஸ்டார் ரேட்டிங்கினை கொடுத்துள்ளது. இந்த பண்டின் மதிப்பு 3301.73 கோடி ரூபாயாகும். செலவின விகிதம் 2.67% ஆகும்.
இந்த ஸ்மால் கேப் பண்டில் 93.12% அளவுக்கு உள்நாட்டு ஈக்விட்டிகளில் முதலீடு செய்துள்ளது. இதில் குறிப்பாக 19.03% எனும் அளவுக்கு லார்ஜ் கேப் பண்டுகளில், 7.07% எனும் அளவுக்கு மிட் கேப் பண்டுகளிலும், ஸ்மால் கேப் பங்குகளில் 47.98% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல்
ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் NAV-யானது 117.1 ஆக உள்ளது. இந்த பண்டிற்கும் கிரிசில் ரேட்டிங் 4 ஸ்டார் ரேட்டிங்கினை கொடுத்துள்ளது. இந்த பண்டின் மதிப்பு 3338.13 கோடி ரூபாயாகும். செலவின விகிதம் 2.12% ஆகும்.
இந்த ஸ்மால் கேப் பண்டில் 92.64% எனும் அளவுக்கு உள்நாட்டு ஈக்விட்டிகளில் முதலீடு செய்துள்ளது. இதில் குறிப்பாக 59.02% எனும் அளவுக்கு லார்ஜ் கேப் பண்டுகளில், 10.3% எனும் அளவுக்கு மிட் கேப் பண்டுகளிலும், ஸ்மால் கேப் பங்குகளில் 14.8% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
பரோடா பிஎன்பி பரிபாஸ் மிட்கேப் ஃபண்ட்
பரோடா பிஎன்பி பரிபாஸ் மிட்கேப் ஃபண்டானது 166.22 ரூபாயாகும். இந்த பண்டிற்கு ஆவரேஜ் பெர்பார்மன்ஸ் கீழாக ரேட்டிங்கினை கிரிசில் கொடுத்துள்ளது. இதன் பண்டு மதிப்பு 1628.82 கோடி ரூபாயாகும்.
இந்த பண்டில் 95.8% எனும் அளவுக்கு உள்நாட்டு ஈக்விட்டிகளில் முதலீடு செய்துள்ளது. இதில் குறிப்பாக 34.84% எனும் அளவுக்கு லார்ஜ் கேப் பண்டுகளில், 15.35% எனும் அளவுக்கு மிட் கேப் பண்டுகளிலும், ஸ்மால் கேப் பங்குகளில் 27.74% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்
கிரிசில் 4 ரேட்டிங்கின கொடுத்துள்ள இந்த பண்டின் என் ஏ வி-யானது 23.57 ரூபாயாகும். இதன் பண்டின் மதிப்பு 4381.89 கோடி ரூபாயாகவும், இதன் செலவின விகிதம் 2.04% ஆகவும் உள்ளது.
இந்த பண்டில் 94.65% எனும் அளவுக்கு உள்நாட்டு ஈக்விட்டிகளில் முதலீடு செய்துள்ளது. இதில் குறிப்பாக 4.38% எனும் அளவுக்கு லார்ஜ் கேப் பண்டுகளில், 16.05% எனும் அளவுக்கு மிட் கேப் பண்டுகளிலும், ஸ்மால் கேப் பங்குகளில் 55.15% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி ஸ்மால் கேப் ஃபண்ட்
கிரிசில் நிறுவனத்தின் சராசரிக்கும் மேலான தரத்தினை பெற்றுள்ள இந்த பண்டானது, பண்ட் மதிப்பு 14,648.76 கோடி ரூபாயாக உள்ளது. இதன் என் ஏ வி 79.644 ரூபாயாகவும் உள்ளது. இதன் செலவின விகிதம் 1.84% ஆகும்.
இந்த பண்டில் 92.35% எனும் அளவுக்கு உள்நாட்டு ஈக்விட்டிகளில் முதலீடு செய்துள்ளது. இதில் குறிப்பாக 3.89% எனும் அளவுக்கு லார்ஜ் கேப் பண்டுகளில், 5.05% எனும் அளவுக்கு மிட் கேப் பண்டுகளிலும், ஸ்மால் கேப் பங்குகளில் 73.48% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் கமாடிட்டிஸ்
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் கமாடிட்டிஸ் பண்ட் தீமென்ட்டிக் பண்டானது என் ஏ வி- யானது 26.41 ரூபாயாகவும், கிரிசில் ரேட்டிங் இப்பங்கிற்கு ரேட்டிங் வழங்கப்படவில்லை.
எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட்
எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட்இன் என் ஏ வியானது 226.439 ரூபாயாக உள்ளது. இந்த பண்டிற்கு கிரில் 5 ஸ்டார் ரேட்டிங்கினை கொடுத்துள்ளது. இந்த பண்டின் மதிப்பு 8340.65 கோடி ரூபாயாகும். இதன் செலவு விகிதம் 1.89% ஆகும்.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications