மாதம் மாதம் மளிகை பொருட்கள் வாங்க செலவழிக்கும் பணம், உங்கள் பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பலரையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால், சில சாதுர்யமான யுக்திகளைப் பயன்படுத்தினால், கடைகளில் செலவழிக்கும் பணத்தை கணிசமாகக் குறைக்க முடியும். மளிகை சாமான்களுக்கே அதிக செலவாகிறது என்று புலம்பும் நபர்களுக்குத்தான் இந்தப் பதிவு.
விலைவாசி தற்போது விண்ணை எட்டியுள்ளது. இதன் காரணமாக பலரும் தாங்கள் செய்யும் செலவுகளை நினைத்து பயப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற மளிகை சாமான்களின் பில்லையும், தற்போது விற்கும் மளிகை சாமான்களின் பில்லையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிந்துவிடும். அந்த அளவுக்கு விலை ஏற்றம். இது போன்ற சிக்கலில் சிக்கித் தவித்தால், கீழ்க்காணும் சில யுத்திகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

பட்ஜெட்டை உருவாக்கவும்: வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை மளிகை பொருட்களை வாங்கும் பொழுது, தெளிவான மளிகை பொருட்களின் தேவை குறித்த லிஸ்ட்டை உருவாக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான மற்றும் அவசியப்படும் மளிகை பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
மளிகை பொருட்களை வாங்க வாராந்திர அல்லது மாதாந்திர பட்ஜெட்டை அமைத்து, அதை தொடர்ந்து கடைபிடிக்கவும். நீங்கள் ஷாப்பிங் செய்யும் பொழுது உங்களுடைய பட்ஜெட்டை கவனத்தில் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்காமல் இருப்பது நல்லது. இதன் மூலம் உங்களுக்கு தேவையற்ற செலவு ஏற்படும். மேலும் உங்களுக்கு எது முக்கியமாக தேவைப்படுகிறதோ அதனை முதலில் வாங்குங்கள்.
மொத்தமாக வாங்கி ஸ்டாக் செய்யவும்: மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பது உங்களுடைய செலவை குறைக்கும். அரிசி, பாஸ்தா, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் போன்ற அழுகாத பொருட்களை கண்டறிந்து, அதனை கூடுதல் அளவில் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு பொருளை மொத்தமாக வாங்குவதன் மூலம் கடைகள் பெரும்பாலும் தள்ளுபடிகளை வழங்குகின்றன. அப்படி பொருட்கள் வாங்கும்போது, அவை எளிதில் காலாவதி ஆகாததா? என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
விற்பனை மற்றும் கூப்பன்களின் நன்மைகளைப் பெறுங்கள்: மளிகை கடைகளில் இருந்து வழங்கப்படும் தள்ளுபடிகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் உங்களிடம் தள்ளுபடி கூப்பன்கள் இருந்தால் அதனைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய செலவைக் குறைக்கும்.
பல கடைகளில் டிஜிட்டல் அல்லது காகித கூப்பன்கள் வழங்கப்படுகிறது. நீங்கள் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யும் பொழுது உங்களுக்கு ஒரு சில கூப்பன்கள் வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி ஆன்லைனில் மளிகை பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். இது உங்கள் சேமிப்பிற்கு மிக உதவியாக இருக்கும்.
பொதுவான பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்கவும்: பொதுவான அல்லது கடைகளிலேயே பாக்கெட் போட்டு விற்கப்படும் மளிகை பொருட்களின் விலை மலிவாக இருக்கும், அதுமட்டுமின்றி பெரிய பிராண்டுகளின் தரத்தையும் இவை வழங்குகின்றன. நீங்கள் வாங்கும் பிராண்டு பொருட்களின் பின்புறம் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து தகவல்களையும், கடையில் விற்கப்படும் பொருட்களின் பின்புறம் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து தகவல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டும் ஒரே தரத்தை கொடுத்தால் நீங்கள் குறைந்த விலையுடைய பொருட்களை வாங்கலாம். நீங்கள் இதுபோன்ற குறைந்த விலையுடைய பொருட்களை வாங்குவதன் மூலம் உங்களுடைய நிதி சேமிப்பு அதிகரிக்கும்.
பருவகால மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்கலாம்: பருவ காலங்களைப் பொறுத்து விற்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவது நல்லது. மேலும் உங்கள் பணத்தையும் அது மிச்சப்படுத்தும். பருவ கால பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் அதன் விலை குறைவாக வைத்து விற்கப்படும்.
மேலும் புதிய விளைப்பொருட்களை வாங்குவதற்கு உள்ளூர் காய்கறி சந்தைக்கு செல்லுங்கள். சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை குறைவாக இருக்கும். மேலும் நீங்கள் விலையை குறைத்து காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பது நமது சமூகத்திற்கும் பயனளிக்கும் தானே!
பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும்: எளிதில் கெட்டுப் போகா ஸ்னாக்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் அதிக விலையுடன் வருகின்றன. அவை எண்ணிக்கையில் குறைவாகவும் விலையில் அதிகமாகவும் இருக்கிறது. அது போன்ற பொருட்களை வாங்கி சாப்பிடுவதை விட, அடிப்படையான பொருட்களை வாங்கி புதிதாக சமைத்து சாப்பிடலாம். இது உங்கள் நிதியை மிச்சப்படுத்தும், அதுமட்டுமில்லாமல் வீட்டில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் உண்டாக்கும்.
உணவை வீணாக்குவதைத் தவிர்க்கவும்: உணவுகளை வீணாக்குவது உங்கள் மளிகை பட்ஜெட்டை கணிசமாக பாதிக்கும். உங்களுக்கு தேவையான அளவிற்கு பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். எளிதில் கெட்டுப் போகும் பொருட்களை குறைந்த அளவில் வாங்கிக் கொள்ளுங்கள்.மேலும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அதன் காலாவதி தேதியை சரி பார்த்து வாங்குங்கள்.
நீங்கள் வாங்கிய பொருட்களில் எளிதில் எவை கெட்டுப் போகுமோ முதலில் அதனைப் பயன்படுத்தி உணவை தயார் செய்யுங்கள். தேவையான அளவிற்கு பொருட்களை வாங்குவதன் மூலம் உங்களுடைய நிதி சேமிக்கப்படும், மேலும் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications