கிரெடிட் கார்டு மோசடிகள், யுபிஐ மோசடிகள், டிஜிட்டல் வாலெட் மோசடிகள், மியூச்சுவல் ஃபண்ட் மோசடிகள் என மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதற்கு சமமாக நிலவும் இன்னொரு பிரச்சனை என்றால் அது ஏடிஎம் மோசடிகள். ஏடிஎம் மிஷின்களிலிருந்து பணம் வருவதற்கு தாமதமானால் அதை பின்னால் வரும் நபர் போலியாக கார்டை போடுவது போல நடித்து பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. ஆனால் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு சில விஷயங்களை செய்யலாம். இந்தப் பதிவில் ஏடிஎம் இயந்திரங்களை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது? என்ற விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஏடிஎம் மோசடியைத் தடுக்க 7 எளிய குறிப்புகள்:
1. ஏடிஎம் அல்லது பிஓஎஸ் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தும் போது கீபேடை மறைக்க உங்கள் கையைப் பயன்படுத்தவும்.
2. உங்களுடைய பின் நம்பர் மற்றும் கார்டு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம். சில தெரியாத நபர்கள் ஏடிஎம் மிஷின்களிலிருந்து பணம் எடுப்பதற்காக ஆள் பெயர் தெரியாத நபர்களிடம் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளை கொடுத்து பணம் எடுத்துத் தரும்படி கூறுகின்றனர். இந்த செயல்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் ஏடிஎம் செல்லும்போதும்.. இது போன்ற ஒரு நபராவது இருப்பார்கள் சிலர் உதவிக்கரம் நீட்டும் வகையில் பணத்தை பாதுகாப்பாக எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் சிலர் அப்படி இருக்க மாட்டார்கள். உங்கள் கார்டு விபரங்களைப் போலியாக பயன்படுத்தி கார்டு இல்லாத பரிவர்த்தனை செய்து பணத்தை எடுத்துச் செல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே உங்களுக்குத் தெரிந்த ஒரு நபரை ஏடிஎம் மையங்களுக்கு செல்லும்போது கூட்டிச் செல்லுங்கள்.
3. உங்கள் பின் நம்பரை ஏடிஎம் கார்டில் ஒருபோதும் எழுதி வைக்காதீர்கள். பலர் செய்யும் தவறுகளில் ஒன்று தங்களுடைய ஏடிஎம் கார்டுகளில் பின் நம்பரை எழுதி வைப்பது. சிலர் மறதியின் காரணமாக இவ்வாறு செய்யலாம். ஆனால் இது போன்ற தவறுகளை செய்வதனால்.. உங்கள் பின்னால் இருக்கும் நபரின் கண்ணில் உங்களுடைய பின் விவரங்கள் படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அதுமட்டுமின்றி உங்களுடைய கார்டு தொலைந்து விட்டால்.. அதில் எழுதி இருக்கும் பின் நம்பரை வைத்து பிறர் உங்களுடைய பணத்தை எடுத்து விடும் அபாயமும் உள்ளது என்பதை தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.
4. உங்கள் ஏடிஎம் கார்டு விவரங்கள் அல்லது பின்னைக் கேட்கும் SMS-கள், மெயில்-கள் அல்லது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.
5. உங்களுடைய பிறந்த தேதி, மொபைல் நம்பர், அக்கவுண்ட் நம்பர் போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய நம்பரை ஒருபோதும் ஏடிஎம் பின் நம்பராக பயன்படுத்த வேண்டாம். சிலர் எளிதில் நினைவில் இருப்பதற்காக "1234" அல்லது "5678" என்ற நம்பரை பயன்படுத்துவார்கள் இது போன்ற தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது.
6. உங்கள் பரிவர்த்தனை ரசீதை அப்புறப்படுத்தவும் அல்லது பாதுகாப்பாக வைக்கவும். சிலர் தங்களுடைய பேலன்ஸ் விவரங்களை பார்த்துவிட்டு ரசீதை பெற்று அப்படியே அதே இடத்தில் போட்டு விட்டு வந்து விடுவார்கள். இது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
7. சில நேரங்களில் ஏடிஎம் மையங்கள் கூட்டமாக இருந்தால் உங்கள் பின்னால் நிற்பவரை தள்ளி நிற்க சொல்லுங்கள். மேலும் SMS நோட்டிபிகேஷன்களை ஆன் செய்து வையுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் எடுக்கும் போது உங்களுக்கு SMS அனுப்பப்படும். இதன் மூலம் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்தால் உங்களுக்குத் தெரிந்துவிடும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications