8-4-3 விதி! இதை மட்டும் ஃபாலோ பண்ணா ஈசியா கோடீஸ்வரர் ஆகிவிடலாம்..!!

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. ஆனால் பலருக்கு இது வெறும் கனவாகவே கடந்து போய்விடுகிறது.

காரணம் முறையாக திட்டமிடல் இல்லாதது, சரியான முதலீட்டு கருவிகளை பயன்படுத்தாததும் தான். 1 கோடி ரூபாய் சேமிப்பு என்ற இலக்கை எளிதாக அடைய உதவும் ஒரு விதி தான் 8-4-3. இது பற்றி நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.

8-4-3 விதி! இதை மட்டும் ஃபாலோ பண்ணா ஈசியா கோடீஸ்வரர் ஆகிவிடலாம்..!!


காம்பவுண்டிங் எனும் சக்தி: முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள், காம்பவுண்டிங்கை எட்டாவது அதிசயம் என அழைக்கின்றனர். ஏனெனில் உங்களின் சிறிய முதலீட்டை பல மடங்காக மாற்றும் சக்தி காம்பவுண்டிங்கிற்கு உண்டு. வட்டிக்கு வட்டி என்கிற கூட்டு வளர்ச்சி மூலம் இதில் பணம் பெருகுகிறது.

உதாரணத்திற்கு ஒருவர் ரூ.1 லட்சத்தை ஆண்டுக்கு 12% வருமானம் தரும் திட்டம் ஒன்றில் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். இதற்கு முதல் ஆண்டில் ரூ.12,000 வருமானம் கிடைக்கும். இது அசல் தொகையான ரூ.1 லட்சத்துடன் சேர்த்து இரண்டாம் ஆண்டில் ரூ.1,12,000 ஆக முதலீடு செய்யப்படுகிறது.

இந்த முதலீட்டுக்கு ரூ.13,440 வருமானம் கிடைக்கும். இதையும் சேர்த்து அடுத்த ஆண்டு ரூ. 1,25,440 ஆக முதலீடு செய்யப்படுகிறது. இப்படியே தொடர்கிறது. 15-வது ஆண்டில் வருமானம் மட்டும் ரூ.46,752 கிடைக்கும். இதையும் சேர்த்து 15-வது ஆண்டில் ரூ.4,88,711 ஆக முதலீடு செய்யப்படும். அதாவது ரூ.1 லட்சத்தில் ஆரம்பித்த முதலீடு ரூ.4.89 லட்சமாக அதிகரித்துள்ளது.

8-4-3 விதி என்றால் என்ன?: காம்பவுண்டிங் என்ற அதிசயத்தை பயன்படுத்தி 8-4-3 என்ற விதியில் முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள். ஒருவர் 12% வருமானம் கிடைக்கும் ஒரு திட்டத்தில் ஒருவர் மாதந்தோறும் 21,250 ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். காம்பவுண்டிங் முறையில் 8 ஆண்டுகளில் உங்களின் முதலீடு 33.37 லட்சம் ரூபாய் என உயர்வு கண்டிருக்கும்.

இனி அடுத்த 4 ஆண்டுகளிலேயே காம்பவுண்டிங் முறையில் உங்களின் 33.37 லட்சம் ரூபாய் இரட்டிப்பாகி விடும். அதாவது உங்களுக்கு 66 லட்சம் ரூபாய் கிடைக்கும். அடுத்த 3 ஆண்டுகளில் உங்களின் முதலீடு ஒரு கோடி ஆகி விடும். அதாவது 8 ஆண்டுகளில் உங்களின் முதல் 33 லட்சம் கிடைக்கும், அடுத்த 4 ஆண்டுகளில் முதல் 66 லட்சம் கிடைக்கும், அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் கிடைத்துவிடும்.

இந்த ஒரு கோடி ரூபாயும் அடுத்த 6 ஆண்டுகளில் 2 கோடியாக உயரும். தொடர்ந்து 22 ஆண்டுகள் நீங்கள் செய்யும் முதலீட்டின் விளைவாக ஓரு ஆண்டுக்கு 33 லட்சம் ரூபாய் உங்களுக்கு லாபமாக கிடைக்கும்.

காம்பவுண்டிங் அதிசயத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் இளம் வயதில் இருந்தே சேமிக்க தொடங்க வேண்டும் என்றும் நிபுணர்கள். நீண்ட கால அளவில் காம்பவுண்டிங் அதிசயத்தை உணர்வீர்கள் என்பதால் 20களிலேயே சேமிப்பு மற்றும் முதலீட்டை தொடங்க வேண்டும் என யோசனை தெரிவிக்கின்றனர்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+