பர்சனல் லோன் வாங்கி இருக்கீங்களா? இந்த 8 விஷயத்தை பின்பற்றினால் லோன் சீக்கிரம் முடிஞ்சிடும்!

இன்றைய காலகட்டத்தில் எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும், அதற்கான செலவுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக வீடு கட்டுவதற்கு, திருமணம் செய்வதற்கு, கல்விக்காக செலவு செய்வதற்கு, அவசரத் தேவைகள் போன்ற செலவுகளை சமாளிக்க மக்களுக்கு கூடுதலாக ஒரு தொகை தேவைப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப "தனிநபர் கடன்களை" வாங்குகின்றனர்.

என்னதான் மக்கள் தனிநபர் கடன்களை வாங்கினாலும், அதை அடைக்கத் தவறும் பட்சத்தில் அது நிதிச் சுமையை மென்மேலும் அதிகரிக்கச் செய்கிறது. காரணம், தனிநபர் கடன்களைத் தாண்டி வீட்டின் இதர செலவுகளும் இருப்பதால் மாதமாதம் அதை ஈடு செய்வதற்கு சற்று சிரமமாகவே இருக்கிறது. சிலர் நிதிச் சுமையால் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பல குடும்பங்களில் நிம்மதியற்ற வாழ்வே நிலவுகிறது.

 பர்சனல் லோன் வாங்கி இருக்கீங்களா? இந்த 8 விஷயத்தை பின்பற்றினால் லோன் சீக்கிரம் முடிஞ்சிடும்!

பொதுவாக தனிநபர் கடன் திருப்பிச் செலுத்தும் போது, அது அசல் மற்றும் வட்டியோடு மாதத் தவணையாக திருப்பிச் செலுத்த வேண்டும். சரிவர கடனை திருப்பி செலுத்தினால் ஒரு நபருடைய கடன் தகுதியை நிர்ணயிக்கக்கூடிய "சிபில் ஸ்கோர்" அதிகரிக்கும். ஒருவர் தனிநபர் கடன் வாங்கும்போது கீழ்காணும் 8 விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

முன்னுரிமை அளித்தல்: கடன் வாங்கிய பிறகு மாதாமாதம் EMI செலுத்த வேண்டி இருக்கும். அதைச் செலுத்தும்போது இதர செலவுகளும் போட்டி போட்டுக் கொண்டு வரும். இதன்போது நாம் நெருக்கடியான சூழலில் தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது, அதனால், குழப்பம் இல்லாமல் எந்த செலவுகள் வந்தாலும் அதற்கு முன்பே மாதாந்திர தவணைக்கு முன்னுரிமை கொடுத்து கட்டி வந்தால், அபராதம் எதுவும் செலுத்த வேண்டிய தேவையிருக்காது. அது மட்டுமில்லாமல், நிதி செலவுகளில் பெரும் பங்கு குறையும்.

கடன்களை ஒருங்கிணைத்தல்: கடன்களை ஒருங்கிணைப்பது என்பது நாம் வாங்கும் சிறுசிறு கடன்களைத் தவிர்த்து ஒரே கடனாக மாற்றியமைத்தல் ஆகும். இதன் மூலமாக பல கடன்களைத் தவிர்த்து ஒரே கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்திக் கொள்ளலாம். பல சிறிய கடன்களை வாங்கும் போது, அதற்கான வட்டி அதிகமாக இருக்கக் கூடும். ஆனால், அதை ஒருங்கிணைத்து ஒரே ஒரு பெரிய கடனாக வாங்கும்போது, அதற்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் கடன் சுமையையும் குறையும்.

கடனின் நிலுவைத் தொகையை வேறு வங்கிக்கு மாற்றுதல்: தனிநபர் கடன் வாங்கும் போது, வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். எனவே குறைவான வட்டி விகிதத்தை வழங்கும் இடத்தில் நிலுவைத் தொகையை மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் நாம் மாதாமாதம் கட்டும் தவணையின் அளவு குறையும். அதோடு, கடனுக்கான தவணைக் காலத்தையும் நீட்டிக் கொள்ள முடியும்.

கடனை முன்கூட்டியே செலுத்துதல்: வாங்கும் கடனை முன்கூட்டியே சேர்த்து கட்டுவதன் மூலம், செலுத்த வேண்டிய மொத்த வட்டித் தொகையும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் கடனும் முன்கூட்டியே செலுத்தி முடிக்கப்பட்டு, இதர செலவுகளிலும் கவனம் செலுத்த முடியும்.

ஆண்டுதோறும் கடனை அதிகமாகச் செலுத்துதல்: ஆண்டுதோறும் செலுத்தக்கூடிய வட்டிக்கடனை அதிகமாக செலுத்தும் போது நீண்ட காலம் கட்டக்கூடிய கடன் சுமையிலிருந்து விடுபட முடியும். மேலும், உங்களுக்கு வரும் வருமானத்தை மற்ற முக்கிய தேவைகளுக்கு முதலீடு செய்து கொள்ளலாம்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனை மதிப்பிடுதல்: கடனைச் செலுத்துவதற்கான திறனை மதிப்பிடுவதற்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் மற்றும் செலவுகளைப் பட்டியலிட்டுக் கொள்வது அவசியமாகும். இதன் மூலம் மாதாந்திர நிதி நெருக்கடியைத் தடுக்க முடியும்.

குறுகிய கால அவகாசம் மற்றும் அதிக இஎம்ஐ-களைத் தேர்வு செய்தல்: நீண்ட காலத்திற்குக் கடன் வாங்கும் போது, வட்டியும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால், இஎம்ஐ-களை அதிகமாக செலுத்தி, காலத்தைக் குறைத்துக் கொண்டால், அது மற்ற செலவுகள் மற்றும் முதலீடு செய்வதற்கு உதவியாக இருக்கும்.

அதிக வட்டி விகிதமுடைய கடன்களுக்கு முன்னுரிமை அளித்தல்: அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட கடன்களுக்கு முன்னுரிமை அளித்து கட்டும்போது, நிதி நெருக்கடி குறையும். இதன் மூலம் மொத்த செலவுகளில் உள்ள பெரும் பங்கைக் குறைக்க முடியும்.

தனிநபர் கடன்கள் வாங்கினாலும், அதைத் திருப்பிச் செலுத்துவதில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனென்றால், கடனைத் திருப்பி செலுத்தாத பட்சத்தில், அதன் வட்டி மென்மேலும் அதிகரித்து சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தனிநபர் கடன்களை வாங்குவதற்கு முன், தெரிந்த நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளலாம். கடனை வாங்குவது மட்டுமில்லாமல், அதைத் திருப்பிச் செலுத்துவதிலும் கவனம் செலுத்தினால்தான் நிதிப் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+