டைட் பட்ஜெட்டில் பணம் சேமிக்க அசத்தலான 8 டிப்ஸ்.. கரெக்டா ஃபாலோ பண்ணா பண மழை தான்!

பணம் சேமிப்பது என்பது எல்லோருக்கும் பிடித்த விஷயமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. சிலர் "We live only once" என்ற ஃபார்முலாவுக்கு ஏற்ப பணத்தை அவர்களுக்கு பிடித்த விஷயங்களுக்கெல்லாம் செலவு செய்வார்கள். ஆனால் குறைந்த வருமானத்தில் வாழும் போது சேமிப்பு என்பது அவசியமாகிறது. அதிலும் வேலை இழப்பு, எதிர்பாராத செலவுகள் அல்லது எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டிய அவசியம் போன்ற காரணங்களால் சேமிப்பு அத்தியாவசியமாகிறது. உங்களுடைய காரணம் எதுவாக இருந்தாலும், உங்களுடைய செலவுகளை எப்படி குறைப்பது? எந்த வழியில் எல்லாம் பணம் சேமிக்கலாம்? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

மாதம் சம்பளம் பெறும் ஊழியராக இருந்தாலும் சரி.. குடும்ப தலைவர்களின் பணத்தை வைத்து பட்ஜெட்டிற்குள் குடும்பம் நடத்தும் இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி.. எந்த விஷயத்திற்காக பணம் செலவு செய்கிறோம்? அதில் எவ்வாறு சேமிக்க முடியும்? என்ற சில யுக்திகளை தெரிந்து வைத்துக் கொண்டால் நிச்சயம் அதிலிருந்து ஒரு தொகையை உங்களால் சேமிக்க முடியும். மாத இறுதியில் சம்பளம் தீர்ந்து விடுகிறது.. என்று குழம்பும் நபர்களுக்கும் கீழ்க்காணும் டிப்ஸ்கள் நிச்சயம் உதவியாக இருக்கும்.

 டைட் பட்ஜெட்டில் பணம் சேமிக்க அசத்தலான 8 டிப்ஸ்.. கரெக்டா ஃபாலோ பண்ணா பண மழை தான்!

பட்ஜெட்டை உருவாக்குதல்: இது காலம் காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழக்கம் என்று கூட சொல்லலாம். ஏன் வீட்டில் நம் அம்மாக்களும் ஒரு டைரியில் என்னென்ன செலவு செய்ய இருக்கிறார்கள்? எவ்வளவு மளிகை சாமான் வாங்க இருக்கிறார்கள்? என்பதை எழுதி வைத்திருப்பார்கள்.

இதே போன்று நீங்களும் ஒரு பட்ஜெட்டை உருவாக்கலாம். அதில் எவ்வளவு செலவு செய்ய இருக்கிறீர்கள்? எந்தெந்த விஷயத்திற்காக செலவு செய்ய இருக்கிறீர்கள்? என்பதை குறிப்பிடலாம்.

வீட்டு வாடகை செலவு, பொழுதுபோக்கு செலவு மற்றும் பிற செலவுகளை அதில் குறிப்பிடலாம். குறிப்பாக நீங்கள் பட்ஜெட் உருவாக்கும் போது தேவை மற்றும் உங்களின் விருப்பம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உருவாக்குங்கள்.

உதாரணமாக வீட்டு வாடகை கொடுப்பது, மளிகை சாமான் வாங்குவது ஆகியவை தேவை என்ற பிரிவில் வரும். விருப்பம் என்பது வீட்டில் சமையல் செய்திருந்தாலும் வெளியில் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைப்பது, ஒரு மாதத்தில் பலமுறை ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று நினைப்பது ஆகியவை விருப்பம் என்ற பிரிவின் கீழ் வரும்.

குறைந்த சம்பளம் பெறும் நபர்கள் பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தி ஒரு தொகையை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் தேவை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தேவைக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உங்கள் செலவுகளை கண்காணிக்கவும்: சிறிய செலவுகள் எவ்வளவு விரைவாக அதிகரிக்கும் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். எனவே மாத மாதம் பெட்ரோல் மற்றும் காபிக்கு நீங்கள் செலவிடும் சிறிய தொகையையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுடைய செலவு முறையை அறிந்து கொள்ள உதவும்.

உணவுக்காக செலவழிப்பதை சேமிக்கலாம்: ஒரு வாரத்திற்கு நீங்கள் என்ன சாப்பிட இருக்கிறீர்கள்? என்பதை திட்டமிடுங்கள் செலவை சேமிக்கும் விதமாக வெளியில் சென்று சாப்பிடுவதை தவிர்த்து உங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டிலேயே சமைக்க கற்றுக் கொள்ளுங்கள்.

சீசன் விளை பொருட்களை வாங்குவது அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது உங்களுக்கு செலவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். ஏனெனில் சீசன் பொருட்கள் அந்த ஒரு சீசனில் மட்டும் அதிக அளவில் கிடைப்பதால் விலை மலிவாக இருக்கும்.

அது மட்டும் இன்றி மளிகை சாமான்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்லும் முன் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். ஏனெனில் ஒரு கண்டுபிடிப்பில் நாம் பசியோடு இருக்கும்போது நம்மையும் அறியாமல் தேவையில்லாத பொருட்களை வாங்குகிறோம் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது.

தேவையற்ற சப்ஸ்கிரிப்ஷன்களை நிறுத்துங்கள்: சிலர் தேவை இல்லாமல் பல ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கும் சப்ஸ்கிரைப் செய்து வைத்திருக்கின்றனர். வேலைக்கு செல்பவராக இருந்தால், அவற்றைப் பார்ப்பதற்கு கூட நேரமில்லாமல் இருக்கின்றனர். எனவே இதுபோன்ற செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.

மேலும் இது போன்ற தளங்களில் ஆட்டோமேட்டிக் பேமெண்ட்கள் செட் செய்யப்பட்டு இருக்கும். ஒரு வேலை உங்களுக்கே தெரியாமல் பேமெண்ட் எடுக்கப்பட்டால், ஆட்டோமேட்டிக் பேமெண்ட் ஆனில் இருக்கிறதா.. என்பதை பார்க்கவும். அப்படி இருந்தால் அவை தேவையில்லை எனும் பட்சத்தில் நீங்கள் ரத்து செய்யலாம்.

புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்யுங்கள்: ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு விலைகளை ஒப்பிட்டு பாருங்கள். குறிப்பாக மளிகை பொருட்களை வாங்கும் போது நீங்கள் என்ன பட்டியலை கொண்டு சென்றிருக்கிறீர்கள் என்பதை பின்பற்றுங்கள். பசியுடன் இருக்கும் போது அல்லது சோர்வாக இருக்கும் போது ஒரு போதும் ஷாப்பிங் செய்ய வேண்டாம். அதேபோல கூப்பன்களைப் பயன்படுத்துங்கள்.

பயன்பாட்டு கட்டணங்களை குறைக்க முயற்சி செய்யலாம்: மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களில் இருந்து பணத்தை சேமிக்கலாம். உதாரணமாக நீங்கள் பயன்படுத்தாத நேரங்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் லைட்டுகளை ஆப் செய்து விடலாம்.

மேலும் ஆற்றல் திறன் கொண்ட பல்புகள் மற்றும் சாதனங்கள் குறித்து கவனிக்கலாம். இது உங்கள் மின்சாரத்தை சேமிக்க உதவும். தற்போது சந்தைகளில் 5 ஸ்டார் ஏசி-கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. உங்களிடம் 2 ஸ்டார் ஏசி-கள் இருந்தால் அவற்றை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.

கடனுக்கு முன்னுரிமை கொடுங்கள்: சிலர் நிதி நெருக்கடி காரணமாக பர்சனல் லோன், வீட்டுக் கடன்கள், குழுக் கடன்கள் என பலதரப்பட்ட கடன்களை வாங்கி வைத்திருப்பார்கள். இதுபோன்ற நபர்கள் முதலில் கடனை அடைப்பதற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அதிலும் சிலர் கிரெடிட் கார்டுகளைப் பெற்று செலவழித்து வருவார்கள். இது போன்ற நபர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு கடன்கள் நிலுவையில் இருந்தால் அவற்றை வேறு எந்த கடனில் வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது என்பதை கவனித்து அந்த தொகையைப் பெற்று கிரெடிட் கார்டு நிலுவையை சரி செய்யலாம்.

மேலும் நீங்கள் கடன் செலுத்தும் காலத்தில் EMI தொகையுடன் சேர்த்து கூடுதலாக ஒரு தொகையை வரவு வைத்துக் கொண்டே வருவதன் மூலம் உங்களுடைய கடன் சீக்கிரம் முடியும்.

சேமிப்பு பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்: உங்களுடைய வருமானம் எப்படி இருந்தாலும் அதில் ஒரு 100 ரூபாயாவது சேமிக்க முயற்சி செய்யுங்கள். தினமும் 100 ரூபாய் சேமித்தால் மாதத்திற்கு 3000 ரூபாய். இந்த சிறிய தொகையும் தேவைப்படும் நேரத்தில் பெரிதும் உதவிகரமானதாக இருக்கும். 100 ரூபாய் தானே என்று நினைக்காதீர்கள்.. இதுபோன்ற சிறு விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே உங்களுடைய பட்ஜெட் டைட்டாக இருந்தாலும் அதிலிருந்து உங்களால் சேமிக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+