சென்னை: கை நிறைய பணம் சம்பாதிப்பதைத் தாண்டி அதை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும் அப்பொழுதுதான் நீண்ட காலத்திற்கு நம்முடைய பணம் நமக்கு பெரிய அளவில் வளர்ந்து நம்மை செல்வந்தராக்கும். பணத்தை வங்கி கணக்கிலேயே வைக்கக் கூடாது முறையாக முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடையே அதிகரித்து இருக்கிறது .
முதலீடு நோக்கி வரக்கூடியவர்கள் மூன்று விதிமுறைகளை சரியாக கடைபிடித்தால் நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தை ஈட்டி விட முடியும் என நிதி ஆலோசகரும் பட்டய கணக்காளருமான நிதின்ம் கௌசிக் அறிவுரை வழங்கியிருக்கிறார். தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு நிதி ஆலோசனைகளை அவர் வழங்கி வருகிறார்.

அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் முதலீடு என வரும்போது இந்த மூன்று விஷயங்களை நிச்சயம் பின் தொடருங்கள் பின்னால் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்திருக்கிறார் .
இளம் வயதிலேயே முதலீடு: 22 வயது முதலே முதலீடு செய்ய தொடங்குங்கள் என அறிவுரை வழங்குகிறார். 22 வயதிலேயே மாதந்தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்குங்கள் என அறிவுரை வழங்கும் அவர் 5 உங்களுக்கு 55 வயதாகும்போது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒரு நிதி தொகுப்பாக சேர்ந்திருக்கும் என கூறுகிறார். நீங்கள் செய்யக்கூடிய முதலீடு ஆண்டுக்கு 12 சதவீதம் வருமானம் ஈட்டி தரக்கூடிய திட்டமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்.
இதை 22 வயதில்லாமல் 30 வயதில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்குகிறீர்கள் என்றால் உங்களுடைய 55 வயதில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கையில் இருக்க வேண்டும் எனில் நீங்கள் மாதந்தோறும் 12,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும் . இளம் வயதிலேயே செய்தால் குறைந்த தொகையில் அதிக லாபம் பார்க்கலாம் வயது ஏற ஏற நீங்கள் செய்ய வேண்டிய முதலீடு அதிகரிக்கும் என தெரிவிக்கிறார் .
முதலீட்டை தொடர்வது : என்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நான் மாதம் தோறும் எஸ்.ஐ.பி போன்ற திட்டங்களில் முதலீடு செய்யப் போகிறேன் என முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் அந்த முதலீட்டை நிறுத்தாதீர்கள் என தெரிவித்திருக்கிறார். திடீரென பங்குச்சந்தை இறங்குகிறது அல்லது பங்குச்சந்தை உயர்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் கண்டு முதலீட்டை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள் என தெரிவித்திருக்கிறார். முதலீடு என்பது ஒழுக்கம் சார்ந்தது என குறிப்பிடும் அவர் தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்யும்போது தான் இறுதியில் உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும் என தெரிவிக்கிறார்.
குறுகிய கால ஏற்ற, இறக்கங்களுக்கு அஞ்ச கூடாது: ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிச்சயம் காணப்படும். பங்குச்சந்தை திருத்தம் அடையும் ,திடீரென சரிவடையும் அதே நேரத்தில் திடீரென வளர்ச்சியும் அடியும். எனவே இது போன்ற செய்திகளை கண்டு அச்சம் கொண்டு முதலீட்டை நிறுத்தி விடக்கூடாது என தெரிவித்து இருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளில் நிப்டி 800 புள்ளிகளில் இருந்து 24 ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்து இருக்கிறது, குறுகிய கால செய்திகளை கண்டு அஞ்சி விடாதீர்கள் என தெரிவித்திருக்கிறார்.
என்ன செய்யக் கூடாது: முதலீடு என வரும்போது உணர்வு ரீதியாக அதனை அணுக கூடாது திட்டமிட்டு தான் அதனை அணுக வேண்டும் என அறிவுரை வழங்கும் நிதின் கௌசிக் சம்பளம் கூடும்போது எஸ்ஐபி-ஐ தொடரலாம் , பங்குச்சந்தை சரிந்துவிட்டது உடனடியாக விற்பனை செய்து விடலாம் , கிரிப்டோவில் நல்ல லாபம் கிடைக்கிறது எனவே அதில் முதலீடு செய்யலாம் என உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள் என தெரிவிக்கிறார். பங்குச்சந்தையை பின்தொடர்ந்து முடிவெடுக்காதீர்கள் ஒழுக்கத்தை பின்தொடருங்கள் அதுதான் உங்களை பணக்காரனாக்கும் என அறிவுரை வழங்குகிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications