சென்னை: உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்கவும் அபராதங்களைத் தவிர்க்கவும் உதவும். எனவே உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதுகாப்பாக வைத்திருக்க குறிப்பிடப்பட்ட தேதிக்குள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்தி விட வேண்டும். அதற்கான சில வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பெரும்பாலானோர் தங்களின் கிரெடிட் கார்ட் பில்களை குறிப்பிடப்பட்ட தேதிக்குள் அல்லது அதற்கு முன்னரே செலுத்தி விடுகின்றனர். ஆனால் பலருக்கு அதன் பின் விளைவுகள் பற்றித் தெரியாமல் இருப்பதால் காலக்கெடுவை மீறி கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளை செலுத்தி வருகின்றனர்.

இது போன்ற செயல்பாடுகள் உங்களின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். மேலும் வரும் காலங்களில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், கடன் பெற முடியாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்தப் பதிவில் உங்களது கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பற்றிப் பார்ப்போம்
கிரெடிட் கார்டு பில் என்பது நீங்கள் செலவு செய்த பணப்பரிவர்த்தனைக்கான ஆவணம் ஆகும். இதில் நீங்கள் எவ்வளவு தொகை செலவு செய்து உள்ளீர்கள் என்பது போன்ற விவரங்கள் இருக்கும். இதனை கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்கள் உருவாக்கும். இதனை ஈமெயில் மூலம் உங்களுக்கு அனுப்பும்.
மேலும் நீங்கள் செலவு செய்த தொகையை உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் வசூலிக்கும். அதாவது நீங்கள் கிரெடிட் கார்டு பில்களை பெற்ற 20 முதல் 25 தேதிகளில், உங்களிடம் இந்த கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இந்த தேதியில் இருந்து காலக்கெடுவை மீறி கிரேடிட் கார்டு பில்களை செலுத்தும் போது உங்களுக்கான தொகையுடன் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
உங்கள் கிரெடிட் கார்ட் பில்களை காலக்கெடுவுக்கு முன்பே செலுத்துவது நல்லது. மேலும், செலுத்திய தொகை, உங்கள் கணக்கில் சரியான நேரத்தில் செலுத்தப்பட்டதா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் சில நேரங்களில் பிராசசிங் செய்யப்படுவதற்கு நேரம் எடுக்கலாம். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு உங்களது கிரெடிட் கார்டு பில்களை முன்கூட்டியே செலுத்துவது உத்தமமாகும்.
கிரெடிட் கார்டு பில்களைச் செலுத்தும் காலக்கெடுவைத் தவறவிட்டால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கலாம். இது பிற்காலத்தில் நீங்கள் பெறக்கூடிய கடன் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பளிக்கும். உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை உரிய தேதிக்கு முன் செலுத்துவது ஒரு நல்ல நடைமுறையாகும்.
இந்த கிரெடிட் கார்ட் பில்கள் பொதுவாக 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை தயாரிக்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப இந்த காலக்கெடு அமைக்கப்படும். தாமத கட்டணங்களைத் தவிர்ப்பது உங்களது கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க உதவும்.
நீங்கள் எவ்வளவு கடன் பட்டிருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் அறிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இது தேவையற்ற உங்களின் செலவுகளை மதிப்பாய்வு செய்வதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
எந்த கால கெடுவுக்குள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக ரிமைண்டர்களை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு மெசேஜ்கள் வரும் இது போன்ற நடைமுறைகளை மேற்கொள்வதால் அபராத கட்டணங்கள் ஏதும் இன்றி, நீங்கள் சரிவர கிரெடிட் கார்டு பில்களை செலுத்த முடியும்.
இன்னொரு சிறப்பான வழி, நீங்கள் ஆன்லைன் பேங்கிங்-ஐ பயன்படுத்தலாம். தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதன் மூலம் வரிசையில் காத்திருந்து பணத்தைச் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தே தக்க நேரத்திற்கு உங்களது கிரெடிட் கார்டு பில்களை செலுத்த முடியும்.
இதுபோன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றி சரியான நேரத்தில் உங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவதன் மூலம் தேவையற்ற கட்டணங்களைத் தவிர்த்து நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications