இந்தியாவில் பணம் சம்பாதிப்பதை விட பணத்தை செலவு செய்வதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாகி விட்டன. தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அனைத்தையும் நம் செல்போனுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டது. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திலிருந்து எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம் பத்து நிமிடங்களில் நாம் ஆர்டர் செய்தது நம் கைகளுக்கு வந்து சேர்ந்த விடும்.
கடன் வாங்குவதோ இன்னும் எளிதாகிவிட்டது. வங்கிக்கு கூட செல்ல தேவையில்லை போனிலேயே அனைத்தும் முடிந்து கடனும் நம் கணக்கிற்கு வந்துவிடும். இந்தியர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கம் குறைந்து நுகர்வு போக்கு அதிகரித்து இருக்கிறது என தொடர்ந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பட்டய கணக்காளராக இருக்கக்கூடிய ஒரு நபர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் பத்தாம் வகுப்பு முடித்த ஒரு நண்பர் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபரை விட அதிக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

சொத்து சேர்த்தல் என வரும்போது நம்முடைய வருமானம் எவ்வளவு என்பதைவிட நாம் எவ்வளவு ஒழுக்கமாக அதனை சேமித்து முதலீடு செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதை அவருடைய இந்த பதிவு நமக்கு உணர்த்துகிறது. மீனல் கோயல் என்பவர் பட்டய கணக்காளராக இருக்கிறார். அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் தன்னுடைய நண்பர் ரோகித் ஒரு பட்டய கணக்காளராக இருக்கிறார் மாதம்தோறும் 2.8 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் அதே வேளையில் சுரேஷ் என்ற நபர் பத்தாம் வகுப்பு தான் முடித்திருக்கிறார் கார்களை வாடகைக்கு விடக்கூடிய ஒரு தொழிலை செய்து வருகிறார் மாதந்தோறும் இவரது வருமானம் 45 ஆயிரம் ரூபாய் என கூறியுள்ளார்.
ரோகித் மாதம் 2.08 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் ஆனால் வீடு மற்றும் தன்னுடைய காருக்கான இஎம்ஐ-ஆக மாதம் வரும் 1 லட்சம் ரூபாயை அவர் செலுத்தி வருகிறார். இது தவிர அவருடைய கிரெடிட் கார்டில் 8 லட்சம் ரூபாயை அவர் நிலுவைத் தொகையாக வைத்திருக்கிறார் . அவருடைய வாழ்க்கை செலவினங்கள் என மாதம் தோறும் 80,000 ரூபாய் ஆகிறது. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா மைனஸ் 15 லட்சம் அதாவது 15 லட்சம் ரூபாய் கடனாளியாக இருக்கிறார் என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதே வேளையில் பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு கார்களை வாடகைக்கு விடக்கூடிய தொழிலில் ஈடுபட்டு இருக்கும் சுரேஷிடம் இஎம்ஐ எதுவும் கிடையாது. மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலேயே அவர் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வருமானத்திலிருந்து எடுத்து 8000 ரூபாய் எஸ்ஐபி மற்றும் 5,000 ரூபாயை ஃபிக்சட் டெபாசிட்களில் மாதந்தோறும் முதலீடு செய்து வருகிறார் என குறிப்பிடுகிறார். அவருடைய சொத்து மதிப்பு 4.5 லட்சம் . அவருக்கு கடனே இல்லை என பதிவிட்டுள்ளார்.
ரோகித் சுரேஷை விட நான்கு மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகிறார் ஆனாலும் நிதி ரீதியாக அவர் கடனாளியாக இருக்கிறார். சுரேஷ் பெரிய பட்டப்படிப்பை இருந்தாலும் தனக்கு வரக்கூடிய வருமானத்தில் ஒழுக்கமான முறையில் பிரித்து முறைப்படி முதலீடு செய்கிறார். ரோகித்திடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் 60 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை இருந்தாலும் அவர் கடனாளியாக தான் இருக்கிறார்.
சுரேஷ் திறமையான முறையில் தன்னுடைய வருமானம் எவ்வளவு என்பதை திட்டமிட்டு செலவு செய்வதே அவரது வெற்றிக்கு காரணம் என குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு பட்டய கணக்காளராக கூறுகிறேன் நம்முடைய வருமானத்திற்கும் நம்முடைய செல்வத்திற்கும் நிச்சயம் சம்பந்தமே கிடையாது. அதேபோல பணம் சேர்ப்பதற்கும் நம்முடைய படிப்புக்கும் சம்பந்தம் கிடையாது என தெரிவித்திருக்கிறார்.
திறமையான முறையில் உங்களின் பணத்தை நீங்கள் மேலாண்மை செய்யவில்லை என்றால் எத்தனை லட்சம் சம்பளம் வாங்கினாலும் அதனால் பிரயோஜனமே இல்லை எனக் கூறியிருக்கிறார். நம் அனைவருக்குமே பணம் சம்பாதித்தது எப்படி என்று தான் சொல்லித் தருகிறார்கள் தவிர அந்த பணத்தை எப்படி மேலாண்மை செய்வது என சொல்லித் தருவதில்லை என சுட்டிக்காட்டுகிறார்.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

விவாகரத்து வழக்கில் ஹன்சிகா மோத்வானி எடுத்த ஆச்சர்ய முடிவு!! பாராட்டும் ரசிகர்கள்!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!



Click it and Unblock the Notifications