இந்திய மிடில் கிளாஸ் மக்களுக்கு பணம் சேமிப்பு என்றால் வங்கியில் டெபாசிட் திட்டங்களில் பணத்தை போட்டு வைப்பார்கள். தற்போது அதற்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துவிட்டன. தங்கம் வாங்கலாம் என போய் பார்த்தால் தங்கம் நாம் வாங்க முடியாத விலையில் விற்பனையாகிறது.
பணத்தை எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இப்போது முதலீடு செய்தால் தான் ஓய்வு காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லாமல் மிடில் கிளாஸ் மக்களால் மூன்றிலிருந்து ஆறு கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்து விட முடியும் என்கிறார் பிரபல பட்டயக் கணக்காளராக நிதின் கௌசிக். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக முதலீடு சம்பந்தப்பட்ட பரிந்துரைகளை அவர் வழங்கி வருகிறார் .

லட்சக்கணக்கான சாமானிய மக்களால் மில்லினியர்கள் ஆக முடியும் என கூறும் அவர் இந்த ஒரு தவறை அவர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். பணம் சம்பாதிப்பது இந்த காலத்தில் எளிதாகிவிட்டது . ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பது தான் கடினமானதாக மாறியிருக்கிறது என கூறியிருக்கிறார். பெரும்பாலான மக்களால் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏன் பணம் சேர்க்க முடியவில்லை தெரியுமா, போதிய வருமானம் இல்லாததால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்படவில்லை அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்.
மிடில் கிளாஸ் மக்கள் தங்களுடைய முதலீடுகளை அதிகரிக்காமல் செலவினங்களை மட்டுமே அதிகரித்து வருகின்றனர் அதுதான் இந்த நிலைமைக்கு காரணம் எனக் கூறியிருக்கிறார். எனவே தான் கூறும் மூன்று அடிப்படையான வழிமுறைகளை தொடர்ச்சியாக ஒழுக்கமான முறையில் பின்பற்றினால் நீண்ட கால அடிப்படையில் உங்களிடம் ஒரு மிகப்பெரிய தொகை வந்து சேரும் என கூறுகிறார் .
முதலில் உங்களுடைய மாத வருமானத்தில் 15 சதவீத தொகையை எஸ்ஐபி முறையில் இன்டெக்ஸ் ஃபண்ட்களில் முதலீடு செய்யுமாறு அறிவுரை வழங்குகிறார் . அடுத்ததாக மீதமுள்ள 85 சதவீத வருமானத்தில் மட்டும் வீட்டு செலவினங்களை கவனிக்கும் வகையில் தேவையற்ற செலவினங்களை குறைத்து விட வேண்டும் என கூறுகிறார். சம்பளம் எவ்வளவு உயர்ந்தாலும் இந்த 85% தகை செலவினங்களுக்கு 15% முதலீட்டு என்பதை தவறாமல் பின்பற்ற அறிவுரை வழங்குகிறார்.
தேவையற்ற இஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாடுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என அறிவுறுத்துகிறார். இந்த கடன்கள் உங்களின் வாழ்நாள் வருமானத்தையே அழிக்கும் திறன் கொண்டவை என சுட்டிக்காட்டுகிறார். இந்த மூன்று வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே பங்குச்சந்தை வளர்ச்சி, பங்குச்சந்தை ஏறுகிறதா இறங்குகிறதா, எந்த பங்கில் முதலீடு செய்யலாம் , குறுக்கு வழியில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என எதையுமே சிந்திக்க தேவையில்லை என்கிறார்.
வரலாற்று ரீதியாக இண்டெக்ஸ் முதலீடுகள் 12 சதவீதம் வரை லாபம் தருபவையாக தான் இருந்திருக்கின்றன என கூறும் அவர் இதனை பின்பற்றினால் 25 முதல் 30 ஆண்டுகளில் உங்களிடம் 3 முதல் 6 கோடி ரூபாய் வரை சேர்த்து விட முடியும் என கூறுகிறார். காம்பவுண்டிங் என்ற ஏழாவது அதிசயத்தை பயன்படுத்துங்கள் என்கிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications