ஆதார் கார்ட்டில் இந்த 2 விஷயம் சரியா இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க.. பெரிய சிக்கலாகிடும் பாஸ்..!

ஆதார் இந்திய அரசால் வழங்கப்படும் 12-இலக்க அடையாள எண், ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் முக்கியமான ஆவணமாக இருப்பது மட்டும் அல்லாமல் ஆதார் தளத்தில் ஒவ்வொருவரின் கருவிழி ஸ்கேன், கைரேகை, பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட ஒரு பயோமெட்ரிக் மற்றும் இருப்பிட தரவு விவரங்களை கொண்டுள்ளது.

இந்த மக்கள் தொகையை அடிப்படையாக உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்புகளில் ஒன்றாக ஆதார் விளங்குகிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஆதார் மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

ஆதார் கார்ட்டில் இந்த 2 விஷயம் சரியா இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க.. பெரிய சிக்கலாகிடும் பாஸ்..!

உதாரணமாக அரசின் சேவைகள் மற்றும் மத்திய மாநில் அரசின் நல திட்டங்களை பெறுவதில் துவங்கி, வங்கி கணக்கை திறப்பதற்கும், சிம் கார்டைப் பெறுவதற்கும் என பல முக்கிய செயல்களுக்கும் ஆதார் அவசியமான மற்றும் காட்டாயமான ஆவணமாக உள்ளது பயன்படுத்தப்படுகிறது.

சரியான தகவல்கள்: ஆதார் மிகவும் முக்கியமான ஆவணம் என்பதால், அதில் உள்ள அனைத்து விவரங்களும் சரியானவை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில், முக்கியமான நேரத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

ஆதாரில் சில விவரங்களை பல முறை புதுப்பிக்க முடியும் என்றாலும், இரண்டு தகவல்களை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும், அவை மிகவும் கவனமாக நிரப்பப்பட வேண்டும். உதாரணமாக பொதுவாக, பலர் வாடகைக்கு வசிப்பதாலோ அல்லது வேலை காரணமாக மாற்றப்படுவதாலோ முகவரியை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றனர், எனவே அதை பல முறை மாற்றலாம். இப்படி ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் 2 விஷயங்கள் எது தெரியுமா..?

பிறந்த தேதி: பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் அட்டியில் பிறந்த தேதி தவறாக இருந்தால், அதை சரியான தேதிக்கு புதுப்பிக்கவும். மக்கள் தங்களின் ஆதார் அட்டியில் பல்வேறு காரணங்களால் தவறான பிறந்த தேதியை பதிவாகிறது. இதை கவனிக்காமலோ அல்லது பொருட்படுத்தாமலோ இருந்தால் பெரிய பிரச்சனை தான்.

இதுப்போன்ற தவறுகள் அதிகமாக பிள்ளைகளின் ஆதார் கார்டுகளில் நடக்கிறது. எனவே பெற்றோர்கள் இதை திருத்த மறந்துவிட்டால் பின்னர் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்த பிறகு, பெற்றோர்கள் அதை மாற்றிக் கொள்கிறார்கள். இல்லையெனில் பள்ளி இறுதித் தேர்வுகளின்போது, ​​மீண்டும் பெற்றோர்கள் அதனை மாற்ற முயற்சி செய்கிறார்கள். இது தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே, உங்கள் ஆதார் அட்டியில் எப்போதும் சரியான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டியது அவசியம்.

பெயர் : ஆதார் கார்டில் மிகவும் கவனமாக நிரப்ப வேண்டிய இரண்டாவது விவரம் பெயர் ஆகும், ஏனெனில் அதை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க முடியாது. சிலர் ஆதார் கார்டை தயாரிக்கும்போது தங்கள் புனைபெயர்கள் அல்லது முதல் எழுத்துக்களை நிரப்பி விட்டு, எழுத்துப்பிழைகளை கவனிக்காமல் விடுகின்றனர்.

இருப்பினும், பின்னர் உங்கள் பெயரை மாற்ற முயற்சித்தால், அது சாத்தியமில்லை. எனவே, அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் ஒரே பெயரை பராமரிக்கவும். UIDAI-ன் படி, பெயர் மற்றும் பிறந்த தேதியில் ஒரு முறை தவறு இருக்கலாம், ஆனால் தவறு மீண்டும் நிகழக்கூடாது.

பொதுவாக, மக்கள் தங்கள் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு முன்பாக சுருக்கப்பட்ட பெயரையோ அல்லது புனைபெயரையோ பயன்படுத்துகின்றனர், இது முற்றிலும் தவறு. இதனால், ஆதார் கார்டில் சரியான பெயரை கொடுத்து, அதே பெயரை மற்ற அனைத்து ஆவணங்களிலும் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

ஒரு முறைக்கு மேல் பெயரை மாற்ற முடியாது என்பதால், பெயரை சரியாக முன்கூட்டியே கொடுப்பது அவசியம். எனவே, ஆதார் கார்டு படிவத்தை நிரப்படும்போது, பெயரை கவனமாக சரிபார்க்கவும், எழுத்துப்பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+