ஆதார் பான் இணைப்பை தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகின்றது. இதனை சரியான சமயத்தில் இணைக்காவிடில் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறி வருகின்றது. ஆனாலும் இன்று வரையில் கூட பலரும் இணைக்கவில்லை.
இதற்காக அரசு ஏற்கனவே பல முறை கால அவகாசத்தினை கொடுத்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதில் தொடங்கி பல இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட இன்றும் பலர் இணைக்கவில்லை என்பதே உண்மை.

மீண்டும் ஒரு வாய்ப்பு
இதுவரையில் இணைக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம். அது ஏப்ரல் 1, 2023-க்குள் ஆதார் பான் கார்டினை இணைத்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படாவிட்டால் அபராதமும் விதிகப்படலாம். உங்கள் பான் கார்டு செல்லாமல் கூட போகலாம்.

கடைசி தேதி எது?
இதனால் நீங்கள் நிதி பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாமல் கூட போகலாம். ஆக உங்களது 10 இலக்க பான் கார்டினை உடனடியாக ஆதார் மைத்திற்கோ அல்லது பொது இ சேவை மையத்திலோ சென்று இணைத்துக் கொள்ளலாம்.
இதற்காக கடைசி தேதியாக அரசு 31- 3- 2023 ஆக அறிவித்துள்ளது. ஆக அதற்குள் இணைத்து விடுவது நல்லது. அப்படி இணைக்கப்படாவிடில் உங்களது ஆவணங்கள் செல்லாததாகி விடலாம்.

பான் செயலிழந்து விடும்
இது குறித்து வருமான வரித் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் வருமான வரி சட்டம் 1961ல் பிரிவின் படி, ஆதார் பான் இணைப்பதற்கான கடைசி தேதி 31 - 03 - 2023 ஆகும்,. இந்த காலகட்டத்திற்குள் இணைக்கப்படாவிட்டால் அவை செயலிழந்து விடும் என பதிவிட்டுள்ளது.

இவ்வளவு அபாரதமா?
ஒரு வேளை இணைக்காவிடில் வருமான வரித்துறையானது 272B பிரிவின் கீழ் சுமார் 10,000 ரூபாய் வரை இதற்காக அபராதம் விதிக்க முடியும் எனத் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது. .

எப்படி இணைக்கலாம்?
ஆதார் எண் பான் எண் ஆகியவற்றை எஸ்எம்எஸ் மூலமும் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ள முடியும்.
உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் எப்படி?
எளிதில் ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளலாம்
இதற்காக https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறையின் புதிய தளத்திற்கு செல்லவும்.
அதில் கீழாக Quick Links என்ற ஆப்சனில் லிங்க் ஆதார் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும்
அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
குறிப்பாக உங்களது ஆதார் பான் விவரங்களை கேட்கும். தவறில்லாமல் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்த பின்னர் கீழாக உள்ள பாக்ஸினை கிளிக் செய்யவும். இதன் மூலம் 6 இலக்க ஓடிபி ஒன்று வரும். அதனை பதிவு செய்த பிறகு அப்டேட் செய்யவும்.
ஒடிபி கொடுத்து வேலிடேட் செய்த பிறகு சரியாக செய்து விடால் உங்களுக்கு ஒரு பாப் அப் செய்தி வரும். உங்களது கோரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரும்.