ஆதார் - பான் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31, 2021 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஜூன் 30, 2021 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இணைப்புகாக பலமுறை அவகாசம் கொடுத்த அரசு, இந்த முறையும் மீண்டும் அவகாசம் கொடுக்கப்படுமா? ஏனெனில் பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்டதே என்ற கேள்விகள் எழுந்தன.
இதற்கு முன்பே பலமுறை கெடு விதிக்கப்பட்டிருந்தது? உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகக் கூடும். அதோடு அபாதாரமும் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கால அவகாசம்
நேற்றுடன் ஆதார் பான் இணைப்புக்கு கால அவகாசம் முடிந்த நிலையில், நாட்டில் பலரும் இன்னும் பான் ஆதார் இணைப்பை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நேற்று கடைசி நாள் என்பதால் பலரும் தங்களது ஆதார் பான் இணைப்புக்காக ஒரே நேரத்தில் முயற்சித்த நிலையில், சர்வர் பிரச்சனை நிலவியது. இதற்கிடையில் தான் அரசு இப்படியொரு அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணைக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
தற்போது நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வரும் நிலையில், மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு இதுவரை ஆதார் பான் கார்டினை இணைக்காமல் இருப்பவர்களுக்கு பெரும் நிம்மதியினை கொடுத்துள்ளது எனலாம். ஏனெனில் ஒரு வேளை நேற்றே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தால், எவ்வளவு அபராதம் விதிகப்படுமோ என்ற கவலையும் இருந்து வந்தது. ஆக இதுவரையில் இணைக்காதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.
பிரச்சனைகள் வரலாம்
ஆதார் பான் எண் இணைக்காவிடில் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். குறிப்பாக பான் கார்டை 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணபரிமாற்றத்துக்கு பயன்படுத்தும் போது அதற்கு பயன்படுத்த முடியாமல் போகலாம். அதோடு ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்பட்டிருக்கலாம். ஆக இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட அரசு மீண்டும் ஒரு வாய்ப்பினை கொடுத்துள்ளது.
இணைப்பது மிக எளிது
பான் எண்னை ஆதார் எண்ணுடன் மொபைல் எஸ்எம்எஸ் மூலம் மிக எளிதாக இணைக்கலாம். இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இருந்த இடத்தில் இருந்தே இணைக்கலாம்?
ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
எனக்கு இணைக்க தெரியாதே?
மேற்கூறிய எஸ் எம் எஸ் மற்றும் இணையம் மூலம் இணைக்க தெரியாது என்று கூறுகிறீர்களா? இருக்கவே இருக்கு ஆதார் மையம். அங்கு சென்று நேரிடையாக இணைக்கலாம். இதற்காக தேவையான விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications