நடப்பு 2022 - 23ம் நிதியாண்டுக்கான முன் கூட்டியே செலுத்த வேண்டிய 4வது வரி தவணைக்கான கால அவகாசம் மார்ச் 15 அன்று முடிவடைகிறது.
ஒரு நிதியாண்டின் போது வணிகர்கள் 4 தவணைகளில் வருமான வரி செலுத்த வேண்டும். அப்படி இதில் ஏதேனும் ஒன்றை தவறவிடும்பட்சத்தில் 234பி மற்றும் 243சி பிரிவின் கீழ் அபராத தொகையினையும் செலுத்த வேண்டியிருக்கும்.
சமீபத்தில் வரி செலுத்துவோர் தங்களது கடைசி தவணை வரியினை முன் கூட்டியே செலுத்துபவர்கள் சரியான கால அவகாசத்திற்குள் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4 தவணைகள்
இது குறித்து சமீபத்தில் வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.
வரி செலுத்துவோர், பிரிவு 44AD அல்லது பிரிவு 44ADA இன் கீழ் அனுமான வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள், வருமானம் ஈட்டப்பட்ட அதே நிதியாண்டில் அட்வான்ஸ் டேக்ஸ் 4 தவணைகளில் செலுத்தப்படுகிறது. மொத்த வரியில் முதல் தவணையாக 15% ஜூன் 15-க்குள் செலுத்த வேண்டும். இதே இரண்டாவது தவணையாக 45% செப்டம்பருக்குள் செலுத்த வேண்டும்.
இதே டிசம்பர் 15-க்குள் ஜூன் மற்றும் செப்டம்பர் தவணைகளை உள்ளடக்கியதாகவும் வரி பொறுப்பு 75% ஆகவும் இருக்கும். இதே கடைசி தவணை என்பது மார்ச் 15-க்குள் கட்டியாக வேண்டும்.
அட்வான்ஸ் டேக்ஸ்
அட்வான்ஸ் டேக்ஸ் என்பது தங்களது சம்பளத்தினை தவிர வேறு வருமான ஆதாரங்களை கொண்ட தனி நபர்களால் செலுத்தப்படுகிறது. வாடகை, மூலதன ஆதாயங்கள், நிலையான வைப்பு தொகை, லாட்டரி வெற்றி போன்ற பலவற்றின் மூலம் கிடைக்கும் பல வருமானங்களும் இதில் அடங்கும். இப்படி 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலாக வருமானம் பெறுபவர்கள் இந்த அட்வான்ஸ் வரியினை செலுத்த வேண்டும்.
யாருக்கு விலக்கு?
இந்த அட்வான்ஸ் டேக்ஸில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல டிடிஎஸ்-கீழ் வரும் வரி செலுத்துவோரும் அட்வான்ஸ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
சரியாக முன் கூட்டி செலுத்தாவிடில்
ஒரு தனி நபர் இந்த அட்வான்ஸ் டேக்ஸினை சரியான நேரத்தில் செலுத்தாவிடில், அல்லது பகுதி தொகை இருப்பின் அவர்களுக்கு ஒரு காலாண்டுக்கு 3% வட்டி விதிக்கப்படலாம். இதே கடைசி காலாண்டில் 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications