40 வயசாச்சு, குடும்பத்தில் சர்க்கரை வியாதி.. டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் கவரேஜ் கிடைக்குமா..?

40 வயது ஆகிவிட்டாலே ஒருவருக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். அதுவும் குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரைநோய் இருக்கிறது என்றால் சொல்லவே வேண்டாம். ஒன்றைத் தொட்டு மற்றொன்று ஏதாவது ஒரு மருத்துவச் செலவு ஏற்படும். இதனால் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடி பற்றி கட்டாயம் கவலைப்பட வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஒருவருக்கு கிரிட்டிகல் இல்னெஸ் கவரேஜ் கிடைக்குமா? அத்துடன் அது சர்க்கரை நோய்க்கு எப்படிப் பொருந்தும்? பரம்பரையில் சர்க்கரை நோய் இருக்கும் தனிநபருக்கான பாலிசியில் ஏதாவது சில குறிப்பிட்ட நிபந்தனைகள் இருக்குமா? என்பது குறித்து கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப டெர்ம் இன்ஸ்யூரன்ஸில் கிடைக்கக்கூடிய நிதிப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

40 வயசாச்சு, குடும்பத்தில் சர்க்கரை வியாதி.. டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் கவரேஜ் கிடைக்குமா..?

இது பற்றி பஜாஜ் அல்லையான்ஸ் லைப் இன்ஸ்யூரன்ஸ் நிறுவன நிபுணர் அவ்தேஷ் குப்தாவிடம் கூறுகையில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கிரிட்டிகல் இல்னெஸ் கவர் செய்வது குறித்து முதலில் அறிந்து கொள்வோம். சர்க்கரை நோய் என்பது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது அல்ல என்பதால் அது கிரிட்டிகல் இல்னெஸ் இன்ஸ்யூரன்ஸ் கவர்களில் எடுத்துக் கொள்ளப்படாது.

அதேவேளையில் கிரிட்டிகல் கவர் உங்களுக்குப் பயனுடையதில்லையா என்று கேட்டால், பதில் தவறு என்பது தான். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அது சில உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலைமைகளான சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், இதய நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்திவிடக்கூடும்.

எனவே குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் கிரிட்டிகல் இல்னெஸ் கவர் பாலிசி என்பது உங்களுக்கு சர்க்கரை நோயினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலைமைகளில் பெருமளவில் நிதி பாதுகாப்பைத் தரும்.

உங்கள் குடும்பம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்றில்லாமல் கிரிட்டிகல் இல்னெஸ் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. கிரிட்டிகல் இல்னெஸ் பெரும்பாலும் எதிர்பாராது ஏற்பட்டுவிடும் என்பதால் நீங்கள் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அதில் கிரிட்டிகல் இல்னெஸ் கவர் உள்பட்டதாகவோ அல்லது கூடுதலாக பிரீமியம் செலுத்தி அந்த கவரைப் பெறுவதோ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உதவும்.

லைப் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி அல்லது ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது உங்கள் குடும்பம் மற்றும் உங்களது மருத்துவ வரலாற்றை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தால் துல்லியமாகக் கணிக்க முடியும்.

உங்களைப் பொருத்தமட்டில் உங்களது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாற்றையும் உங்களது ப்ரீ-எக்ஸிஸ்டிங் அதாவது தற்போதைய உடல்நிலை விவரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். அப்படி இருந்தால் சில நிறுவனங்கள் ப்ரீ-எக்ஸ்சிஸ்டிங் நிபந்தனையுடன் கவரேஜை அளிக்கும். சில நிறுவனங்களால் இந்த வசதியைத் தரமுடியாது.

உங்களுக்கு பாலிசி தரக்கூடிய நிறுவனங்கள் அவற்றின் பாலிசி நிபந்தனைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது மறுக்கப்படக்கூடிய நிபந்தனைகளை படிப்பதன் மூலம் உங்களால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

உங்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ சர்க்கரை நோய் இருந்தால் நீங்கள் டெர்ம் பிளானைத் தேர்ந்தெடுக்கலாம். Diabetic Term Plan Sub 8 HbA1c என்ற ஒரு பிளான் உள்ளது. அதில் இறப்புக்கான கவரேஜ் உள்ளது.

இந்தத் திட்டம் ப்ரீ-டயாபடிக் மற்றும் டைப் 2 டயாபடிக்குடன் HbA1c அளவு 8%க்குள் இருப்பவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 25 ஆண்டுகளுக்கான லைப் இன்ஸ்யூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் HbA1c அளவை சரியாகப் பராமரிக்கும்பட்சத்தில் இந்த சலுகை கிடைக்கும்.

அதேவேளையில் உங்களது பிரீமியத்தில் பாலிசி ஆண்டு முடிவின்போது 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். உங்கள் நிலைமை கவனத்தில் கொண்டு நீங்கள் எடுத்துவைத்துள்ள நடவடிக்கை சரியான வகையில் உள்ளது. தேவையான மற்றும் போதிய பாலிசி கவரேஜ் என்பது நீண்டகாலத்துக்கு உங்களுக்கு நிதி பாதுகாப்பையும் மன அமைதியையும் தரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+