ஆனந்த் ரதி நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு இன்று தொடங்கியுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட நிதி நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஆனந்த் ரதி 660 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை இந்த ஐபிஓ மூலம் திரட்டவுள்ளது.
இன்று தொடங்கியுள்ள பங்கு வெளியீடானது டிசம்பர் 6 அன்று முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் விலை ஒரு பங்கிற்கு 530 - 550 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் 35.32 லட்சம் ஈக்விட்டி பங்குகளை 12 ஆங்கர் முதலீட்டாளார்கள் மூலம், ஒரு பங்கின் விலையானது 550 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது. இதன் மதிப்பு 194 கோடி ரூபாயாகும்.
ஆங்கர் முதலீட்டாளர்கள்
பிஎன்பி பாரிபஸ் ஆர்பிட்ரேஜ், கோல்டுமேன் சாச்சஸ் ஃபண்ட்ஸ், அசோகா இந்தியா ஈக்விட்டி இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், குபேர் இந்தியா ஃபண்ட், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், டாடா மியூச்சுவல் ஃபண்ட்,, ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், உள்ளிட்ட ஆங்கர் முதலீட்டாளர்கள் உள்ளனர்.
பங்குகள் விகிதம்
இந்த பங்கு விற்பனையில் முற்றிலும் புரோமோட்டர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் உள்ள 1.2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. புதிய பங்கு வெளியீடு என்பது இல்லை. இந்த OFS மூலம் ஆனந்த் ரதி ஃபைனான்ஷியல் சர்வீசஸ் 92.85 லட்சம் பங்குகளையும், ஆனந்த ரதி, பிரதீப் குப்தா, சுப்ரியா குப்தா, அமித் ரதி, பிரித்தி குப்தா, சுப்ரியா ரதி, ராவல் ஃபேமிலி டிரஸ்ட் மற்றும் ஃபெரோஸ் அஜீஸ் ஆகியோரால் தலா 3.75 பங்குகள் மற்றும் ஜூகல் மந்திரியின் 90,000 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஊழியர்களுக்கான பங்கு
ஊழியர்களுக்காக இந்த நிறுவனம் 2.5 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஐபிஓவில் லாட் சைஸ் 27 பங்குகளாகும். இதற்காக ஒருவர் 14,850 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
ஒரு சில்லறை முதலீட்டாளார் அதிகபட்சம் 13 லாட்கள் அல்லது 351 பங்குகள், அதாவது 1,93,050 ரூபாய் வரையில் அதிகபட்சம் முதலீடு செய்து கொள்ளலாம்.
எப்போது பட்டியல்
இந்த பங்கு வெளியீட்டின் ஒதுக்கீடானது டிசம்பர் 9 அன்று செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை என்.எஸ்.இ மற்றும் பிஎஸ்இ-ல் டிசம்பர் 14 அன்று பட்டியலிடலாம் என கூறப்படுகிறது.
ஆனந்த் ரதி வெல்த் நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் வாடிக்கையாளர்களுக்கு போர்ட்போலியோக்கள், நிதி சம்பந்தமான திட்டங்கள், நிதி சம்பந்தமான திட்டங்கள் விற்பனை செய்தல், தொழில்நுட்ப விற்பனை உள்ளிட்ட பலவற்றையும் செய்ய திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications