அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, குறிப்பாக தனியார் துறையை சார்ந்த ப்ளூ காலர் ஊழியர்களும், தங்களது ஓய்வுகாலத்தை பற்றி கவலையே வேண்டாம்.
மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம் உங்களது ஓய்வுகாலத்தினை நிம்மதியாக கழிக்க வழி செய்யும், அதுவும் தினசரி வெறும் 7 ரூபாய் நீங்கள் அதற்காக சேமித்தால் போதுமானது.
அரசின் இந்த திட்டமானது தனியார் ஊழியர்களின் மத்தியில் மிக பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். அதெல்லாம் சரி, அப்படி என்ன திட்டம் அது? இதில் யாரெல்லாம் இணையலாம்? வெறும் 7 ரூபாய் மூலம் 60,000 ரூபாய் ஓய்வூதியம் எப்படி சாத்தியம் வாருங்கள் பார்க்கலாம்.
யாரெல்லாம் இணையலாம்?
இன்று நாம் பார்க்கவிருக்கும் திட்டம் அடல் பென்சன் யோஜனா தான். இந்த திட்டத்தின் கீழ், 18 - 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளை அல்லது அஞ்சலகத்தில் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம் .
60 வயதுக்கு பிறகு ஓய்வூதியம்
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
ரூ.60,000 பென்சன்
தினசரி ரூ.7 முதலீடு? 18 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் எனில். தினசரி 7 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பணம் செலுத்த வேண்டிய வருடம் 42 வருடங்களாகும். இதன் மூலம் உங்கள் 61 வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். வருடத்திற்கு 60,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம்.
குறைந்த ஓய்வூதியம்
இதே மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 84 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.
இளம் வயதிலேயே முதலீடு செய்யணும்
எனினும் இந்த திட்டத்தினை பொறுத்தவரையில் இளம் வயதிலேயே முதலீடு செய்ய தொடங்க வேண்டும். ஒரு வேளை 30 வயதில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் எனில், ? 30 வயது எனும்போது நீங்கள் 30 வருடம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் 116 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாய் பென்ஷன் பெறலாம். இதே மாதம் 5000 ரூபாய் பெற 577 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 40 வயது எனில் 1,454 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது தான் உங்கள் 60 வயதுக்கு பிறகு, இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
எவ்வளவு?
ஆக நீங்கள் பெற நினைக்கும் ஓய்வூதியத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது முதல் முறையாக இணைகிறீர்களோ? அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை மாத மாதம் ஆட்டோடெபிட் முறையில் கூட டெபாசிட் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications