மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது சரியானது என்றும் பாதுகாப்பானது என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
அதனால்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டை ஒரு ஃபண்ட் மேனேஜர் நிர்வகிக்க வேண்டிய அவசியம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பங்குச்சந்தை முதலீடு போல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை மட்டும் அறிந்து காத்திருப்பது போன்றது அல்ல. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நமது முதலீட்டை அந்நிறுவனத்தின் ஃபண்ட் மேனேஜர் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று ஆய்வு செய்து அந்த நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்து நமக்கு அதிக வருவாய் தரும் வழிவகைகளை செய்வார்.
ஃபண்ட் மேனேஜர்
எனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், ஃபண்ட் மேனேஜர் என்பதுதான் மிகவும் முக்கியமானது என்பதும் அவர் தான் நமக்கு லாபத்தை தரும் அம்சங்களை ஆய்வு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் முதலீடு செய்யும் பணத்தை சிறந்த செயல்திறனை உருவாக்குவதில், பணத்தை நிர்வகிப்பதில், பணத்தை அதிகமாக பெருக்குவது ஆகியவற்றில் ஃபண்ட் மேனேஜரின் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வருமானம்
லாபகரமான முதலீட்டு திட்டம் எது என்பதை தீர்மானம் செய்து அதில் முதலீடு செய்து நமக்கு சிறப்பான வருமானத்தை கொடுப்பதில் ஒரு ஃபண்ட் மேனேஜர் பணி மிகவும் முக்கியமானதாகும். ஒரு ஆபரேஷன் தியேட்டரில் உள்ள சர்ஜன் போல தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஃபண்டு மேனேஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை
ஒரு ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சை செய்யும் முன் ஒரு சர்ஜன் தனக்கு உதவியாக நர்சுகள், பிற ஊழியர்கள், மயக்க நிபுணர்கள், டாக்டர்கள் ஆகியோர்களை உடன் வைத்திருப்பார். சர்ஜரி செய்யும்போது அவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அதேபோன்றுதான் ஒரு ஃபண்ட் மேனேஜருக்கு உதவியாக ஆராய்ச்சி குழுவினர், ஜூனியர் ஃபண்ட் மேனேஜர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெற்று இருப்பார்கள். அவர்கள் அவ்வப்போது நாம் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தின் தகவல்களை, அறிக்கைகளை பகுப்பாய்வு செய்து ஃபண்ட் மேனேஜருக்கு உதவி செய்வார்கள்.
அனுபவம்
அனுபவம் வாய்ந்த ஒரு ஃபண்ட் மேனேஜர் பல பொருளாதார ஏற்ற இறக்கங்கள், அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களை கடந்து வந்திருப்பார் என்பதால் ஒரு நிறுவனத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் பாசிட்டிவ் அம்சங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் திறன் உடையவராக இருப்பார். நமது முதலீட்டின் செயல்திறனை அதிகரிக்க செய்வார்.
முதலீட்டாளர்
ஒரு சராசரி முதலீட்டாளர் ஃபண்ட் மேனேஜரின் பணியை பகுப்பாய்வு செய்து முதலீட்டை பெருக்குவது என்பது சாத்தியமில்லை என்பதால்தான் ஃபண்ட் மேனேஜர் அந்த வேலையை செய்கிறார் என்பதும் அவரால் மட்டுமே ஒரு ஃபண்டின் செயல்திறன் எப்படி இருக்கும் என்பதை கண்டறிய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வு
எனவே ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கும் ஒரு ஃபண்ட் மேனேஜர் இருப்பார் என்பதும் அவர் வாடிக்கையாளர்களின் முதலீட்டை பலமடங்கு பெறுவதற்கு தேவையான ஆய்வுகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications