நம்மில் வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரின் மனதிலும் ஓடும் ஒரே பயம் - நாளைக்கு வருமானம் நின்றால் என்ன செய்வது? என்பது தான். அரசு வேலை இல்லை என்றால் பென்ஷன் கிடையாது என்ற காலம் போய், இன்று மியூச்சுவல் ஃபண்ட் SIP மற்றும் SWP மூலமாக நீங்களே உங்கள் பென்ஷனை தீர்மானிக்கும் வசதி வந்துவிட்டது. இதன் மூலம் ரிட்டையர் ஆகும் நாளில் கையில் ஒரு பெரிய தொகையை, அதுபோக மாதந்தோறும் உங்கள் வங்கிக் கணக்கில் தானாக வரும் பென்ஷன் என உருவாக்கிக் கொள்ள முடியும். இது வெறும் கனவல்ல. முறையான திட்டமிடல் இருந்தால் சாத்தியம் தான். கூட்டு வட்டி எனும் எட்டாவது அதிசயத்தை பயன்படுத்தி, மிகச் சிறிய தொகையில் தொடங்கி ஒரு மாபெரும் நிதி பேரரசை உருவாக்குவது எப்படி? பணி ஓய்வுக்குப் பின்னும் உங்கள் வாழ்க்கை முறை மாறாமல், கௌரவமான ராஜா வாழ்க்கை வாழ SIP எனும் மேஜிக் உங்களுக்கு எப்படி உதவும் என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்..

முதலீடும் அவசியம்!
பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு காலப் பாதுகாப்பிற்கு, பென்ஷன் (ஓய்வூதியம்) திட்டங்களையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள். குறிப்பாக அரசு ஊழியர்கள். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய, பென்ஷன் வசதியோடு சேர்த்து ஒரு பெரிய கார்ப்பஸ் தொகையை உருவாக்குவதும் சமமான முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிலையான வருமானம் மற்றும் பணி ஓய்வுக்கு பிந்தைய உறுதியான பலன்கள் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு மற்றவர்களை விட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான கூடுதல் வாய்ப்பும் நெகிழ்வுத்தன்மையும் உள்ளது. தங்களின் பென்ஷன் திட்டத்தை பாதிக்காத வகையில், உபரித் தொகையை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் ஒரு மாபெரும் நிதிக் கோட்டையை உருவாக்க முடியும்.
அரசு ஊழியர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் ஏன் அவசியம்?
பென்ஷன் தொகை காலப்போக்கில் பணவீக்கத்தால் அதன் மதிப்பை இழக்கலாம். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அப்படியில்லை. அது பணவீக்கத்தை தாண்டி வருமானம் தரக்கூடியது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் தனியாக ஒரு கார்ப்பஸ் தொகையை உருவாக்கி கொள்ள முடியும். இதன் மூலம் திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள் அல்லது மற்ற செலவுகளையும் சமாளிக்க முடியும். உங்களுடைய மிகப்பெரிய கார்ப்பஸ் தொகையில் இருந்து சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் மூலம் (SWP) அரசு ஊழியராகவே இருந்தாலும் இரண்டாவது பென்ஷனை அரசு பென்ஷனுடன் சேர்த்து பெறலாம். இதே தனியார் ஊழியர்கள் அல்லது சொந்த தொழில் செய்யும் வணிகர்கள், குடும்ப தலைவிகள் என அனைவரும் பென்ஷனை பெற முடியும்.
உதாரணத்திற்கு மாதம் 25,000 ரூபாய் எஸ் ஐ பி மூலம், வருடத்திற்கு 10% ஸ்டெப் அப் உடன் முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாக கணக்கிட்டால், 30 ஆண்டுகள் கழித்து, மொத்த கார்ப்பஸ் தொகையானது 19,96,44,407 ரூபாயாக இருக்கும். இங்கு நீங்க செய்த மொத்த முதலீடு 4,93,48,207 ரூபாயாகும். இதற்கு கிடைக்கும் வட்டி வருமானம் 15,02,6,200 ரூபாயாகும்.
மேற்கண்ட 19 கோடி ரூபாய்க்கும் மேலான கார்ப்பஸில் 10 கோடி ரூபாயை, அடுத்த 20 ஆண்டுகளுக்கு பணவீக்கத்திற்கு ஏற்ப வருமானம் கொடுக்கும் விதமாக, 8% வருமானம் கிடைக்கும் விதமாக எஸ்.டபள்யூ.பி செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மூலம் மாதம் 5,29,264 ரூபாய் வருமானம் பெற முடியும். இதன் மூலம் 20 ஆண்டுகளில் மொத்தம் 23,36,31,546 கோடி ரூபாயை திரும்ப பெற்றிருப்பீர்கள். அதோடு இறுதி தொகையாக 18 கோடி ரூபாய்க்கு மேல் கைவசம் இருக்கும். ஏற்கனவே மேற்கண்ட 9 கோடியில் மீதமிருக்கும் கார்ப்பஸ் தொகையை வங்கி வைப்பு நிதியில் போட்டு வைத்திருந்தால் கூட, அதுவும் கணிசமான தொகையாய வளர்ந்து நிற்கும். இது உங்களுடைய அடுத்த தலைமுறைக்கும் சிறந்த நிதி சொத்தாக வளர்ந்து நிற்கும். ஆக சரியான ஆலோசனையுடன் திட்டமிட்டு முதலீடு செய்தால் நிச்சயம் பென்ஷனுடன், வங்கி கணக்கில் பணமும் வந்து சேரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications