ஏழ்மையில் இருந்து பெரும் பணக்காரராக உயர்ந்தவரும், அதேபோல் பணக்காரராக இருந்து ஏழ்மை நிலைக்கு வந்தவரும் ஓரே விஷயத்தில் தான் முரண்படுகிறார்கள், அது தான் நிதி ஆரோக்கியம். ஒருவர் தன்னிடம் இருக்கும் நிதி ஆதாரத்தை எப்படிக் கையாளுகிறார் என்பதில் தான் அவருடைய வளர்ச்சி அமையும்.
எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி, வாய் பேச்சில் எவ்வளவு வல்லமையாக இருந்தாலும் சரி, நிதி ஆதாரத்தைச் சரியாகக் கையாளாமல் இருந்தால் வீழ்ச்சி நிச்சயம். இன்றைய வாழ்க்கை முறையில் கடன் இல்லாமல் இருக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும், எதற்காகக் கடன் வாங்குகிறோம் என்பதில் பெரிய வித்தியாசம் உள்ளது.

இந்த நிலையில் ஒருவர் கடன் சுழல் எனப்படும் Debt Trap-ல் சிக்கிவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது சாதாரணக் காரியமில்லை. இத்தகைய நிலையை அடைந்த 10ல் 6 பேர் பெரும் நிதிநெருக்கடிக்கு ஆளாவது நிச்சயம்.
சரி நீங்க டெபிட் டிராப் என்படும் கடன் சுழலில் சிக்கியிருக்கிறீர்களா..? இதை நீங்களே செக் செய்துகொள்ள 10 பாயின்ட்-ஐ முதலீட்டு வல்லுனரான ராஜேஷ் வகுத்துள்ளார். கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றையோ அல்லது பலவற்றையோ நீங்கள் செய்தால் கடன் சூழலில் சிக்கி இருக்கிறீர்கள் என்று பொருள், நீங்களே கையில் விரலைவிட்டுக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
1. உங்களது மொத்த மாதாந்திர EMI தொகையில் உங்கள் மொத்த வருமானத்தில் 50% க்கு மேல் இருந்தால் நீங்கள் டெபிட் டிராப்-ல் சிக்கியுள்ளீர்கள் என்பது பொருள்.
2. மாதாந்திர செலவுகள் (EMI தொகை + வீட்டுச் செலவுகள்) உங்களது வருமானத்தில் 70% க்கு மேல் இருந்தால் நீங்கள் டெபிட் டிராப்-ல் சிக்கியுள்ளீர்கள் என்பது பொருள்.
3. உங்களது அன்றாடச் செலவுகள் உதாரணமாகக் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், சுற்றுலா போன்றவற்றிற்குக் கடன் வாங்கினால் நீங்கள் டெபிட் டிராப்-ல் சிக்கியுள்ளீர்கள் என்பது பொருள். கல்லூரி கட்டணம் இதில் சேர்க்க வேண்டாம்.
4. ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குகிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் டெபிட் டிராப்-ல் சிக்கியுள்ளீர்கள்.
5. Credit கார்டில் பணம் வித்டிரா செய்தீர்கள் என்றால் கட்டாயம் நீங்கள் டெபிட் டிராப்-ல் சிக்கியுள்ளீர்கள் என்பது உறுதி. கிரெடிட் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் தெரியும் இதற்கு எவ்வளவு வட்டி வரும் என்பது, இதையும் தாண்டி செலவுகளுக்காக வேறு வழி இல்லாமல் வித்டிரா செய்தால் மோசமான நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.
6. உங்கள் கிரெடிட் கார்ட் அவுட்ஸ்டேன்டிங் தொகையை மாதா மாதம் முழுமையாகச் செலுத்தாமல் மினிமம் பேலன்ஸ் மட்டுமே செலுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பது பெரிய டெபிட் டிராப். கிரெடிட் கார்ட் பெரும் தலைவலி என்பது தெரிந்தும் பயன்படுத்துவோர், மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் அறிவுறுத்தப்படுகிறது.
7. உங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுத்தால் நீங்கள் டெபிட் டிராப்-ல் சிக்கியுள்ளீர்கள் என்பது பொருள். உங்களது மாதாந்திர EMI, மொத்த வருமானத்தில் 50% க்கு மேல் இருந்தால் வங்கிகள் கடன் தர மறுத்துவிடுவார்கள். வங்கிகள் தரவில்லையென்று NBFC க்கு சென்று கடன் கேட்டால் வட்டி 13% க்கு மேல் வட்டி இருக்கும். அதிலும் கிடைக்கவில்லையென்றால் app களில் கடன் வாங்க முற்படுவீர்கள். இது அனைத்தும் தவறான செயல்கள்.
8. ஒவ்வொரு மாதமும் வரும் பில்களை அந்த மாதம் செலுத்தாமல் தாமதித்தாலோ அல்லது கட்டவில்லையென்றாலோ நீங்கள் டெபிட் டிராப்-ல் சிக்கியுள்ளீர்கள் என்பது உறுதி.
9. நாளை வரப்போகும் வருமானத்தை வைத்து, இன்றே கடன் வாங்குவது. உதாரணமாக, நான்கு மாதங்கள் கழித்து உங்களுக்குப் போனஸ் தொகை ௹2,50,000 வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அதற்குக் காத்திருக்காமல், இந்த மாதமே “அதான் நாலு மாசம் கழித்து வருதே, அத வச்சி அடைச்சிடலாம்” என்று நினைத்து கடன் வாங்கிச் செலவு செய்வது.
10. அதிகரித்து வரும் வட்டி விகிதங்களைச் சமாளிக்க முடியாமல் திணறுவது. அதற்குப் பணமில்லாமல் தவிப்பதும் நீங்கள் டெபிட் டிராப்-ல் சிக்கியுள்ளீர்கள் என்பதை உணர்த்துகிறது.
10ல் நீங்கள் எத்தனை மார்க் வாங்கியுள்ளீர்கள் என்பத கமெண்ட் செய்யவும். 10க்கு 0 என்றால் உங்களுக்கு நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள், மேலும் நீங்கள் உங்கள் எதிர்காலத்தைச் செழிப்பாக்க பெரும் முதலீடுகளைச் செய்யலாம்.
அதற்கு முன்பு 3 முதல் 6 மாதத்திற்கான சேமிப்பு ரெடி செய்துகொண்டு, நீங்கள் செய்யும் முதலீட்டுக்கான ரிஸ்க் அளவை ஆய்வு செய்து முதலீட்டில் இறங்குவது சிறந்தது. கடன் சூழலில் சிக்கித் தவிக்கும் மக்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நினைத்தால், அதற்கு இரண்டே வழிகள் தான். 1. வருமானத்தை உயர்த்துங்கள்.
2. செலவுகளைக் குறையுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications