பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முடிவு செய்வதற்கு முன்பாக உங்களது ஓய்வூதியப் பலன்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பணிஓய்வு தொகுப்பு என்பது நீங்கள் 45 வயதில் ஓய்வு பெறும்போது உங்களிடம் உள்ள முதலீடு நிதி ஆகும்.
இதை வைத்துதான் உங்களது குடும்பச் செலவு, வாழ்க்கைமுறை, மருத்துவம், பயணச் செலவு ஆகியவற்றை சமாளிக்க வேண்டியதிருக்கும். இவை தவிர வரிவிதிப்பு மற்றும் பணவீக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இந்தத் தொகுப்பு நீங்களும் உங்கள் மனைவியும் 90 வயது வாழும்வரை போதும் அளவுக்கு தாராளமாக இருக்க வேண்டும்.
முதல் படி என்னவென்றால் நீங்கள் 45 வயதை எட்டியிருக்கும்போது ஆகக் கூடிய செலவீனங்களை கணக்கிட வேண்டும். 6-7 சதவீதம் பணவீக்கம் என 90 வயதுவரை மதிப்பிட வேண்டும். இதனடிப்படையில் செலவீனத்தை அறிய வேண்டும்.
எதிர்கால செலவை வரிக்குப் பிந்தைய பிக்ஸடு டெப்பாசிட் வரி விதிப்புடன் கழிக்க வேண்டும். இதுதான் பணிஓய்வு தொகுப்பு.
எடுத்துக்காட்டாக பார்க்கலாம். உங்களது மாதாந்திர செலவு ரூ.75,000 என்றிருந்தால் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் ஆகும். இது 6 சதவீதம் பணவீக்கத்தை சந்தித்தால் ரூ.21.5 லட்சமாக உயரும்.
இந்த மதிப்பு அடுத்த 45 ஆண்டுகளுக்குத் தொடரும். இந்தத் தொகையை நாம் பிக்ஸட் டெப்பாசிட் வரி விகிதமான 6 சதவீத்துடன் கழிக்க வேண்டும். இதற்கு உங்களுடைய பணிஓய்வு தொகுப்பு ரூ.9.5 கோடியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் சாதாரண வட்டி உயர்வு இருப்பதாக கணக்கிடலாம். இதை 15 ஆண்டுகளில் எட்டுவதற்கு உங்களுக்கு ரூ.2.30 லட்சம் மாதாந்தோறும் தேவைப்படுகிறது. இது 10 சதவீத சாதாரண வட்டி உயர்வு எனக் கணக்கிட வேண்டும். இப்போது உங்களுடைய இலக்கு சேமிப்பை அடைய முடியாது. எனவே இ்த தொகுப்பை மீண்டும் கணித்து செலவுகளை ஓய்வு வயதின்போது கூட்டவோ குறைக்கவோ செய்ய வேண்டும்.
இது சற்று டெக்னிக்கலானதும் சிக்கலானதும் கூட. நீங்கள் பின்னோக்கி கணக்கிட்டு இந்த பணிஓய்வு தொகுப்பை 15 ஆண்டுகளுக்கு பெறுவதற்கு முடிவு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் உங்களது ஓய்வுக்குப் பிந்தைய செலவுகளை அட்ஜஸ்ட் செய்து உங்களது லைப்ஸ்டைலை மாற்றி கூடுதலாக சேமிக்க வேண்டும். பங்கு மற்றும் கடன் போன்ற முதலீடுகளை செய்தாலும் உங்களது பணிஓய்வு தொகுப்பை எட்டும் அளவுக்கு மாதாந்திர சேமிப்பை செய்ய வேண்டும். அதற்கு சில ரிஸ்குகளை எடுக்க வேண்டியிருக்கும்.
இது ஒரு நீண்ட கால இலக்கு என்பதால் பங்குகள் மற்றும் கடனில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாகும். மேலும் இது உங்களது மாதாந்திர முதலீடை குறைக்கும். ஞாபகமிருக்கட்டும் உங்களது ஓய்வு இலக்குகள் அதிகளவில் மாறுபடலாம். எனவே விதிகள் எல்லாம் சில குறிப்பிட்ட மக்களுக்கே பொருந்தும்.
வரிவிதிப்பு மற்றும் பணவீக்கத்துடன் தொடர்பிருப்பதால் உங்களது வருவாய் மற்றும் செலவுகளும் மாறுபடலாம். உங்களது திட்டத்தை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பணிஓய்வு திட்டம் சற்று சிக்கலானது என்பதால் இதற்காக தகுந்த புரோபஷனல்கள் நிதி திட்டமிடுபவர்களின் உதவியை அணுகுவது நல்லது.


Click it and Unblock the Notifications