வயதாக வயதாக ஒவ்வொரு தனி நபருக்கும் பிற்காலத்தில் யாரிடமும் கையேந்தி வாழக்கூடாது என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கிறது. முன்பெல்லாம் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின் அதற்கான பென்ஷன் வழங்கப்படும். ஆனால் இப்போது சில அரசு ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில் கூலித்தொழில் செய்யும் நபர்கள் முதல் சுய தொழில் செய்பவர்கள் வரை ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அதற்காக இந்திய அரசு ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அந்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana - APY). APY திட்டம் மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. 2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் 21-ஆம் தேதி நிலவரப்படி கிட்டத்தட்ட 9 கோடிக்கும் அதிகமான நபர்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைந்துள்ளனர்.
9 கோடி என்றால் யோசித்துப் பாருங்கள்! மக்களிடம் தங்கள் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கத் தொடங்கியதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சம் என்ன?: வயதான காலத்தில் நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் டென்ஷனாக 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பெற முடியும்.
எப்படி பயன் பெறுவது?: ஒருவர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் பென்ஷன் பெற வேண்டும் என்றால் அதற்கு முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். பின்னர் அந்த நபர் தன்னுடைய 60-வது வயதிலிருந்து தொடர்ந்து மாதா மாதம் பென்ஷன் பெறலாம்.
பென்ஷன் தொகை 1,000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து இருக்கும். அதாவது நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ? அவ்வளவு குறைவாக உங்களுடைய மாதாந்திர பங்களிப்பு இருக்கும். உதாரணமாக இளம் முதலீட்டாளர்கள் குறைவான தொகையை முதலீடு செய்து பிற்காலத்தில் அதிகபட்ச பென்ஷன் பெற முடியும். ஏனெனில் இளம் முதலீட்டாளர்கள் என்றால் அவர்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வார்கள். நீண்ட காலம் என்று சொல்லும் போது சிறுக சிறுக முதலீடு செய்தாலே போதுமானது.
யாரெல்லாம் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணையலாம்?: APY திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் இணையலாம். இதற்கு கண்டிப்பாக வங்கி கணக்கு அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கு அவசியம். இந்தத் திட்டத்தில் நீங்கள் இணையும்போதே ஆட்டோ டெபிட் வசதியை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதாவது உங்களுடைய பணம் ஒவ்வொரு மாதமும் தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.
எவ்வளவு பங்களிப்பு செய்ய வேண்டும்?: உங்களுக்கு எவ்வளவு பென்ஷன் வேண்டும் என்பதை பொறுத்து இதில் நீங்கள் பங்களிப்பு செய்யலாம். உதாரணமாக கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள்.

நீங்கள் உங்களுடைய 18-வது வயதில் முதலீடு செய்ய தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதிலிருந்து தொடர்ந்து 42-வது வயது வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். APY திட்டத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் 3 பிரிவாக முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்தால் மாதத்திற்கு 42 ரூபாய் செலுத்த வேண்டும். 18 வயதுடைய ஒருவர் 42 ரூபாய் செலுத்திக்கொண்டே வருகிறார். இதை தொடர்ந்து அவருடைய 42-வது வயது வரைக்கும் செய்கிறார் என்றால் அவருடைய 60-வது வயதில் அந்த நபர் மாதம் 1000 ரூபாய் பென்ஷன் பெறுவார். இதில் இவர் செய்த மொத்த முதலீடு 1.7 லட்சமாக இருக்கும்.
அதுவே 18 வயதுடைய நபர் மாதம் 84 ரூபாய் செலுத்தி வருகிறார் என்றால் தன்னுடைய 42-வது வயதில் ரூ. 3.4 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். அப்போது அவருக்கு மாதம் பென்ஷனாக 2000 ரூபாய் வரையில் கிடைக்கும்.
அதைவிட அதிகமான பென்ஷன் வேண்டும் என்றால் மாதம் 126 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அப்படி முதலீடு செய்யும் போது தன்னுடைய 42 வயதில் மொத்தமாக ரூ.5.1 லட்சத்தை அந்த நபர் முதலீடு செய்திருப்பார். அப்படியானால் அவர் 60-வது வயதில் 3000 ரூபாயை பென்ஷனாக பெறுவார்.
இன்னும் அதிகமான பென்ஷன் 4000 ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால் மாதம் 168 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் அந்த நபர் தன்னுடைய 42-வது வயதில் ரூ.6.8 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். அதன் பின் அறுபதாவது வயதிலிருந்து அந்த நபர் 4,000 ரூபாய் பென்ஷன் பெறுவார்.
APY திட்டத்தின் அதிகபட்ச பென்ஷன் வேண்டும் என்று நினைத்தால் 18 வயதுடைய ஒருவர் மாத மாதம் ரூ. 210 முதலீடு செய்ய வேண்டும். மாதம் 210 ரூபாய் என்றால் தினமும் 7 ரூபாய் சேமிக்க வேண்டும். அப்படி முதலீடு செய்தால் 42-வது வயதில் அவர் ரூ.8.5 லட்சத்தை தொடர்ந்து முதலீடு செய்திருப்பார். இதன் மூலம் பென்ஷனாக 5000 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய வயது அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டு தொகையும் சற்று அதிகரிக்கும்.
அட்டவணையில் உங்களுடைய வயது என்ன? என்பதை தெரிந்து கொண்டு மாதாந்திர பங்களிப்பு எவ்வளவு செய்ய வேண்டும்? என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். சிறு வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இது போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற திட்டம் உத்தரவாதமான பென்ஷனை வழங்கும்.


Click it and Unblock the Notifications