உலகளவில் வளர்ச்சி கண்டு வரும் முன்னணி பொருளாதார நாடாக இந்திய பொருளாதாரம் திகழ்கிறது. 2026ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதன் மூலம் வலுவான வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சியின் இந்தியா மையப்புள்ளியாக மாறியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2023ஆம் நிதியாண்டில் மட்டும் வெளிநாட்டு முதலீடு வாயிலாக 112 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. உலகளாவிய பொருளாதார சந்தை மாற்றம் கண்டு வரும் நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கவனம் இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையை நோக்கி திரும்பியுள்ளது.

வெளிநாடு இந்தியர்களுக்கு இங்குள்ள ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன, அவர்கள் எவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டி இது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏன் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய வேண்டும்?: வேகமாக வளர்ச்சி வாய்ப்புகள் உடன் மாறும் தன்மையுடன் இருக்கும் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில், முதலீட்டாளர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்குகிறது.
எனவே இந்திய ரியல் எஸ்டேட் துறையின் தனித்துவமனான அம்சங்கள் நன்கு அறிந்து கொள்வது அவசியம். பெருநகரங்களை ஆக்கிரமித்து வரும் குடியிருப்புகள் முதல் தொடர்ந்து வளர்ந்து வரும் வணிக நகரங்கள் வரை நாம் நாட்டை போல பரந்து விரிந்த ஒரு துறை தான் ரியஸ் எஸ்டேட்.
இதனால் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆற்றல்மிக்க துறையில் முதலீடு செய்வதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கவனம் திரும்பியுள்ளது.
நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) போன்ற பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள் மீதான நம்பிக்கை நீடித்தாலும் , வணிகம் சார்ந்த ரியல் எஸ்டேட் துறை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற தொடங்கியுள்ளது.
வாடகை வருமானம் உயர்வு, சாதகமான அரசு கொள்கைகள், சொந்த நாட்டுடன் உணர்வு ரீதியான தொடர்பு மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் மீள் தன்மை ஆகிய காரணிகளால் 2024ஆம் ஆண்டில் வளர்ச்சி காணும் துறை என்ற எதிர்ப்பார்ப்பை தக்க வைத்துள்ளது.
எனவே வெளிநாடு வாழ் இந்தியர்களின் இத்துறையின் மீது முதலீட்டை குவிப்பதற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கான மையமாக தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்த நகரங்களில் வாடகை வருமானம் உயர்வது மட்டுமல்லாமல் சொத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் உள்ளூர் சந்தை நிலவரம், அரசின் ஒழுங்குமுறை அறிவிப்புகள், மக்களின் போக்கு ஆகியவற்றை புரிந்து கொண்டு அதனடிப்படையில் முதலீட்டு முடிவை எடுப்பது முக்கியம்.
NRIக்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முடியுமா?: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்ற தவறான கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் இது உண்மை இல்லை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தில் (FEMA) சுட்டிக்காட்டப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து, இந்தியாவில் முதலீடு செய்து கூடுதல் வருவாயை ஈட்டலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இங்கே செயல்படும் முதலீட்டு தளங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை இதற்கு பெரும் தடையாக இருந்தது.
2024ஆம் ஆண்டை பொறுத்தவரை முதலீட்டு செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென மையப்படுத்தப்பட்ட தளங்கள் தோன்றியிருப்பது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
அது மட்டுமின்றி, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் முதலீட்டாளர்கள் நலனை பாதுகாக்கவும் அரசு சமீப காலமாக பல்வேறு ஒழுங்குமுறைகளை கொண்டு வந்துள்ளது. ரியல் எஸ்டேட் சட்டம் மற்றும் ரியஸ் எஸ்டேட் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை புரிந்து கொண்டு சட்டத்திற்கு இணங்கி வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்வதற்கு முன் தொழில்முறை ஆலோசனையை பெறுவதும் கட்டாயமாகும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நிதி வாய்ப்புகள்: கரன்சி மாற்று விகிதங்கள், வரிவிதிப்பு மற்றும் சட்ட ரீதியான ஒழுங்குமுறைகளை கவனமாக கருத்தில் கொண்டு தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
நிதி தொடர்பாக இந்திய வங்கிகளில் இருந்து வீட்டு கடன்கள், வெளிநாட்டு வணிகக் கடன்கள் (ECB) மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய வங்கி கணக்குகள் (NRE or NRO) உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை ஆய்வு செய்யலாம். தனிப்பட்ட நிதி இலக்குகளின் அடிப்படையில் , அதில் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளை ஆய்வு செய்து, உங்களுக்கான நிதி வாய்ப்புகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இந்திய ரியல் எஸ்டேட் துறை மீது ஆர்வம் அதிகரிப்பது ஏன்?: வெளிநாடு வாழ் இந்தியர்கள், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதில் தங்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளனர். இதற்கு, முக்கிய உலகளாவிய கரன்சிகளுக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது மற்றும் இந்தியாவின் நிலையான பொருளாதாரம் ஆகியவை காரணமாக அமைந்துள்ளன. இதற்கு ஏற்ப, வெளிநாட்டில் இருந்தபடியே சொத்துக்களை மேலாண்மை செய்ய ப்ராப் டெக் தளங்கள் ஏற்படுத்தி தரும் வசதிகளும் முக்கிய காரணியாகும்.
தொழில்நுட்பங்களின் உதவியால் சொத்து மேலாண்மை என்பது எளிதாகி உள்ளது. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் தைரியமாக முதலீடு செய்யும் துறையாக ரியல் எஸ்டேட் மாறியுள்ளது. வானளாவிய நகர்ப்புற கட்டடங்கள், கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளின் வளர்ச்சி என அனைத்துமே பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன.
இதற்கு ஸ்மார்ட் நகரங்கள், அனைவருக்கும் வீட்டு வசதி போன்ற அரசின் முன்முயற்சிகளும் காரணம். எனவே வளர்ந்து வரும் பகுதிகளை தேர்வு செய்து அங்கு முதலீடு செய்தால், விரைவிலேயே அதன் பலனை அனுபவிக்கலாம்.
ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வாய்ப்புகள்: இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை விரிவாகி வருகிறது . ஆனால் கட்டுமான செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார பிரச்னைகள் உள்ளிட்ட சவால்களையும் இத்துறை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களை வெல்ல, புதுமையான தீர்வுகள், குறைந்த செலவிலான கட்டுமான முறைகள் மற்றும் சந்தை இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதலை பயன்படுத்த வேண்டும்.
சொத்து பரிவர்த்தனை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளன. எனவே ரியல் எஸ்டேட் நிபுணர்கள், தங்கள் எல்லையை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
ரியல் எஸ்டேட் துறையின் எதிர்காலம்: இந்திய ரியல் எஸ்டேட் துறையின் எதிர்காலம் என்பது பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை, சாதகமான கொள்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றால் மிகச்சிறந்த காலத்தில் இருக்கிறது.
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் இருப்பதால், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்பும் இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்காற்றும் வாய்ப்பை பெறுகின்றனர். நீண்ட கால வளர்ச்சி கொண்ட முதலீட்டு வாய்ப்புகளை தேடி வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறை மிகச்சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
More From GoodReturns

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications