சென்னை: இன்றெல்லாம் அனைவரிடத்திலும் கிரெடிட் கார்டுகள் உள்ளன. கிரெடிட் கார்டு நம் அன்றாட செலவுகளைச் செய்வதில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஆனால் கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன்பு, எப்படி கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுத்தால் பணத்தைச் சேமிக்க முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன்பு, நீங்கள் செய்யக் கூடாத தவறுகளைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
பல கிரெடிட் கார்டுகள் வழங்குநரும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக சில சலுகைகளை வழங்கி வருகின்றனர். இதனால் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு ஒரு குழப்பமான விஷயமாக இருக்கலாம். கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்யும்போது, நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, உங்களுடைய செலவு பழக்க வழக்கங்களைப் பார்த்து, அதற்கேற்ப கார்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். எனவே, உங்களுக்கு உதவும் வகையில், நீங்கள் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது செய்யக்கூடாத சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் செலவு பழக்க வழக்கங்கள் பற்றி தெரியாமல் இருத்தல்: பெரும்பாலான மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, தங்கள் செலவு பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளாமல் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பது தான். ஒவ்வொரு கிரெடிட் கார்டு வகைகளும் மாறுபடுகின்றன. சான்றாக உணவு, பயணம், மளிகை பொருட்கள், எரிபொருள் போன்ற செலவு வகைகளுக்கு ஏற்றவாறு நன்மைகளை வழங்குகின்றன.
நீங்கள் எதற்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலவு செய்ய இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள, கடந்த சில மாதங்களில் உங்களுடைய செலவுகளை மதிப்பாய்வு செய்யுங்கள். ரிவார்டுகள் மற்றும் பலன்களை அதிகரிக்க உங்கள் செலவு பழக்கவழக்கங்களுடன் ஒத்துப் போகும் கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யுங்கள்.
வருடாந்திர கட்டணத்தைப் பற்றித் தெரியாமல் இருப்பது: கிரெடிட் கார்டுகள், பெரும்பாலும் வருடாந்திர கட்டணங்களுடன் வருகின்றன. இது கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் பொறுத்து மாறுபடும். எனவே குறைந்த அளவில் வருடாந்திரக் கட்டணத்தை வசூலிக்கும் கிரெடிட் கார்டு வழங்குநர்களைத் தேர்வு செய்யவும். இது உங்கள் பணத்தைச் சேமிக்க உதவும்.
வட்டி விகிதங்களைக் கவனிக்காமல் இருப்பது: கிரெடிட் கார்டுகளுக்கு பொதுவாகவே வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக உங்கள் பில்களைச் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் போது. கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, அதன் வட்டி விகிதங்களைப் பார்த்து தேர்வு செய்யுங்கள்.
கிரெடிட் கார்டை பெறுவதற்கு முன்பு, அவர்கள் கொடுக்கும் ரிவார்டு மற்றும் பலன்களில் மட்டுமே கவனம் செலுத்தும் போது, வட்டி விகிதங்களைப் பலர் கவனிப்பதில்லை. எனவே, காலப்போக்கில் உங்களுடைய வட்டி விகிதங்களைச் சேமிக்க குறைந்த APR (Annual Percentage Rate) கொண்டக் கார்டைத் தேர்வு செய்யவும்.
ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளைப் பெற விண்ணப்பித்தல்: ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. பல கார்டுகளுக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பது, உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். மேலும், நீங்கள் அதிக வட்டியுடன் திருப்பிச் செலுத்த நேரிடலாம். எனவே, ஆரோக்கியமான கடன் விவரத்தை பராமரிக்க, உங்கள் நிதி இலக்குகளுடன் கூடிய ஏதேனும் ஒரு கார்டைத் தேர்வு செய்யுங்கள்.
பாதுகாப்பு அம்சங்களை ஆராயாமல் இருப்பது: இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில், கிரெடிட் கார்டு தொடர்பான மோசடிகள் அதிகரித்துள்ளன. EMV சிப் தொழில்நுட்பம், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான அங்கீகாரம் பெற்ற இணையதளங்கள் அல்லது செயலிகள் உள்ளதா என்ற விவரங்களை ஆராயவும். கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு கிரெடிட் கார்டு வழங்குபவர்களின் பாதுகாப்பு கொள்கைகள் குறித்துத் தெரிந்து கொள்ளவும்.
ஃபைன் மற்றும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது: கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் முன், கட்டணங்களில் உள்ள வட்டி விகிதங்கள் மற்றும் அபராதங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் வெளிநாட்டு பண பரிவர்த்தனைக்கான கட்டணம் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் சர்வதேச அளவில் அடிக்கடி பயணம் செய்தால், இது போன்ற நுணுக்கங்களைப் புரிந்து கொள்வது உதவியாகவும் உங்கள் கார்டைத் திறம்பட நிர்வகிக்கவும் உதவும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications