நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் வங்கி ஆக்சிஸ் வங்கி. இதுவரை ஆக்சிஸ் வங்கியில் பிக்சட் டெபாசிட் (எஃப்டி) தொடங்குவதற்கு முதலில் அந்த வங்கியின் சேமிப்பு கணக்குக்கு நிதியை மாற்ற வேண்டும். ஆனால் தற்போது ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அதன் மொபைல் செயலி மூலம் மிக எளிதாக பிக்சட் டெபாசிட்டை திறக்க உதவும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் வாடிக்கையாளர் எந்த வங்கியிலிருந்தும் நேரடியாக ஆக்சிஸ் வங்கியின் எஃப்டியில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
பிக்சட் டெபாசிட்டை திறப்பதற்கான செயல்முறையை ஆக்சிஸ் வங்கி முழுமையாக டிஜிட்டல் ஆகியுள்ளது. எனவே, செல்லுபடியாகும் கேஒய்சி உள்ள ஆக்சிஸ் வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் யுபிஐ அல்லது நெட் பேங்கிங் வழியாக தங்களது பிற வங்கி கணக்கிலிருந்து ஆக்சிஸ் வங்கிக்கு பணத்தை நேரடியாக மாற்றிக் கொள்ளலாம். பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்ததும், ஆக்சிஸ் வங்கி எஃப்டி பதிவை தானாகவே செயல்படுத்துகிறது. பணம் பெறுபவரின் பெயரை சேர்ப்பது மற்றும் தனி எஃப்டி தொடங்குவதற்கான செயல்கள் போன்ற எதுவும் தேவையில்லை.

யுபிஐ ஆப்பை பயன்படுத்தி ஆக்சிஸ் வங்கியில் எஃப்டியை எவ்வாறு பதிவு செய்வது?
ஸ்டெப் 1: ஆக்சிஸ் பேங்க் மொபைல் செயலியை லாக்இன் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: பிக்சட் டெபாசிட்டுக்கு செல்லவும்.
ஸ்டெப் 3: பேமெண்ட்ஸ் பக்கத்தில் யுபிஐ உடன் பதிவு செய் என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: எஃப்டி விவரங்களை நிரப்பவும்.
ஸ்டெப் 5: கீழே உள்ள எளிதான 2 ஸ்டெப்களை மேற்கொண்டு உங்களுக்கு விருப்பமான யுபிஐ ஆப்பை பயன்படுத்தி யுபிஐ வழியாக எஃப்டிக்கு பணம் செலுத்தவும்.
ஸ்டெப் 6: கிடைக்கக்கூடிய யுபிஐ பேமெண்ட் தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 7: யுபிஐ ஐடியை உள்ளிட்டு, யுபிஐ பயன்பாட்டுக்கு மாறி பேமெண்ட் செயல்முறையை முடிக்க வேண்டும்.
நெட் பேங்கினை பயன்படுத்தி ஆக்சிஸ் வங்கியில் எஃப்டியை எவ்வாறு பதிவு செய்வது?..
ஸ்டெப் 1: ஆக்சிஸ் பேங்க் மொபைல் செயலியை லாக்இன் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: பிக்சட் டெபாசிட்டுக்கு செல்லவும்.
ஸ்டெப் 3: பேமெண்ட்ஸ் பக்கத்தில் நெட் பேங்கிங் டேப்பை பதிவு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: உங்கள் இணைக்கப்பட்ட கணக்கு அல்லது வேறு எந்த வங்கி கணக்கை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்பெட் 5: நீங்கள் தேர்ந்தெடுத்த வங்கியின் நெட் பேங்கிங் செயல்முறை மூலம் பணம் செலுத்தலாம்.
ஆக்சிஸ் வங்கி பொது குடிமக்களுக்கு ரூ.3 கோடிக்கு குறைவான 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு கெண்ட பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 3 முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ரூ.3 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
Story Written By: Subramanian


Click it and Unblock the Notifications